SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செரிமானத்தை தூண்டும் பாசிப்பயிறு

2019-09-18@ 11:23:57

நன்றி குங்குமம் தோழி

* பாசிப்பயறில் வைட்டமின் பி9 அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் பி5,பி6,பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாது உப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம். மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவில் காணப்படுகின்றன.

* பாசிப்பயறில் உள்ள என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி - ஆக்ஸிடெண்டுகள் உடல்நலத்தை பாதுகாக்கின்றன. கண்கள், கேசம், நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

* பாசிப்பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானப் பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினை துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது.

* பாசிப்பயறில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது ரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. எனவே பாசிப்பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து ரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.

* பாசிப்பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதைத் தடை செய்கின்றன. பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிற்கு கெட்ட கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும்.

* கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்துணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

* அழகு சாதனப்பொருட்களில் குளிக்கும்போது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

தொகுப்பு: கவிதா சரவணன், திருச்சி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam 9 fest

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

  • 10-12-2019

    10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hongkiong_1211

    அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • northesat_masothaa1

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

  • dragon_shapes_chinaa1

    40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்