SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமம் காக்கும் ‘ஆளி விதை’

2019-10-30@ 11:12:16

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும், எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds).  ‘ஃப்ளேக் சீட்ஸ்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்றும் அர்த்தம் உண்டு.

உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக  உலக அளவில் கருதப்படும் உணவு இது. பழங்கால எகிப்து, சீனாவில் அதிகம் பயிரிடப்பட்டது. ஃப்ளேக்ஸ் சீட்சின் மகத்துவத்தை ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் விளக்குகிறார்… இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இப்போது இதை கஞ்சி, போரிட்ஜ்களில் சேர்த்து பரவலாக உபயோகிக்கிறார்கள்.

100 கிராம் ஃப்ளேக் சீட்ஸில் இருக்கும் ஊட்டச்சத்து அளவு

புரதச்சத்து - 18 கிராம்
கொழுப்பு - 42 கிராம்
நார்ச்சத்து- 27 கிராம்
மாவுச்சத்து - 28.9 கிராம்
கலோரிகள்- 530  கி.கலோரிகள்
நிறைவுற்ற கொழுப்பு -  3.7 கிராம்
பாலிநிறைவுறா கொழுப்பு - 29 கிராம்
மோனோநிறைவுறா கொழுப்பு - 8 கிராம்
கொலஸ்ட்ரால் - 0
சோடியம் - 30 மிலிகிராம்
பொட்டாசியம் - 813 மிலிகிராம்.
கார்போஹைட்ரேட் - 29 கிராம்
சர்க்கரை - 1.6 கிராம்

ஆளி விதைகளில் உள்ள முக்கிய பயோஆக்டிவ் சேர்மங்களை பார்த்தால், ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), லிக்னான்கள் மற்றும் ஃபைபர் ஆகியவை அடங்கும். இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ), தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.

நமது ஆரோக்கியத்தில் ஆளி விதையின் பங்கு

 இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து.
ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்’ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு. தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில், முழு ஃப்ளேக் சீட்ஸ் ,  ஃப்ளேக்  சீட் பவுடர், ஃப்ளேக் சீட்ஸ் ஆயில் மற்றும் ஃப்ளேக் சீட் மீல் என நான்கு வடிவங்களில் கிடைக்கின்றன.  அதோடு புதிதாக பாலுக்கு மாற்றான ஆல்மன்ட் மில்க், கோட் மில்க் போல ஃப்ளேக் மில்க்கும் கடைகளில் வந்திருக்கிறது. ஃப்ளேக்ஸ் சீட் மில்க்கில் ஆல்ஃபா லினோலிக் அமிலம் (ALA) மிகுந்துள்ளது. மாட்டுப்பாலில் உள்ளது போல் லேக்டோஸ் மற்றும் கொழுப்பு இதில் இல்லை.

பாதாம் மற்றும் சோயா பால் அலர்ஜி இருப்பவர்கள் அவற்றுக்கு மாற்றாக இந்தப் பாலை உபயோகிக்கலாம். ஆளி விதையை ஸ்நாக்ஸ்பார், மஃபின்ஸ், பிரட், பன், பிஸ்கட் மற்றும் சினமன் ரோல் என பலவிதமான சிற்றுண்டிகளில் இணைத்து சாப்பிடுவது அளவற்ற நன்மைகளைத் தரும் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

எப்படி உபயோகிக்கலாம்?

மிக அதிக ஒமேகா -3 கொழுப்பு அமில உள்ளடக்கம் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் வீரியமடைவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் கசப்புச்சுவை என இரண்டு முக்கிய பண்புகளைக் கொண்டவை ஆளிவிதைகள். இதிலிருக்கும் ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் (ALA) சூடுபடுத்தும் போது மிக எளிதில் வெளியேற வாய்ப்புள்ளதால், பேக்கிங் செய்யும்போதோ வறுக்கும் போதோ உயர்வெப்பநிலை இருக்கக்கூடாது.

ஆளி விதையை உடைத்தல், அரைத்தல் அல்லது க்ரஷ செய்வதன் மூலம் அதன் மீது இருக்கும் பாதுகாப்பு விதைக் கோட்டிங்கை அழித்து, ALA மற்றும் SDG அமிலங்களை வெளியேற்றிவிடக்கூடும். ஆனால், அரைத்த ஆளி விதைகளை வேகவைத்த பொருட்களில் சேர்க்கும்போது இந்த அமிலங்கள் சிதைவதைத் தடுக்கும். அதிக வெப்பமில்லாத இடங்களில் குறைந்த நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைத்து உணவில் சேர்த்துக் கொள்வதால் ALA மற்றும் SDG அமிலங்கள் சிதைவு ஏற்படாது.

ஆளி விதையின் மருத்துவ குணங்கள்

இதிலிருக்கும் ஆல்ஃபா   லினோலெனிக் அமில (ALA)த்தின் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கையானது, அதிக  கொழுப்பு அல்லது அதிக டிரான்ஸ் கொழுப்பு உள்ளடக்கத்தால் தூண்டப்பட்ட பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் இதய நோயைத் தடுக்கிறது. ஆளி விதையை உபயோகிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும்  நீரிழிவுக்கு முந்தைய நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.

பெண்களின் மெனோபாஸ்  காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் ஏற்படும் ‘Hot flushes’ உணர்வு, உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’  என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படுவதால் வருகிறது. ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன்  Hot flushes-I குறைக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவு களில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

இதில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதில்  ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மிகுந்துள்ளதால் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். ஆளி விதை உட்கொள்வதன் மூலம் தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதால், தோல் வறட்சி, கூந்தலின் ஸ்கால்பில் ஏற்படும் வெடிப்பு, கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.  மேலும் தோலின் உணர்திறன் அதிகரிப்பதாகவும், தோலின் கடினத்தன்மையைப் போக்குவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  Irritable bowel Syndrome-க்கான அறிகுறிகளைக் குறைப்பதில் ஆளிவிதை பயனளிக்கிறது.

ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமில அளவுகள் குறையும்போது,  உடல் வளர்ச்சியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி எச்சரித்துள்ளது. இதன் மூலம், ஆளி விதைகளில் உள்ள செறிவூட்டப்பட்ட ஒமேகா -3 கொழுப்பு அமிலம், ஆல்ஃபா லினோலெனிக் அமிலம், மூளைக்கு ஒத்த செயல்பாட்டு முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதால், மூளை வளர்ச்சி மற்றும் நினைவகத்தை மேம்படுத்தும் ஆளிவிதையின் முக்கியத்தை நாம் உணரமுடியும். இருந்தாலும், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். மற்றவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்