SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செயற்கை கருப்பை கண்டுபிடிச்சாச்சு!

2019-06-10@ 15:54:41

நன்றி குங்குமம் டாக்டர்

கர்ப்பம், குழந்தை, தாய்மை  என்பதெல்லாம் உணர்வுப்பூர்வமான விஷயமாக இனி இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், குழந்தை பிறப்பு என்பது வாழ்க்கையில் செய்து முடிக்க வேண்டிய ஒரு தொல்லையாக / ப்ராஜெக்ட்டாக மாறிக் கொண்டிருக்கிறது. நவீன உலகத்தின் இந்த மனநிலைக்கேற்ப ஓர் ஆராய்ச்சியைச் செய்து வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக கருப்பையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு இயற்கையான கருப்பையில் குழந்தை எப்படி பாதுகாப்பாக இருக்குமோ, அந்த கரு வளர்வதற்கு சாதகமான அம்சங்கள் என்னென்னவோ அவை எல்லாமே இருக்கும் வண்ணம் இந்த கருப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, இயற்கையாக ஒரு பெண்ணின் கருப்பைக்குள் Amniotic fluid இருக்கும். அதேபோல் இந்த உபகரணத்திலும் Amniotic fluid கருவின் வளர்ச்சிக்காக நிரப்பப்பட்டிருக்கும்.

குழந்தை சுவாசிப்பதற்கும், அதன் நுரையீரல் வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும் தேவையான சகல அம்சங்களையும் கொண்டதாக இந்த Artificial Womb உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளும் ஒரு முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு செயற்கை கருப்பையில் ஆட்டுக்குட்டிகளின் கருவினை 115 நாட்கள் வைத்திருந்து, 8 ஆட்டுக்குட்டிகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பத்துக்கு Ex-Vivo uterine environment(EVE) என்று பெயர்.  

இதனை அடுத்தகட்டமாக மனிதகுலத்துக்கும் பயன்படும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் மூலம் பெண்கள் 9 மாதம் ஒரு கருவை சுமக்க வேண்டிய அவஸ்தை, பிரசவ நேர வலி, அலுவலக வேலை பாதிப்பது மற்றும் விடுமுறை எடுப்பது, பிரசவ கால மரணம், வாடகைத்தாய் முறை போன்றவற்றைத் தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

எந்த ஒரு மருத்துவ கண்டுபிடிப்புக்கும் அமெரிக்காவின் Food and Drug Administration அனுமதி தேவை. அப்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். எனவே, FDA நிர்வாகத்திடம் தற்போது பேச்சுவார்த்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

- ஜி.ஸ்ரீவித்யா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

 • china_pramdanm1

  சீனாவில் அடுத்த பிரமாண்டம் : 39,000 சதுர மீட்டர் பரப்பிலான உலகின் மிகப்பெரிய கோளரங்கம் உருவாக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்