SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டார்ன் தெரபி

2019-07-01@ 15:17:15

நன்றி குங்குமம் டாக்டர்

அறிந்துகொள்வோம்

‘‘முதுகுத்தண்டுவட வலிகள், கழுத்துவலி, இடுப்புவலி போன்றவற்றிற்கு வலி நிவாரணம் தர முடிகிறதே தவிர, பூரண குணம் அடைய முடிவதில்லை. அதன் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. டார்ன் தெரபி (Dorn therapy) மூலம் அறுவை சிகிச்சையின்றி வலிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்யலாம். இதன் சூட்சுமம் முதுகுத்தண்டுவடத்தில் இருக்கிறது’’ என்கிறார் டார்ன் தெரபி பயிற்சியாளரான வெங்கடேச பெருமாள்.டார்ன் தெரபி பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டோம்...

1970-ம் ஆண்டில் தெற்கு ஜெர்மனியில் டைட்டர் டார்ன்(Dieter Dorn) என்பவரால் உருவாக்கப்பட்டு அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது டார்ன் தெரபி. முதுகு வலி மற்றும் பல முதுகெலும்பு கோளாறுகளுக்காக ஜெர்மனி முழுவதும் மிகப் பரவலாக டார்ன் தெரபி ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது.  

தற்போது உலகம் முழுவதும் டார்ன் மெதட், டார்ன் தெரபி, டார்ன் முதுகுத்தண்டுவட சிகிச்சை, டார்ன் ப்ரூயஸ் மெதட்(Dorn Bruess Method) என்ற பலவித பெயர்களில் அதன் அடிப்படை கொள்கைகள் மாறாமல் பின்பற்றப்படுகிறது. உடல் மட்டுமல்லாமல், அறிவு, ஆன்மா, உடல் ஆற்றல் அதிகரிப்பு என அனைத்துக்குமான அற்புதமானதும், முழுமையானதுமான சிகிச்சை இது.

வாழ்வியல் முறையில் நாம் உடலை சரியாக பயன்படுத்துகிறோமா? தவறாக பயன்படுத்துகிறோமா? அல்லது உடலை வன்முறைப்படுத்துகிறோமா? என்பதைப்பற்றி சரியான புரிதல் வேண்டும். இன்று எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு பின்னாளில் எதிரொலிக்கும்.
டார்ன் தெரபி மற்றவற்றிலிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது?

டார்ன் தெரபியில் மருந்தோ, மருத்துவப் பயிற்சியோ தேவையில்லை. இதை முழுமையாக கற்றுக் கொண்டு நோயாளி தனக்கு தேவையான சிகிச்சையைத் தானே எளிதில் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேன்யுவல் தெரபி(Manual therapy), மேன்யுபுலேடிவ்(Manupulative) தெரபி என பொதுவாக இரண்டு வகையான தெரபிகள் உள்ளன. உடலில் ஓரிடத்தில் ஏற்படும் பிரச்னையை மருத்துவரே கண்டறிந்து, அவரே தன் கைகளால் பயிற்சி அளித்தால் அது மேன்யுவல் தெரபி. மருத்துவரோடு, நோயாளியும் சேர்ந்து இயங்குவது மேன்யுபுலேடிவ் தெரபி.

முழங்கால், முதுகு, கணுக்கால், கழுத்து என எல்லாவற்றுக்கும் அடிப்படை முதுகுத்தண்டுவடம். நீங்கள் கை, காலை அசைக்க வேண்டுமென்றால் முதலில், முதுகுத் தண்டுவடம் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். சமிக்ஞைகளை பெறும் மூளை உங்களுக்கு கட்டளையிட்டால்தான் நீங்கள் அவற்றை அசைக்க முடியும். இந்த தொடர் செயலில் எந்த இடத்திலாவது தடை ஏற்படும்போதுதான் உடல் உறுப்புகளில் வலி ஏற்படுகிறது.

1. முதுகெலும்பு மற்றும் மூட்டு இணைப்பு பிரச்னைக்கான காரணத்தை விளக்குவது...

2. நோயாளியின் ஒத்துழைப்புடன் ஒரு பயனுள்ள, பாதுகாப்பான சிகிச்சை தருவது,

3. சிகிச்சைக்குப்பின் நோயாளி தனக்குத்தானே மேற்கொள்ளும் சுய உதவி உடற்பயிற்சிகளுக்கான விளக்கம் கொடுப்பது,

- இந்த மூன்று முக்கிய காரணிகளை ஒருங்கிணைந்து டார்ன் தெரபியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது அப்போதைக்கு செய்யப்படும் சிகிச்சையாக இல்லாமல், சிகிச்சைக்குப்பிறகும் எதிர்காலத்தில் மீண்டும் வராமல் இருக்க நோயாளி தனக்குத்தானே செய்யவேண்டிய பயிற்சிகளையும் விளக்குகிறது என்பதால் இது ஒரு முழுமையான சிகிச்சையாகிறது.  

எப்படி இது வேலை செய்கிறது?

முதலில் நோயாளியின் ஒத்துழைப்புடன் கால் நீளம், இடுப்பு வரிசை(Alignment), வயிறு, முதுகெலும்பு, கழுத்து மற்றும் பிற மூட்டுகள் என பல்வேறு பகுதிகளை மதிப்பீடு செய்வோம். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறிப்பிட்ட பகுதியை தொடும்போது, நோயாளிகளின் எதிர்வினையை வைத்து அப்பகுதியின் சமநிலையின்மையை தெரிந்து கொள்வார். பின்னர் அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவர் ஒரு இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நோயாளி அதற்கேற்ற அசைவுகள் கொடுக்கும்போது உடல் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளும்.

சிகிச்சையின்போது, நோயாளிகளுக்கு சில எளிய சுய சிகிச்சை பயிற்சிகள் செய்து காட்டப்படும். மீண்டும் அந்த இடத்தில் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக, சீரற்ற இயக்கங்கள் மற்றும் தவறான வடிவங்களை சரி செய்வதற்கான பயிற்சிகளும், மேலும் சில உளவியல் ரீதியான பிணைப்புகளைப் பற்றியும் சொல்லித் தரப்படும்.இதன்மூலம், நோயாளிக்கு தன் பிரச்னையைப்பற்றிய முழு புரிதல் கிடைப்பதால், நீண்டநாள் நீடிக்கும் வலிகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடிகிறது.

- உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்