SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய் எதிர்ப்பாற்றலை அழிக்கும் ஹெச்ஐவி வைரஸ்

2019-03-01@ 14:34:19

எச்ஐவி. மற்றும் எய்ட்ஸ் என்ற கூற்றுக்கும், தன்மைக்கும் வேறுபாடு உண்டு. எச்ஐவி என்பது ஒரு வைரஸ். அது ஒருவர் உடலைத் தொற்றும் போது சம்பந்தப்பட்டவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. அதனால் படிப்படியாக பலம் இழப்பதால் சுற்றியுள்ள பல நோய்கள் அவரைத் தொற்றி பாதித்து வரும் பல நோய்களின் கூட்டு பாதிப்பு நிலையே எய்ட்ஸ் ஆகும். எச்ஐவி.யின் அடுத்த நிலையே எய்ட்ஸ். எச்ஐவி தொற்றுள்ளோர் அல்லது பாசிட்டிவ் என்று கூறப்படுவோர்க்கு பெரும்பாலும் எந்த நோய்களின் அறிகுறிகளும் இருக்காது.

எல்லா பணிகளையும் மற்றவர்களைப் போல நார்மலாக மேற்கொள்ள முடியும். ஆய்வு அறிக்கையின்படி 9 ஆண்டுகள் வரையிலும் கூட எச்ஐவி தொற்றுள்ள பலரும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளனர். உடலில் புகுந்த எச்ஐவி மெதுவாக நோய் எதிர்ப்பிற்காக உள்ள வெள்ளையணுக்களை அழித்துக் கொண்டிருக்கும். தொற்று ஆரம்பத்தில் உடலில் உள்ள வெள்ளையணுக்கள் அழிய, அழிய புதியவை அதற்கு மாற்றாக வளரும். ஆனால் நோய்நிலை முற்றும்போது வெள்ளையணுக்களின் எண்ணிக்கை(சிடி4) எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். தொற்றுள்ளவர்களுக்குப் சளி உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்கள் திரும்பத் திரும்ப வரும். இந்தநிலைதான் எய்ட்ஸ். இந்தநிலை வர பல ஆண்டுகள் ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்