SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Medical Trends

2019-07-09@ 16:15:33

நன்றி குங்குமம் டாக்டர்

ரிலாக்ஸ்


கர்ப்பிணிகளின் தூக்கம்

கர்ப்பிணிகள் தூங்கும்போது இடது, வலது என இரண்டு பக்கங்களிலும் சம அளவிலான நேரங்களில் தூங்க வேண்டும். மல்லாந்து படுத்து மட்டுமே தூங்குவதால் கருவிலுள்ள குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் 80 சதவீதம் குறைவதாக லான்செட் பத்திரிகையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. கருவுற்ற தாய்மார்கள், பக்கவாட்டில் தூங்குவதால், குழந்தை இறந்து பிறப்பதை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

பழச்சாறுக்கு பதில் பழங்கள்

பழச்சாறுகளில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டி கலக்கிறார்கள். மேலும் அது திரவ உணவு என்பதால், சீக்கிரமே செரித்து பசி எடுத்துவிடும். அதற்கு பதில் பழங்களை அப்படியே சாப்பிடுவதால், கூடுதலாக சர்க்கரை சேர்க்கவும் தேவையில்லை. அதோடு பழங்களில் இருக்கும் நார்ச்சத்து முழுமையாகக் கிடைப்பதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.

மியூசிக் வாக்கிங்

வாக்கிங் போகும்போது கூட வருபவரிடம் அரட்டை அடிப்பதைவிட, ஹெட்செட்டில் ஃபாஸ்ட் பீட் சாங்க்ஸ் கேட்டுக்கொண்டே நடக்கலாம். அது நடையின் வேகத்தையும் கூட்டும். கவனம் சிதறாமல் பாட்டின் ( 1நிமிடத்திற்கு 100 beats) தாளகதிக்கேற்ப வேகமாக நடப்பவர்களின் இதய ஆரோக்கியம் மற்றவர்களைவிட, சிறப்பாக இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

வாழ்நாளை அதிகரிக்கும் கண்புரை சிகிச்சை

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயதான பெண்கள் தங்கள் பார்வையை சரிசெய்து நீண்ட காலம்  வாழ்கின்றனர் என்று JAMA என்கிற கண்மருத்துவம் தொடர்பான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வயதிற்கு உட்பட்ட 74,044 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 41,735 பேருக்கு கண்புரை நோய் இருப்பது  கண்டறியப்பட்டு, கண்புரை அறுவை சிகிச்சைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, மரணத்தை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஆபத்துகள் 60 சதவிகிதம் குறைவாக இருந்தது.

சைட் டிஷ் To மெயின் டிஷ்

பொதுவாக சாப்பிடும்போது பொறியல், கூட்டு, பச்சடி, சட்னி, சாம்பார் என தொட்டுக்கொள்ளும் அயிட்டங்களை கொஞ்சமாக சைடிலும், சாதம், தோசை, சப்பாத்தி இதையெல்லாம் மெயின் அயிட்டமாக நடுவிலும் வைத்துக் கொள்வோம். அதை அப்படியே மாற்றி சைட் டிஷ்ஷாக இருப்பவற்றை அதிகமாகவும், மெயின் உணவுகளை குறைவாகவும் எடுத்துக்கொண்டால், கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். மெயின் உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதோடு, நாம் சைட் டிஷ்ஷில் தொட்டுக்கொள்ளும் உணவுகளில் உள்ள காய்கறி, பருப்பு, தானியங்களில் பல சத்துக்கள் இருப்பதுமே அதற்கு காரணம்.

