SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சருமம் பளபளக்க உதவும் பிராணயாமா!

2019-09-11@ 15:19:29

நன்றி குங்குமம் டாக்டர்

அழகை விரும்பாதவர்கள் யார்… அழகாக இருக்க விரும்பாதவர்களும் யார்?! எல்லோரும் விரும்பினாலும் அதற்கான முயற்சிகளில் எல்லோரும் ஈடுபடுவதில்லை என்பதுதான் உண்மை. முறையான உறக்கம், போதுமான உடற்பயிற்சி, சத்துமிக்க உணவு என சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறவர்கள் அழகாகவே இருப்பார்கள். இத்துடன் இன்னொரு எளிமையான டிப்ஸும் இருக்கிறது.

பிராணயாமா என்கிற மூச்சுப்பயிற்சி செய்தால் சருமம் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கப்படுவதுடன் பளபளப்பாகவும் மாறும் என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். சருமம் அழகாக பல்வேறு செயற்கையான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். இதற்காக சந்தையில் பல வகையான க்ரீம்களும், மருந்துகளும் கிடைக்கின்றன. விதவிதமான மேக் அப் சாதனங்களுக்கும் நாட்டில் பஞ்சமில்லை. ஆனால், இவை எல்லாம் இயல்பானதும் அல்ல; நிலையானதும் அல்ல.

‘மேக் அப் செய்யும் நேரத்தில் பிராணயாமா செய்து பாருங்கள்’ என்பதுதான் புதிய ஆலோசனை. சரி... பிராணயாமா செய்யும் மாயம் என்ன? பிராணயாமா என்பது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பயிற்சி மட்டுமே அல்ல. இது உடலை சுத்தப்படுத்தும் Purification technique. பிராணயாமா நாடியைச் சுத்திகரிக்கிறது. உடலின் எனர்ஜி மையத்தையே ‘நாடி’ என்று யோகாசன நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாடி மையம் சீரான சுவாசத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

இதை மருத்துவ உலகம் தனது பாணியில் குறிப்பிடுகிறது. உடலின் லிம்பாட்டிக் சிஸ்டம்(Lymphatic system) என்பது உடலின் நச்சுக்களை நீக்கும் பணியினைச் செய்யும் முக்கிய அமைப்பு. இதில் இருக்கும் Lymph nodes வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து, தொற்றுக்களுக்கு எதிராகப் போராடும் குணம் கொண்டது. பிராணயாமா இந்த லிம்பாட்டிக் சிஸ்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதேபோல் உடலின் Parasympathetic nervous system பகுதியையும் பிராணயாமா ஒழுங்குபடுத்துகிறது.

இதன்மூலம் சாதாரண முகப்பரு முதல் எக்ஸீமா வரையிலான சரும நோய்கள் வருவது தடுக்கப்படும். பிராணயாமா நரம்பு மண்டலத்துக்கும், செரிமான மண்டலத்துக்குமிடையே ஓர் அச்சாணியாகவும் இருக்கிறது. இதை பல ஆய்வுகளும் குறிப்பிட்டிருக்கின்றன. இதன்மூலம் உடல் செல்கள் முதிர்வடைவதும் தடுக்கப்படுகிறது. எனவே, முறைப்படி ஒரு நிபுணரிடம் கற்றுக்கொண்டு பிறகு பிராணயாமாவை செய்ய முயலுங்கள். ஏனெனில், பிராணயாமாவில் கபாலபதி, பாஸ்ட்ரிகா, உஜ்ஜயி போன்ற பல வகைகள் இருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் அமைதியும் கிடைக்கும் என்றால் தாராளமாக முயற்சிக்கலாம்தானே!

தொகுப்பு: ஜி.ஸ்ரீவித்யா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்