SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வினையாகும் விளையாட்டு...

2019-05-06@ 16:59:08

நன்றி குங்குமம் டாக்டர்

விளையாட்டில் ஈடுபடும் யாருக்கும் அடிபடுவதும், காயங்கள் ஏற்படுவதும் சகஜம். சில பிரச்னைகள் அவர்களுடைய விளையாட்டுத் திறனையே பாதிக்கும். விளையாட்டு வீரர்களை பாதிக்கும் பொதுவான பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி பார்ப்போம்.

பொதுவான பிரச்னைகள்

கணுக்கால் சுளுக்கு, இடுப்பு இழுப்பு, தொடை எலும்பு திரிபு, முழங்காலுக்கு கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதியில் ஏற்படும் பிளவு முழங்கால் காயம். கணுக்கால் சுளுக்குவிளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பரவலான பிரச்னை இது. இதை குணப்படுத்துவதும் சுலபம். பெரியளவிலான சிகிச்சைகள் தேவைப்படாது.

குணமானதும் முறையாக உடற்பயிற்சி செய்து உடலின் வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எலும்பு மருத்துவரிடம் கேட்டால், மீண்டும் இதே பிரச்சனை வராமலிருப்பதற்காக கால்களுக்கான பிரத்யேக பயிற்சிகளை சொல்லித் தருவார்.

இடுப்பு இழுப்பு

கணுக்கால் சுளுக்கைவிட மோசமான பிரச்னை இது. அடிக்கடி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டியிருக்கும். நிறைய ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யாவிட்டால் பிரச்னை இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்ட இடத்துக்கு வேலையும், அழுத்தமும் கொடுத்தால் சீக்கிரம் குணமாகாது.

தொடை எலும்பு திரிபு

இது குணமாக நீண்ட காலம் எடுக்கும். பலருக்கும் குறைந்த பட்சம் 5 வாரங்களுக்குப் பிறகே சரியாகும். பின்னந்தொடை தசைகள் பாதிக்கப்படுவதாலேயே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதிலிருந்து மீள பிசியோதெரபி சிகிச்சையும், உடற்பயிற்சிகளும் தேவை. அரிதாக சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

முழங்காலுக்கு கீழும், கணுக்காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதியில் ஏற்படும் பிளவு, தீவிரமாக ஓடுபவர்களுக்கு இந்தப் பிரச்னை வரும். இதை குணப்படுத்த ஐஸ் ஒத்தடம், வலி நிவாரண
மாத்திரைகள் போன்றவையே போதும்.

முழங்கால் காயம்

இது கொஞ்சம் சீரியசான பிரச்னைதான். அடிபட்ட இடத்தையும் காயத்தின் தீவிரத்தையும் பொறுத்து சிகிச்சைகள் முடிவு செய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.மருத்துவரைப் பார்க்கும்போது...சிகிச்சைக்காக பிசியோதெரபிஸ்ட்டிடம் செல்லும்போது உங்களுடைய பிரச்னைக்கான காரணத்தைக் கேட்டறிவார். கூடவே உங்களுடைய உடல்நலம், வேறு பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் போன்ற தகவல்களை கேட்பார். உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட இடத்தை முழுமையாகப் பரிசோதிப்பார். அதன் பிறகு உங்களுக்கான சிகிச்சைகள் ஆரம்பமாகும்.

ஐஸ் பேக்

தீவிரமான விளையாட்டு காயங்களுக்கு ஐஸ் பேக் வைப்பது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும். அடி பட்டதன் காரணமாக ஏற்பட்ட வலி மற்றும் வீக்கத்தை இது குறைக்கும். உங்கள் பிசியோதெரபிஸ்ட் ஐஸ் பேக்கை டவலில் சுற்றி காயம்பட்ட இடத்தில் இருபது நிமிடங்களுக்கு சிகிச்சை அளிப்பார்.

ஹாட் பேக்

அடிபட்டதன் காரணமாக உங்களுக்கு வீக்கம் எதுவும் இல்லை என்றால் உங்கள் பிசியோதெரபிஸ்ட் ஹாட் பேக்கை டவலில் சுற்றி அடிபட்ட இடத்தில் வைப்பார். இதுவும் இருபது நிமிடங்களுக்கு வைக்கப்படும். இந்த சிகிச்சை வலியைக் குறைப்பதுடன் தசை மற்றும் மூட்டுகளின் இறுக்கத்தையும் சரியாக்கும். அடிபட்ட இடத்துக்கு ரத்த ஓட்டமும் சீராக பாயச்செய்யும்.

