SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலம் தரும் பசலைக்கீரை

2019-04-04@ 16:05:25

நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து

பார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, அதே அளவில் மருத்துவப் பயன்களும் நிறைந்தது. தமிழ்நாடு உள்பட வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் பசலை உணவில் கீரையாகவும், மருத்துவத்தில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Spinach என்ற பெயரால் குறிப்பிடப்படும் இதன் பயன்கள் பற்றி உணவியல் நிபுணர் பத்மினி விளக்குகிறார்.

‘‘உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அப்படி மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ற சிறப்பான உணவு என்று பசலைக்கீரையினை சொல்லலாம். சராசரியாக 100 கிராம் பசலைக் கீரையில் 79 கிராம் கலோரி, கார்போஹைட்ரேட் - 3.4 கிராம், கொழுப்பு - 0.3 கிராம், புரதம் - 1.8 கிராம், தயாமின் - 0.05 mg, ரிபோஃப்ளேவின் - 0.155 mg, நியாசின் - 0.5 mg, வைட்டமின் பி 6 - 0.24 mg, கால்சியம் - 109 mg இரும்பு - 1.2 mg, மக்னீசியம் - 65 mg, மாங்கனீசு - 0.735 mg, பாஸ்பரஸ் - 52 mg, பொட்டாசியம் - 510 mg, துத்தநாகம் - 0.43 mg ஆகியவற்றுடன் வைட்டமின் ஏ, ஈ, ஃபோலிக் அமிலம் போன்றவையும் நிறைந்திருக்கிறது.

பசலைக் கீரை துவர்ப்புச் சுவை உடையதாக இருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. கீரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படுகிற புண்களை விரைந்து ஆற்றுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிகுந்த கீரையாக இருக்கிறது. ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகள் தொடர்ந்து எடுத்து வரலாம். கர்ப்பிணி பெண்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் இந்த பசலைக் கீரையை தினமும் பருப்போடு சேர்த்து கடைந்தும் உண்ணலாம்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு உணவு கொடுக்கத் தொடங்கும்போது கீரை உணவுகளில் பசலை கீரையை பருப்போடு கடைந்து சாதத்தில் பிசைந்து கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள், வளரும் குழந்தைகள், முதியவர்களுக்கு பசலை கீரை அருமருந்து. இவர்கள் வாரத்திற்கு 5 நாட்கள் வரை பசலைக் கீரையை உணவில் எடுத்து வருவது நல்லது. பசலைக்கீரை ரத்தப் புற்றுநோய், எலும்பு புற்றுநோய்  ஆகிய இரண்டு நோய்களையும் தடுக்கிறது. புற்றுநோய் வந்தவர்களுக்கு அதன் தாக்கத்தையும் பெருமளவு குறைக்கிறது.

நீரிழிவு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் எடுத்துக் கொள்ளலாம். கீரை நல்லது என்பதற்காக அதிகம் உட்கொள்ளவும் கூடாது. ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு வரை எடுத்துக் கொள்ளலாம். பசலைக் கீரையில் சூப் செய்து வளரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தினமும் கொடுப்பது நல்லது. பசலைக்கீரையில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் மட்டும் பசலைக்கீரையை தவிர்ப்பது நல்லது.’’

- க.இளஞ்சேரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்