SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்றென்றும் புன்னகை!

2019-06-19@ 12:59:26

நன்றி குங்குமம் டாக்டர்

Dental Care


உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது உடல் அழகைப் பேணிப்பாதுகாப்பதில் பற்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ‘பல் போனால் சொல் போச்சு’ என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதற்கு இணையாக பற்கள் கெட்டுப்போனால் உடல் நலன் முழுவதும் பாழாகிவிடும்.

* நம்முடைய உடல் நலனைப் பேணுவதில், வாய், பற்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் சத்தான உணவுகளை, நன்றாக மென்று செரிமான மண்டலத்துக்கு அனுப்ப உதவுவது பற்கள்தான்.

* பற்கள் சீழ் பிடித்தல், துளை ஏற்படுதல், பற்குழி உலர்ந்து காணப்படல், வாய் வறண்டு போதல், துர்நாற்றம் வீசும் வாய், பல் ஈறு அழற்சி(ஈறுகளில் எரிச்சல் உணர்வு), வாய் புற்றுநோய் போன்றவற்றால்தான் நம் பற்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* வாய்ப்பகுதியில் துர்நாற்றம், ஈறுகள் சிவந்து காணப்படுதல், வலி மற்றும் வீக்கம், பற்குழிகளில் ஏற்படுகின்ற வலி மெல்லமெல்ல காதுகளுக்குப் பரவுதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வைத்து பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதை துல்லியமாகக் கண்டறியலாம்.

* காயம் அடைந்த பற்களைச் சுற்றி சீழ் உருவாகுதல்(Abscessed Tooth), பற்களில் துளை ஏற்படுதல்(Cavities), ஈரத்தன்மை அற்ற பற்குழி(Dry Socket), பல் ஈறு அழற்சி அல்லது ஈறுகளில் எரிச்சல் தன்மை(Gingivitis), வாய் வறண்டு போதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல், வாய் புற்றுநோய் போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

* காயம் அடைந்த காரணத்தால் சீழ் பிடித்த பற்களைக் குணப்படுத்துவதற்கு, தொற்று எந்த அளவிற்குப் பரவியுள்ளதோ அந்த அளவிற்குச் சிகிச்சை தேவைப்படும். சீழால் பாதிக்கப்பட்ட ஒரு சில பற்களைக் குணப்படுத்துவதற்கு ஆன்டிபயாடிக் அல்லது சீழை வெளியேற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.

* தினமும் தவறாமல் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் மற்றும் பற்களைச் சுத்தம் செய்தல் போன்ற சுகாதாரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்குழி வராமல் தடுக்க உதவும்.

* மேலோட்டமாக காணப்படுகிற பற்குழியை ஃபில்லிங் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதற்கு மாறாக, கடுமையான விளைவுகளை உண்டாக்கக்கூடிய விதத்தில், பரந்து காணப்படுகிற பற்குழி சிதைவை டிரில்லிங் செய்து அகற்ற வேண்டும். பின்னர் மீதமுள்ள பற்களின் மீது கிரவுன்(Crown) பொருத்த வேண்டும். ஒருவேளை சிதைவு பற்கூழ் வரை பரவியிருந்தால் வேர்துளை சிகிச்சை தேவைப்படலாம்.

* உலர்ந்த பற்குழி(Dry Socket), பல் ஈறு அழற்சி அல்லது ஈறுகளில் எரிச்சல், வாய் வறண்டு காணப்படல், வாய் துர்நாற்றம் மற்றும் வாய் புற்று நோய் போன்றவையும் நமது பல் அமைப்பைக் கெடுக்கும் காரணிகளில் குறிப்பிடத் தகுந்தவையாகும்.

* வறண்ட பற்குழி ஏற்பட்டு இருப்பதை பல் பிடுங்கப்பட்ட இடத்தில் ரத்தம் கட்டிக்கொள்ளுதல், வாய்ப்புறத்தில் ஏற்படும் கடுமையான வலி மெல்லமெல்ல காதுகளுக்குப் பரவுதல், துர்நாற்றம் வெளிப்படல் முதலானவை உலர்ந்த பற்குழியின் அறிகுறிகளாக நிபுணர்கள்
அறிவுறுத்துகிறார்கள்.

* கட்டி அல்லது புண் வாயில் தோன்றுதல், சிவப்பு அல்லது வெள்ளை நிற திட்டுக்கள் வாயின் மென்மையான பகுதியில் காணப்படல் போன்றவை வாய்புற்றுநோய்க்கான(Oral Cancer) அடையாளங்களாகவும் பல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

* ஈறுகளில் உண்டாகிற எரிச்சலில் இருந்து மீண்டுவர ஆரம்பக்கட்ட நிலையிலேயே சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை பிரஷ் பண்ணுதல், வாய் கொப்பளித்தல் ஆகியவையும் ஈறு எரிச்சலைக் குணப்படுத்தும்.

* பற்களைப் பாதிக்கிற காரணிகளில் முக்கியமானதாக திகழ்கிற வாய்ப்புற்றுநோயைக் குணப்படுத்த, பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில், ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி முக்கியமானவை.

- விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

 • HeatWaveBakesUS

  அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

 • DeraTalibanAttack

  பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்