SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருமிளகு 10 குறிப்புகள்

2019-06-17@ 17:22:25

நன்றி குங்குமம் டாக்டர்

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்று நம்பிக்கையோடு சொல்லும் அளவுக்கு மகத்துவம் கொண்டது மிளகு. இதில் வெள்ளை மிளகு, கருமிளகு என இரண்டு வகைகள் உண்டு. இதில் நாம் அதிகம் பயன்படுத்தும் கருமிளகு பற்றி 10 குறிப்புகளைப் பார்ப்போம்...

* கருமிளகுடன் நெய் சேர்த்து சாப்பிடும்போது, அது பசியின்மையை நீக்கி பசியைத் தூண்டுகிறது.

* இது உமிழ்நீரை சுரக்கச் செய்வதால் உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, எல்லாவித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது. இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

* கருமிளகில் உள்ள Antimicrobial கலவைகள் உணவினை புதிதாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

* இது ஆன்டி ஆக்சிடென்ட்டுகளைப் பெற்றிருப்பதோடு, வைட்டமின் ஏ, சி,கே போன்றவற்றையும் நல்ல அளவிலே பெற்றிருக்கிறது.

* இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு, அழற்சி மற்றும் கீல்வாதத்தின் விளைவுகளுக்கு எதிர்ப்  
பொருளாகவும் செயல்படுகிறது.

* இது இருமல் சிகிச்சையில் நல்ல சுவாசத்திற்கு உதவுகிறது. இருமல், சளி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் மிக நல்ல மருந்தாக உள்ளது.

* நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

* கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து அதை அப்படியே மூடி வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்க வேண்டும்.

* மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி  இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி. தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக்கட்டுதல் நீங்கும்.

* மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் போன்ற உறுப்புகள் நன்றாக இயங்கும்.

தொகுப்பு:  க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

 • nevadaarea11

  அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்