SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல்நலத்தைத் தீர்மானிக்கும் அல்கலைன் உணவுகள்!

2019-10-09@ 13:51:57

நன்றி குங்குமம் டாக்டர்

அறிந்துகொள்வோம்

எல்லாமே உணவுகள்தான். எல்லாமே சுவையானவைதான். ஆனால், எந்த உணவு உடல்நலம் காக்கிறது என்பதுதானே முக்கியம். இப்படி ஆரோக்கியம் என்ற கோணத்தில் பார்த்தால், அல்கலைன் உணவுகளே சிறந்தவை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அல்கலைன் உணவு என்பது என்ன?!

உடலை சரிசெய்து குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட உணவுகள் காரத்தை உருவாக்கும் உணவுகள்(Alkaline forming foods) என்றும், உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் உணவுகள் அமிலத்தை உருவாக்கும் உணவுகள்(Acid forming foods) என்றும் அழைக்கப்படுகின்றன. பிரபல தத்துவஞானி ஹிப்போகிரட்டீஸின் ஒரு மேற்கோளை இங்கே பார்ப்போம். ‘நமது உடலின் சுகாதாரம் என்பது நாம் உண்ணும் உணவினை அடித்தளமாகக் கொண்டது என்கிற உண்மையை வலியுறுத்துகிறது. நாம் எதை சாப்பிடுகிறோம். சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தை சரிசெய்ய முடியும் என்று சொல்வது நியாயமானது.

ஆனால், தவறான உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் சேதமடையலாம். பெரிய நகரங்களில் வாழ்பவர்களின் நோய்கள், மன அழுத்தம் மற்றும் நச்சுக்கள் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாவலாக இருக்கிறது உணவு’ என்கிறார் அவர்.  ஆரோக்கியமான உணவில் 60% காரத்தை உருவாக்கும் உணவுகள் மற்றும் 40% அமிலத்தை உருவாக்கும் உணவுகள் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கான உணவில் 80% காரத்தை உருவாக்கும் உணவுகளும் 20% அமிலத்தை உருவாக்கும் உணவுகளும் இருக்க வேண்டும். மனித ரத்தத்தின் அமில கார நிலையில் (pH), கார நிலை (Alkaline) 7.35-7.45 என்கிற அளவுக்குள் இருக்க வேண்டும்.

இந்த அளவு குறைந்தாலோ, அதிகமானாலோ அது நோய்க்கான அறிகுறி என்று பொருள். ரத்த அமில கார நிலை 7.0 அளவில் இருப்பது நடுநிலையானது. இந்த அளவு குறைகிறபோது ரத்தம் அமிலத் தன்மையும், அதிகமாகும்போது காரத்தன்மையும் உடையதாக மாறுகிறது. அமிலத் தன்மையுள்ள உணவுகளால் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் மன அழுத்தம், உடல் நச்சுத் தன்மை மற்றும் நோய் எதிர்ப்புத் திறனுக்கு எதிரான செயல்முறைகள் அதிகரிக்கிறது. மேலும் இதனால் உடல் செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களில் இழப்பு ஏற்படுகிறது. இந்த அமிலத்தன்மை சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய மூன்று முக்கியமான காரத் தன்மையுள்ள தாதுக்களின் சமநிலையை அழிக்கிறது.

உடலானது அமில சூழலை நடுநிலையாக்குவதற்கு எலும்புகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கால்சியத்தைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவாக உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள காரத் தன்மையுள்ள தாதுக்கள் குறைகிறது. உடலின் அமில கார தன்மை சமநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும். மேலும் செல் அழற்சி, மூட்டுகளில் வீக்கம், உடல் வலிகள், கட்டிகள், நிணநீர் தடைகள், தோல் பிரச்னைகள், ஒவ்வாமை, காய்ச்சல், சளி, அடிநாக்கு வீக்கம் மற்றும் பார்வை இழப்பு போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த அமில சூழல் அனைத்து வகை பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளும் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது.

குறைவான அமிலத் தன்மையை உருவாக்கும் இறைச்சி, சீஸ் போன்ற விலங்குகளின் புரதம் மற்றும் ரொட்டி, அதிக அமிலத் தன்மையை உருவாக்கும் பழங்கள் அல்லது காய்கறிகள் அடங்கிய உணவானது சிறுநீரக கற்களைத் தடுக்கவும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. காரத் தன்மையுள்ள உணவுகள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு முதுகு வலியைக் குறைக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களுக்கான ஆபத்தினைக் குறைக்கிறது.

பெரும்பாலான பழங்கள், பச்சைக் காய்கறிகள், பட்டாணி, பீன்ஸ், பயறு, மசாலாக்கள், மூலிகைகள், விதைகள் அல்லது கொட்டைகள் போன்றவை காரத்தை உருவாக்கும் உணவுகளில் அடங்கும். இறைச்சி, கோழி, மீன், முட்டை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அமிலத்தை உருவாக்கும் உணவுகளில் அடங்கும்.  உடல் அமில கார நிலையை சமநிலையில் வைத்திருக்கும் உணவு முறையைப் பின்பற்றுவதால் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்வதோடு, அதிக ஆற்றலோடும் வலிமையோடும் நாம் வாழ்வதற்கு உதவுகிறது.

- க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailnewzealand

  நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

 • petroliranprotest

  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

 • christmascele

  லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 • ausfire2011

  ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

 • goalmineexplodechina

  சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்