டபுள் ஷோல்டர் பேக் நல்லது

லஞ்ச், புக்ஸ், ஃபைல்ஸ் எல்லாவற்றையும் திணித்து பெருஞ் சுமையாக இருக்கும் ஆபீஸ் பேக்கை ஒரு ஷோல்டரில் மட்டும் மாட்டிச் செல்வதால், தசைக் கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும். இதனால், கழுத்து, தோள்பட்டை, முதுகு என எல்லா இடத்திலும் வலிக்க ஆரம்பிக்கும். சிலர் ஒரு பக்கமாக சாய்ந்தே நடக்க ஆரம்பித்து விடுவார்கள். இரண்டு பக்கமும் மற்றும் உடலில் வெயிட் சரிசமமாக பகிரும் வகையிலான பேக்கு களை உபயோகிக்கலாம். அல்லது அரை மணிக்கு ஒரு தடவை, ஒரு தோளிலிருந்து மற்ற தோளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

பருமனும் பால்சுரத்தலும்

பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலும் பருமனான பெண்களுக்கு மார்பக பால் உற்பத்தி மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாகிறது. பருமனான பெண்களுக்கு பால் சுரத்தல் தாமதமாவது பற்றியும், அவர்கள் உடனடியாக தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரவும், சரியான பாலுட்டல் முறைகளைத் தெரிந்து கொண்டு மார்பக பாலூட்டலுக்கான குறிக்கோள்களை அடையவும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மனித பாலூட்டல் பற்றிய இதழிழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பொலிவுக்கு உதவும் தேன்

பருவ வயதில் முகப்பருவை உணடாக்கும் எண்ணெய் சுரப்பிகள் மூடப்படும்போது, அது உங்களுக்கு வறண்ட தோலைக் கொடுக்கிறது. தோலின் இந்த உலர்நிலையை எதிர்த்து செயல்படும் பின்வரும் செய்முறையை வீட்டிலேயே எளிதாக முயற்சி செய்யலாம். ஒரு தேக்கரண்டி தேன், 1/4 கப் தயிர் கலந்த கலவையை முகத்தில் மெல்லிய பூச்சாக பூசி 15 நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து எடுக்க வேண்டும். தயிர் உங்கள் முகத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுப்பதோடு, தேன் முகத்திலுள்ள பருக்களை சரிசெய்து முகப் பொலிவுக்கு உதவுகிறது.

ஆஹா ஏரோபிக்...

நீங்கள் உங்களுடைய முதலாளி அல்லது வாடிக்கையாளருடன் ஒரு முக்கியமான கூட்டத்தை வைத்திருக்கையில், அந்த குறிப்பிட்ட 30 நிமிடங்களுக்கு மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜனைப் பெறுவதற்கு ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மூளையின் தெளிவுத் தன்மையை அதிகரித்து, எச்சரிக்கையோடு இருப்பதற்கும், அதன் சீரான இயக்கத்திற்கும் உதவும் எண்டோர்பின்ஸ் ஹார்மோன் சுரப்பதற்கு இந்த ஏரோபிக் பயிற்சிகள் உதவுகிறது.

இளமை... இனிமை...

உடலுறவு உங்கள் தோலின் மேற்பரப்பிற்கு ரத்தத்தைக் கொண்டு வருவதோடு, உங்கள் கண்களை விரிவடையச்  செய்து, உங்களுக்கு இளமையான காற்றினைக் கொடுக்கிறது. வழக்கமாக படுக்கைக்குச் செல்லும் நேரத்திற்கு முன்னர், கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே படுக்கைக்குச் செல்வது, அடுத்த நாள் இரண்டு கப் காபியின் ஆற்றலைக் கொடுக்கிறது.