TENSTENS

பேட்டரியின் உதவியுடன் இயங்கும் கருவி இது. இதன் வழியே சிறிய அளவிலான மின்சாரம் சருமத்தில் செலுத்தப்படும். இந்தக் கருவியை இயக்கும்போது மெலிதான அதிர்வை உங்களால் உணர முடியும். இந்த சிகிச்சை தற்காலிகமாக வலியை குறைக்கும்.

அல்ட்ரா சவுண்ட்

ஒலி அதிர்வுகளை திசுக்களுக்கு செலுத்தும் கருவி இது. இதன் உதவியுடன் ஆழமான திசுக்கள் சூடேற்றப்படும். அந்தத் திசுக்களை மென்மையாக்கவும், அடிபட்ட காயம் சீக்கிரமே ஆறவும் உங்கள் பிசியோதெரபிஸ்ட் இந்த அல்ட்ரா சவுண்ட் கருவியைப் பயன்படுத்துவார்.

மசாஜ்

கைகளால் செய்யப்படுகிற சிகிச்சை இது. வீக்கத்தைக் குறைக்கும். இறுகிப்போன தசைகளைத் தளர்த்தும். வலியையும் குறைக்கும்.

Motion exercise

மூட்டுகளின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிற்சி இது. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு செய்து வந்தால் மூட்டுகளையும், தசைகளையும் இறுகிப்
போகாமல் காப்பாற்றலாம்.

வலுவூட்டும் பயிற்சிகள்

உடல் உழைப்பே இல்லாமல் பல நாட்களுக்கு இருப்பது தசைகளை பலவீனமாக்கும். வலுவூட்டும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் தசைகள் நெகிழ்வுத்தன்மையுடன் மாறும். பலவீனமாக இருக்கும் தசைகள் வலுப்பெறும்.

நடைப்பயிற்சி

முழங்கால்களில் அடிபட்டிருந்தால் வாக்கர் அல்லது பிடிமானத்தின் உதவியுடன் கால்களுக்கு அழுத்தம் தராமல் நடைப்பயிற்சி கொடுக்கப்படும். எந்த மாதிரியான கருவியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் பிசியோதெரபிஸ்ட் கற்றுத் தருவார். விளையாட்டின்போது ஏற்படுகிற காயங்களும் அடிபடுதலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். முழு நேரமும் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமன்றி எப்போதாவது விளையாடுபவர்களுக்கும் இது நிகழலாம். பெரும்பாலான விளையாட்டு விபத்துக்கள் தசைகளையும் எலும்புகளையும்் பாதிக்கும்.

விளையாட்டு விபத்துகளை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டவுடன் ஓய்வெடுத்தது, ஹாட் டவல் சிகிச்சையளிப்பது, அடிபட்ட இடத்திற்கு ஆதரவளிக்கக் கூடிய பேண்டேஜ்களை அணிவது போன்றவை முக்கியம். அடுத்த கட்டமாக மருத்துவரை அணுக வேண்டும்.பெரும்பாலான காயங்களுக்கு மாத்திரைகள், வீக்கம் மற்றும் சுளுக்கை சரி செய்யும் க்ரீம் மற்றும் ஸ்பிரே போன்றவையே போதுமானதாக இருக்கும். சிகிச்சை முடிந்ததும் முறையான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பயிற்சிகள் தசைகளையும் எலும்புகளையும் உறுதியாக்கும்.

வலியின் தீவிரத்தைப் பொறுத்து உங்கள் மருத்துவர் தேவைப்பட்டால் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி வலியையும் வீக்கத்தையும் குறைக்க முயல்வார். எலும்புகள் உடைந்து போனாலும் பிளவுபட்டு இருந்தாலும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மிக மோசமான விபத்து என்றால் இன்டர்வென்ஷனல் பெயின் ரிலீவிங் சிகிச்சைகள் அளிக்கப்படும். இதில் Stem cell therapy, நியூரோ மாடுலேஷன் டெக்னிக் போன்றவை அடக்கம். இந்த சிகிச்சையில் திசுக்களுக்கு துளிகூட சேதாரம் ஏற்படாது.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்