SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேப்பம்பூ மருத்துவம்... ஆரோக்கியம்!

2019-10-23@ 13:00:54

நன்றி குங்குமம் டாக்டர்

வீட்டு வாசலில் ஒரு வேப்ப மரம் இருந்தால் போதும், எந்த வித நோயும் நம்மை அண்டாது. வேப்ப மரத்தில் இலை, காய், பழம், பூ.. ஏன் அதன் பட்டையில் கூட பல மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை வியாதி, தோல் வியாதி உள்ளவர்கள் அன்றாடம் வேப்பம்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பிட்ட சமயத்தில்தான் வேப்பம் பூ சீசன் இருக்கும். அந்த சமயத்தில் அதனை பறித்து காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பூவை மாதம் ஒருமுறை லேசான வெயிலில் காய வைத்து மீண்டும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.

வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்கும், உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும். இவ்வாறு பல நண்ளைகள் கொண்ட வேப்பம்பூவை எவ்வாறு சமைத்து சாப்பிடலாம்.

வேப்பம் பூ பச்சடி

தேவையான பொருட்கள்
வேப்பம் பூ -  1 டீஸ்பூன், புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, நாட்டுச் சர்க்கரை - 2  டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், நெய் -  1/4 டீஸ்பூன், கடுகு -  1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை

புளியைக் கெட்டியாகக் கரைக்கவும். வேப்பம்பூவை நெய்யில் வறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்கவிட்டு, நிறம் மாறியதும், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, திக்கான பதம் வந்ததும் வேப்பம் பூ, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். வயிற்றுப்புண் ஆற்றக்கூடிய இந்தப் பச்சடி அதிக அளவு கசப்புத்தன்மை இன்றி இருப்பதால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வேம்பம்பூ துவையல்


தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் - 1 கப், காய்ந்த மிளகாய் - 3, புனி -  சின்ன நெல்லிக்காய் அளவு, கடுகு -  1/4 டீஸ்பூன், உளுத்தம்
பருப்பு - 1/4 டீஸ்பூன், வேப்பம் பூ - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் -
3 டீஸ்பூன்.

செய்முறை

வாணலியில் எண்ணை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய், வேப்பம் பூ சேர்த்து வதக்கி குளிரவிடவும். இதனுடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும். தோசைக்கு மிகச்சிறந்த சைட்டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

- எல்.தீபிகா, திருவான்மியூர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PopeFrancisInThailand

  முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்