SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயிற்றில் வலியா?!

2019-10-14@ 10:47:44

நன்றி குங்குமம் டாக்டர்

வயிற்றின் மேலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஏற்படும் கடுமையான வலி மற்றும் அசௌகரிய உணர்வு இரண்டும் வயிற்று வலியாக உணரப்படுகிறது. வயிற்றுவலி என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கெல்லாம் ஆபத்தான விஷயமல்ல. அதேநேரம் அலட்சியப்படுத்தக்கூடிய விஷயமுமல்ல. உடலுக்குள் ஏதோ ஒரு தீவிர பாதிப்பின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

வயிற்று வலியை ஏற்படுத்தும் காரணங்கள்...

* அப்பண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் அழற்சி
* ஜெர்டு
* சிறுநீர் பாதைத் தொற்று
* எண்டோமெட்ரியாசிஸ்
* குடல் அழற்சி நோய்
* கிட்னி ஸ்டோன்
* பித்தப்பைக் கற்கள்  
* குடலிறக்கம்
* PID எனப்படும் பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்

அறிகுறிகள் எப்படியெல்லாம் இருக்கலாம்?

* காய்ச்சல்
* உடலில் நீர் வறட்சி
* மலச்சிக்கல்  
* அஜீரணம்
* வாந்தி
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* வயிற்றுப்பகுதி மிக மென்மையாகவோ அல்லது
அழுத்தமாகவோ மாறியது போன்ற உணர்வு.

பரிசோதனைகள்

அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவோருக்குச் சில பரிசோதனைகள் அவசியம். வலி உணரப்படுகிற இடம், அதன் தீவிரம், அது நீடிக்கும் நேரம், பெண்களாக இருந்தால் அவர்களுடைய மாதவிலக்கு சுழற்சியின் தன்மை, கர்ப்பம் தரித்திருக்கிறார்களா, சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா, உணவுப்பழக்கம் எப்படிப்பட்டது என்கிற அனைத்து தகவல்களையும் மருத்துவர் கேட்டறிவார்.
முதல்கட்ட சிகிச்சையாக வலிநிவாரணிகள், உணவு முறை மாற்றங்கள் போன்றவை பரிந்துரைக்கப்படும். அதற்குப் பிறகும் வயிற்று வலி குறையாத பட்சத்தில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்தப்பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தப்படும்.

வயிற்றுப்புண்

* லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும்  லாக்டோஸ் ஒவ்வாமை வாய்வு
* உணவு அலர்ஜி
* ஃபுட் பாய்சன்  
* இரிடபுள் பவல் சிண்ட்ரோம்
* மாதவிடாய்  
* வைரஸ் தொற்று
* அஜீரணம்

அலர்ட் செய்யும் அறிகுறிகள்…

*வலி பல மணி நேரம் நீடித்தால்...
*மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால்…
*வலியானது வயிற்றிலிருந்து பின் முதுகு மற்றும்
*தொடைப் பகுதிகளுக்கு பரவினால்…
*வயிற்றுப் பகுதி மிக மிக மென்மையானது போன்று உணர்ந்தால்
*கண்களும், சருமமும் மஞ்சள் நிறமாக மாறினால்…
*வாந்தி, வாந்தியுடன் ரத்தம் வெளிப்பட்டால்…
*தலைசுற்றல்…
*பசியின்மை…
*கடுமையான காய்ச்சல்…
*காரணமின்றி எடை குறைவது…
*சிறுநீர் மற்றும் மலத்துடன் ரத்தம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதை அவசரநிலையாகக் கருதி மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சிகிச்சைகள்

வலிக்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சைகள் முடிவு செய்யப்படும். வலி நிவாரணிகள், ஆன்ட்டிபயாட்டிக், செரிமானத்தை சீராக்கும் மருந்துகள் போன்றவை முதல் கட்டமாக பரிந்துரைக்கப்படும். குடல்வால் அழற்சி அல்லது குடலிறக்கம் போன்ற பிரச்னைகளின் காரணமாக ஏற்பட்ட வலி என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

தொகுப்பு: ராஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailnewzealand

  நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

 • petroliranprotest

  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

 • christmascele

  லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 • ausfire2011

  ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

 • goalmineexplodechina

  சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்