SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழுகையும் ஆரோக்கியமே!

2019-07-09@ 16:12:42

நன்றி குங்குமம் டாக்டர்

ஆச்சரியம்

‘அழுகை என்பதை சோக உணர்ச்சியின் வெளிப்பாடு என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு மருத்துவரீதியான மகத்துவமும் இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஜப்பானிய உளவியல் மருத்துவர்கள். வாரத்தில் 3 நாட்களாவது அழுதுவிடுவது மனநலனுக்கு நல்லது’ என்றும் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஜப்பானில் ஆண்கள், பெண்கள் இரு பாலருமே நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் வரை கூடுதலாக வேலை பார்க்கிறார்கள். இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கும் உள்ளாகிறார்கள். மன அழுத்தம் காரணமாக மனநல மருத்துவர்களிடம் செல்வதும் அதிகமாகி வருகிறது. இதற்கான எளிய சிகிச்சையாகத்தான் அழுகையைப் பரிந்துரைக்கிறார்கள்.

ஏனெனில், அழும்போது மன அழுத்தம் குறைந்து லேசாக உணர்வதால் மனதை அழுத்தும் விஷயங்களுக்கு சிறந்த Antidepressants கண்ணீர்தான் என்று இதற்கான காரணத்தையும் விளக்குகிறார்கள். அழுகை நம் நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதோடு, மன அழுத்தத்திற்குக் காரணமான ரசாயனத்தைக் கண்ணீர் மூலம் வெளியேற்றுவதாக ஜப்பானின் பிரபல மனநல மருத்துவரான டாக்டர் வில்லியம் தன்னுடைய ஆய்வில் கண்டறிந்துள்ளார். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர், கண்ணீர்விட்டு அழுதபின் தங்கள் மன அழுத்தம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மன நல மருத்துவர்களே இப்படி சிபாரிசு செய்வதால், அந்நாட்டு அரசாங்கமும் அழுகையை ஊக்குவிக்கிறது. ஜப்பானில் உள்ள தனியார், அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வாரத்தில் ஒரு நாளாவது சோகப்படங்கள் அல்லது சீரியல்களை பார்த்து அழச் சொல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதைவிட உச்சகட்ட தகவல் ஒன்று... எப்படி அழுதால் மன அழுத்தம் குறையும் என்று அதற்கான வகுப்புகளையும், டீச்சரை வைத்துப் பாடமும் நடத்துகிறார்களாம்!

-  என்.ஹரிஹரன்

வலி தீர்க்கும் எண்ணெய்!

தலைவலி, கைகால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்துப் பிடிப்பு என எல்லாவிதமான வலிகளுக்கும் ஒரு நல்ல தீர்வு வந்துவிட்டது. ஜிங்கா பெய்ன் கேர் ஆயில்!நவீன ரோல் ஆன் வடிவில் வந்திருக்கும் இதன் விலை ரூ. 40/- (நாற்பது ரூபாய்) மட்டுமே. ஜிங்கா நிறுவனத்தின் ஜிங்கா டயாமேட்டிக்கும் இப்போது சந்தையில் கலக்கி வருகிறது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கான பிரத்யேகத் தயாரிப்பு. இனி சுகரின் ரிமோட் கண்ட்ரோல் நம் கையில்! இவ்விரண்டு ஜிங்கா தயாரிப்புகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உங்கள் அருகில் உள்ள மருந்துக் கடைகளிலும் பிற கடைகளிலும் கிடைக்கும். அப்போலோ மருந்தகம் மற்றும் மெட்பிளஸ் நிறுவன மருந்தகங்களிலும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • delli_engottai11

  டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்