SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவுக்கு மரியாதை !

2019-09-26@ 10:26:30

நன்றி குங்குமம் டாக்டர்     

‘எதை நினைக்கிறீர்களோ அதுவாக மாறுகிறீர்கள்’ என்றார் விவேகானந்தர். அதேபோல், உணவை எந்த முறையில் உண்கிறீர்களோ அதுவே உங்களின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறுகிறது என்கிறது நவீன உணவியல்  மருத்துவம். அது என்ன உணவு உண்ணும் முறை?!
ஒரு குறிப்பிட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது உணவுமுறை. ஆனால், உணவு உண்ணும் முறை என்பது இதிலிருந்து சற்று வேறுபட்டது. நீங்கள் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுகிறவராக இருக்கலாம். கலோரி கணக்குகள் பார்க்கிறவராகவும் இருக்கலாம்.

ஆனாலும், உண்ணும் முறை என்பது மிகவும் முக்கியம். இதை Mindful eating என்று உணவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உணவை கடமைக்காக எந்திரத்தனமாக சாப்பிடுவது தவறு. அதனை ரசித்து நன்றாக சாப்பிடுவதுதான் Mindful eating. ஏனெனில், ஓர் உணவை உண்ணும் முறை என்பது அதனை நீங்கள் கண்களால் பார்ப்பதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. அதன் பிறகு உணவின் வாசனையை முகர்ந்து, விரல்களால் ஸ்பரிசித்து, இந்த உணவு எனக்கு ஆரோக்கியத்தை தரப் போகிறது என்று நம்பிக்கையோடு சாப்பிடுவதே Mindful eating.

உணவில் மட்டுமே கவனம் செலுத்துவதால் இதனை ஜென் முறையாகவும் சொல்வதுண்டு. இதை இன்னும் நமக்குப் பழக்கமான உதாரணத்திலிருந்தும்
இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். திருக்குறளில் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் வள்ளுவர் இப்படி சொல்கிறார். ஐம்புலன்களாலும் உணர்ந்து ரசிக்கக் கூடிய அழகு, தலைவியிடம் இருப்பதாக தலைவன் மகிழும் குறள் அது.  ‘கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’

Mindful eating என்பதை இந்தக் குறளோடும் பொருத்திப் பார்க்கலாம். ‘ஒரு உணவை முழுமையான உணர்வுடன் உண்ணும்போது உண்ணும் அளவு குறைகிறது. அது எடை குறைப்பு உள்பட பல விதத்திலும் நம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. முக்கியமாக, தவறான உணவுப்பழக்கத்துக்கும் இதனால் ஆளாகாமல் தப்பிக்கலாம்’ என்கிறது American Journal of Clinical Nutrition.

‘கவனத்துடன் உண்பதற்காக மனதைப் பழக்கப்படுத்துவது நல்லது’ என்பது தொடர்பாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஆஷ்லி மேஸன் என்பவரும் ஓர் ஆய்வு செய்திருக்கிறார். நம் உண்ணும் பழக்கத்தில் மனநிலையானது அதீத செல்வாக்கு செலுத்துவதால் மனதைப் பழக்குவது அவசியம் என்பது ஆஷ்லி சொல்லும் முக்கியக் கருத்து. உண்ணும் போது மூளையில் ஏற்படும் உணர்வுக்கும், குடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்கிறார் ஆஷ்லி.

எனவே, இனியேனும் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடாதீர்கள். செல்போனை நோண்டிக் கொண்டும் சாப்பிடாதீர்கள். தொலைக்காட்சி பார்க்கவும் வேறு நேரம் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் நேரம் என்பது சாப்பிடுவதற்காகத்தான். இது ஒருவகையில் நீங்கள் உணவுக்கு மரியாதை கொடுப்பது போன்ற வழிபாடாகவும் மாறும்!

தொகுப்பு: ஜி. ஸ்ரீவித்யா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • watervapormoon

  வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

 • kuwaitcamelRace

  குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

 • amazonTraders

  Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

 • dubaiairshow2019

  துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

 • LAautoshow

  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்