SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரிய வெளிச்சம் ஆபத்தானது

2019-07-02@ 17:27:27

நன்றி குங்குமம் டாக்டர்

அல்பினிசம் குறித்து சரும நல மருத்துவர் ஸ்வேதா ராகுலிடம் பேசினோம்...

‘‘அல்பினிசம்(Albinism) என்பது வெண்மைத் தோல் நோய். குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணுக் குறைபாட்டு நோய். தோலில் உள்ள மெலனின் நிறமி தோன்றுவதற்கான  செயல் நடைபெறுவதில்லை. இவர்களுக்கு வெண்மை கலந்த பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும்.

இவர்களது சருமத்தில் அதிகளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு. அல்பினிசம் பாதிப்புக்கு பத்துக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு நெருங்கிய உறவு திருமணம், மரபு ரீதியான காரணம், கர்ப்பிணிக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, பெற்றோரின் ஆரோக்கியக் கேடான பழக்கங்கள், நாள்பட்ட நோய்கள் என பல காரணிகள் இதற்கு உண்டு.

இப்படி ஒரு பாதிப்போடு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மருத்துவத்தில் எந்த சிகிச்சையும் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் வாழ்நாள் முழுக்க அதீத சூரிய வெப்பத்திலிருந்தும், அதீத வெளிச்சத்திலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். சூரிய வெப்பத்திலிருந்து அவர்களுடைய உடலை பாதுகாப்பதற்கு அரசு மருத்துவமனையில் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு இயல்பாகவே பார்வைக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்கள் அரசு மருத்துவமனையை நாடினால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும். வெளியில் நடமாடும்போது சன் ஸ்கிரின் அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சம் இருக்கும்போது வெளியில் வரக்கூடாது.

பொதுமக்களும் அல்பினிசம் பாதித்தவர்களை இயல்பாக அணுக வேண்டும். அவர்களும் சராசரி மனிதர்கள்தான். அல்பினிசத்துக்கும் திருமண வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். நெருங்கிய ரத்த சொந்தத்தில் மட்டும் திருமணம் செய்யக் கூடாது என அறிவுறுத்துகிறோம்.’’

‘‘எனக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் பிறந்தவுடன் என் பெற்றோர் சென்னைக்கு வந்துவிட்டார்கள். நினைவு திரும்பும்போது எனக்கு அல்பினிசம் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இது மருத்துவத் தீர்வற்ற பிரச்னை என்பதை நாளடைவில் தெரிந்துகொண்டேன். ஆனாலும் என் படிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் MSW, மனநல ஆலோசகர் என என்னை நான் தகுதிப்படுத்திக் கொண்டேன். இதற்கு என்னுடைய பெற்றோர் தந்த ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தது.

எனக்கு 40 வயதாகிறது. இந்தப் பிரச்னை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னை திருமணம் செய்ய யாரும் முன் வருவதில்லை. எனக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. ஆனாலும், என்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘கனவுகள்’ எனும் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.

எங்கள் தொண்டு நிறுவனத்தின் முக்கியமான நோக்கமே அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதுதான். அதேபோல அல்பினிசத்தால் பாதித்தவர்களை மாற்றுத்திறனாளி பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எங்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெறுவதற்கு வழி செய்யுமாறு தொடர்ந்து வழியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கில் இந்த குறைபாடால் பாதித்தவர்கள் இருக்கிறார்கள். எங்கள் தொண்டுநிறுவனத்தின் முயற்சியால் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர், கடலூர் போன்ற நான்கு மாவட்டத்திலிருந்தும் 100-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்திருக்கிறோம். ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அவர்களின் பிரச்னைகளை கேட்பதோடு, அதை தீர்த்து வைக்கவும் முயற்சிக்கிறோம்.

மன ரீதியான பிரச்னைகளுக்கும் தீவிர ஆலோசனை அளித்து வருகிறோம். இதேபோல இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருகிறோம். இதற்கு அரசு உதவ வேண்டும். அல்பினிசத்தால் பாதித்தவர்களை அரசு ஒரு பட்டியலின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு (அவர்கள் உடல் நலன் சார்ந்த வேலைவாய்ப்பு) இலவச மருத்துவம், மனநல ஆலோசனை போன்றவற்றை அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

பொதுவாக அல்பினிசத்தால் பாதித்தவர்களை கண்டு பொதுமக்கள் பயப்படும் சூழலும், அவர்கள் மீது இரக்கம் காட்டும் செயலும் தொடர்ந்து இருந்து வருகிறது. அவ்வாறு இல்லாமல் நாங்களும் சராசரி மனிதர்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதுபோல திருமணம் செய்து கொள்வதும், அவர்களை திருமணம் செய்ய முன் வருவதும் இயல்பாக நடந்தால் அவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்காமல் இருப்பார்கள்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicoworldrecord268

  நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

 • sudanflood26

  சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

 • hongkongfight26

  போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

 • 26-08-2019

  26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்