இதற்கு மாறாக 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால் உங்கள் செயல்திறன் 0.05 ரத்த-ஆல்கஹால் அளவு குறைகிறது. உங்கள் இணையருடன் உடலுறவில் நேரத்தை செலவழிப்பதால், உங்கள் உடல்சுழற்சி அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதயத்தின் உறுதித்தன்மையும் அதிகரிக்கிறது. மேலும் இது நல்ல எண்டோர்பின் ஹார்மோன் வெளியீட்டை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தைத் தடுத்து உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

இன்டோர் கேம்ஸ் வேண்டாம்

இப்போதுள்ள குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன், டேப்லட், லேப்டாப் என அனைத்திலும் வீடியோகேம்கள்தான் இருக்கின்றன. அபார்ட்மென்ட் வாழ்க்கையில் பார்க்கிலோ, மைதானத்திலோ விளையாடும் குழந்தைகளை பார்ப்பதே அரிது. பசுமையான சூழலில் விளையாடும் குழந்தைகள், பெரியவர்களாகும்போது 55 சதவீதம் மனநலக் குறைபாடுகள் குறைவதாக டென்மார்க்கைச் சார்ந்த அர்ஹஸ் பல்கலைக்கழக ஆய்வு சொல்கிறது.

இயற்கைச்சூழல் குழந்தைகளின் மனநலத்தை பாதுகாப்பதால் வீட்டுக்குள் விளையாடுவதைவிட, மரம், செடிகள் நிறைந்த பூங்காக்களில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

மூளைக்குப் பயிற்சி

எப்போதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சோஸியல் மீடியாவில் இருப்பவரா? அதற்குப் பதில் போரடிக்கும்போது சுடோகு, க்ராஸ் வேர்ட், செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள். அது உங்கள் மூளைக்கு பயிற்சியை அளிப்பதோடு முதுமையால் வரும் அல்ஸைமர், டிமென்ஷியா போன்ற ஞாபகமறதி நோய்களிலிருந்தும் காப்பாற்றும் என்கிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு.

ரோபோட்டிக் கால்கள்

விபத்தில் கால்களின் சுவாதீனத்தை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக, ஜப்பான் நாட்டை சேர்ந்த சைபர்டயன் என்னும் நிறுவனம் ரோபோடிக் கால்களை கண்டுபிடித்துள்ளது. இந்த ரோபோடிக் கால்களை இடுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், மூளையிலிருந்து பெறப்படும் சிக்னல்களை இந்த கருவிக்கு கொண்டு வந்து சேர்க்கிறது.

இது நிஜமான கால்களை அசைப்பது போன்ற உணர்வையே தரும். நடப்பது, உட்காருவது என்று எல்லாவற்றையும் இந்த கால்களை நகர்த்திச் செய்யலாம். எந்த சூழ்நிலையிலும் செயற்கை கால்களை பொருத்திக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே தோன்றாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் அசிஸ்டிவ் லிம்ப் (HAL) என்று பெயரிடப்பட்டுள்ள இது தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கருத்தரிப்பின்மை புற்றுநோயையும் உண்டாக்கும்

மற்ற பெண்களைக்காட்டிலும், கருவுறுதல் பிரச்னைகள் கொண்ட பெண்களில், ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 18 சதவிகிதம் பேர் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். அதில் 78 சதவீதத்தினர் கர்ப்பப்பை புற்றுநோயாலும், 64 சதவீதத்தினர் கருப்பைக்குழாய் புற்றுநோயாலும், 59 சதவீதத்தினா் கல்லீரல் மற்றும் பித்தப்பை புற்றுநோயாலும் பாதிப்படையக்கூடிய அதிகபட்ச ஆபத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

மோப்பத்திறன் குறைவா?

வயதாக ஆக, நம்முடைய முகர்வுத்திறன்(Sense of smell) குறைந்து கொண்டே போகும். குறைந்த முகர்வுத்திறனுள்ள முதியோர்களில் 50 சதவீதம்பேர் அடுத்த 10 ஆண்டுகளில் இறக்கும் அபாயம் உள்ளவர்கள் என்று Annals of internal medicine வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதியோர்களில் நல்ல, மிதமான மற்றும் மிகமோசமான முகர்வுத்திறன் உள்ள நிலை ஆராயப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் வேறுபாடில்லாமல் அனைத்து பாலினருக்குமே இந்த ஆபத்து இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

தொகுப்பு: குங்குமம் டாக்டர் டீம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்