SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்

2019-04-25@ 15:08:47

நன்றி குங்குமம் தோழி

*    வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து  வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

*    வாழைப்பூவானது ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தம், ரத்த சோகை  போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

*    ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது.  இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

*    இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு  வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள்  ஆறும்.

*    மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்  பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.  வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

*    பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை,  வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்
- ஏ.எஸ்.ேகாவிந்தராஜன், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்