SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகாய் இருக்க ஓர் உணவுமுறை!

2019-09-04@ 10:40:29

நன்றி குங்குமம் டாக்டர்

The Beauty Diet...

இப்படி ஒரு புதிய தலைப்பில், ஒரு புத்தகத்தைப் பார்த்தால் என்ன தோன்றும்?

என்னென்னவோ பெயர்களில், எத்தனையோ டயட் முறைகள் இருக்கின்றன. நாள்தோறும் வந்துகொண்டும் இருக்கின்றன. இந்த பட்டியலில் பியூட்டி டயட்டும் ஒன்றாக இருக்குமோ என்றுதானே நினைப்போம். அதிலும் புத்தகத்தின் அட்டையில் பாலிவுட்டின் எவர்கிரீன் பியூட்டி ஹேமமாலினியைப் பார்த்தவுடன், இது ஹேமமாலினியின் ஃபிட்னஸ் சீக்ரட் தொடர்பான புத்தகமா என்றும் எண்ணம் வரலாம். 3 தலைமுறையினரின் கனவுக்கன்னியான ஹேமமாலினி, 70 வயதிலும் அவரது இளமைத்தோற்றம் அப்படி என்னதான் சாப்பிடுகிறார் என்ற ஆர்வத்தையும் தூண்டலாம். ஆனால், விஷயம் இதையும் தாண்டி கொஞ்சம் வித்தியாசப்படுகிறது.

The Beauty Diet புத்தகத்தை எழுதியவர் சோனாலி. இந்தியாவின் மேக்ரோபயாடிக் உணவுகளின் பயிற்றுவிப்பாளர். பாலிவுட் பிரபலங்களுக்கான செஃப்பும் கூட. இவரது வாடிக்கையாளர்களில்தான் ஹேமமாலினியும் ஒருவர். இவரோடு நேஹா துபியா, ஈஷா தியோல், அஹானா தியோல், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கத்ரீனா கைஃப், தபு, சேகர் கபூர், கபீர் பேடி மற்றும் தலிப் தஹில் என சோனாலியின் லிஸ்ட்டில் பாலிவுட் பிரபலங்களின் பெரிய பட்டியலே இருக்கிறது.

ஷோனாலி, அமெரிக்காவின் குஷி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர். 1998-ம் ஆண்டில் அவரது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, ​​அதிலிருந்து தன் தந்தையை மீட்க ஒரு மாற்று அணுகுமுறையை பின்பற்ற யோசித்தபோது, மேக்ரோபயாடிக் உணவுகளான பழுப்பரிசி, முழு பீன்ஸ் மற்றும் ஆசிய பாரம்பரிய மூலிகைகளை  உணவுமுறையில் பயன்படுத்தும் அவரது முயற்சி தொடங்கியது.

அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் The Beauty Diet. இதன்மூலம், ஒருவரின் ‘நல்வாழ்வை உள்ளிருந்து மேம்படுத்தும், ரத்த நிலையை மாற்றுவதில் கவனம் செலுத்துவதோடு, உடலிலும் மனதிலும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் மாற்ற உணவை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்’ என்கிறார் ஷோனாலி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, வோக், எல்லே, இந்துஸ்தான் டைம்ஸ், டி.என்.ஏ மற்றும் பல பிரபல இதழ்களில் உணவு குறித்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும், இவர் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை சுகாதார ஆலோசனை மட்டத்தில் மட்டுமல்லாது, அதையும் மீறி, அவர்களை சமையல் மற்றும் சமையல் வகுப்புகளுடன் ஈடுபடுத்தி, மூல தயாரிப்புகளுக்கும் உதவுகிறார்.

இந்த புத்தகத்தில் வெறுமனே டயட் டிப்ஸ் மட்டும் கொடுக்காமல், ஒருவர், உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடலை எப்படி சுத்தப்படுத்துவது? சருமத்தை எப்படி பளபளக்கச் செய்வது? பளபளப்பான தலைமுடியை எப்படிப் பெறுவது? பற்களை ஆரோக்கியமாக்குவது, தொப்பையை எப்படி குறைப்பது? தொடைகள் மற்றும் கைகளில் உள்ள கொழுப்பை அகற்றி இளமையான தோற்றத்தை கொண்டுவரும் முறை, சரியான உணவின் மூலம் ஒருவரது  மனநிலையை மாற்ற உணவு விளக்கப் படங்கள், சமையல் வகைகள், சமையல் நுட்பங்கள், எடுத்துக்காட்டுகள், நிஜ வாழ்க்கை கதைகள் மற்றும் பிரபல அனுபவங்கள் மூலம், The Beauty Diet உணவின் நோக்கம் மற்றும் சூத்திரங்களை கொடுத்திருக்கிறார்.
வித்தியாசமாகத்தான் இருக்கிறது!

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்