SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடையை குறைப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும்!

2019-06-19@ 13:00:53

நன்றி குங்குமம் டாக்டர்

Centre Spread Special


அப்போதே பலரும் எச்சரித்தார்கள். ஆனால், அனுஷ்காதான் யார் சொன்னதையும் கேட்கவில்லை. ஆனால், இப்போது எல்லாமே சுபம்...

விக்ரம் உள்பட பல நடிகர்கள் தங்களது உடலையும், எடையையும் சினிமாவுக்காக அடிக்கடி மாற்றுவது பற்றி கேள்விப்படுகிறோம். இந்த ரோலர் கோஸ்டர் விளையாட்டில் நடிகைகள் யாரும் ஈடுபடுவதில்லை. ஏனெனில் பெண்களின் உடலமைப்பும், ஹார்மோன்களின் செயல்பாடுகளும் ஆண்களிலிருந்து மாறுபட்டவை. ஒருமுறை எடை ஏறிவிட்டால், மீண்டும் பழைய நிலைக்கு வருவது சவாலாகிவிடும். இதனால்தான் பெரும்பாலான நடிகைகள் புத்திசாலித்தனமாக எஸ்கேப்பாகிவிடுகிறார்கள்.

ஆனால், ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அந்த ஆபத்தான விளையாட்டில் தெரிந்தே அனுஷ்கா இறங்கினார். குண்டுப்பெண் கதாபாத்திரத்துக்காக 20 கிலோ அதிகரித்தார். அனுஷ்காவின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி, படம் பெரிதாகப் போகவில்லை. அதைவிட பெரிய சோதனையாக எடையைக் குறைத்து மீண்டும் பழைய நிலைக்கும் வர முடியவில்லை. இதனால் ‘பாகுபலி 2’ படத்தில் அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க கிராபிக்ஸ் எல்லாம் செய்ததாகக் கேள்வி.

அடிப்படையில் ஒரு யோகா மாஸ்டராக இருந்தும், உணவு விஷயத்தில் அதிக அக்கறை கொண்டவராக இருந்தும் அனுஷ்கா தடுமாறினார். ‘நாங்கதான் அப்போவே சொன்னோம்ல…’ என்று ஆரூடம் சொன்ன எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனால், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை இப்போது சாதித்துக் காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் தனது லேட்டஸ்ட் ஸ்லிம் புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் அனுஷ்கா வெளியிட்ட போது இணையதளம் அதிர்ந்தது. ‘எப்படி…. இப்படி…’ என்று கேட்டவர்களுக்கு அவர் சொன்ன எளிமையான பதில்....

‘எடை குறைப்பை மேற்கொள்ளும்போது அது ஆரோக்கியக் கேட்டில் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது. இந்த விழிப்புணர்வுடன் எடையைக் குறைக்க முறையாக முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். முக்கியமாக செயற்கையான சிகிச்சைகளோ, மாத்திரைகளோ எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கொழுப்பைக் கரைக்க தினசரி லெமன் வாட்டர், சுவாசப்பயிற்சிகள், முறையான மருத்துவ ஆலோசனைகள் போன்ற எளிமையான வழிமுறைகளே போதும் என்கிறார். தனக்கு வழிகாட்டிய பிரபல வாழ்வியல் மேலாண்மை நிபுணர் லூக் கோட்டின்ஹோவுடன் இணைந்து இந்த லைஃப்ஸ்டைல் மாற்றத்தை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார் அனுஷ்கா. வாழ்த்துகள்... இன்னொரு ரவுண்ட் வாங்க மேடம்!

- ஜி.ஸ்ரீவித்யா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்