SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

2019-08-27@ 17:15:40

நன்றி குங்குமம் டாக்டர்

செய்திகள் வாசிப்பது டாக்டர்

சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் விடுமுறை எடுக்க  புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை விதித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை  சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு  இருந்து வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில், மருத்துவர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை  அளிப்பதில் சிக்கல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, டாக்டர்கள் விடுப்பு எடுக்க பல்வேறு புதிய நடைமுறைகளை சுகாதாரத்துறை  அமல்படுத்தவுள்ளது.

‘மருத்துவர்கள் பலர் தங்களது வார விடுமுறையன்று பணிக்கு வருகின்றனர். அதற்கு ஈடாக வார நாட்களில் விடுப்பு எடுத்து விடுகின்றனர். ஒரே துறையில்  உள்ள அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு விடுமுறை எடுப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மருத்துவ கல்லூரிகளில்,  துறை தலைவர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இதுபோன்று விடுப்பு வழங்கி விடுவதால் அத்துறையின் செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படுவது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து வார விடுமுறையன்று பணிக்கு வரும் மருத்துவர்கள், வார நாட்களில் மாற்று விடுமுறை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று  தகவல் தெரிவிக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

- ஜி.ஸ்ரீவித்யா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்