SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை!

2019-02-27@ 14:26:45

நன்றி குங்குமம் டாக்டர்

ஓரிதழ் தாமரை என்ற பேரை அநேகமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு இது ஒரு வகையான தாமரையோ என்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆண்மைத் தன்மைக்கு சிறந்தது எனவும் சிலர் சொல்வதுண்டு. இவை எல்லாம் உண்மைதானா என்பது உள்பட மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம்.

‘‘ஓரிதழ் தாமரையை ரத்தின புருஷ் என்றும் சொல்வர். இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளர்கிறது. ஒரே இதழ் கொண்ட மலர் என்பதாலும் தாமரை பூவின் நிறத்தில் இருப்பதாலும் இந்த செடியை ஓரிதழ் தாமரை என்கின்றனர். ஓரிதழ் தாமரை சம நிலத்தில் வளரும் மிகச்சிறிய செடியினமாகும். இது ஓரளவு ஈரப்பதம் மிக்க நிலங்களில் அதிகம் வளரும். ஓரிதழ் தாமரை தற்போது அதிகளவில் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலை, தண்டு, பூ, வேர் மற்றும் காய் போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. பொதுவாக ஓரிதழ் தாமரை உடல் களைத்து, பலமிழந்து காணப்படும் அனைவருக்கும் மருந்தாக பயன்படுகிறது. ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உடலினை தேற்றி, பலம் உண்டாக்க ஓரிதழ் தாமரை மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

ஓரிதழ் தாமரை சமூலம் 10 கிராம், பச்சைக் கற்பூரம்  3 கிராம், பசுவின் நெய் 10 மிலி ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து வெளி பிரயோகமாக பயன்படுத்தி வர, மேக வெட்டினால் உண்டாகும் புண்கள் மற்றும் மண்டை நோய்கள் ஆகியவை தீரும். இதேபோல ஓரிதழ் சமூலம்  5 கிராம், நீர்  200 மிலி, ஓரிதழ் தாமரை முழுச் செடியினையும் எடுத்துக் கொண்டு நீர் விட்டு காய்ச்சி கொதிக்க வைத்து அந்த நீரினை கால் பங்காக வற்ற வைத்து காலையில் குடித்து வர காய்ச்சல், இரைப்பு ஆகியவை நீங்கும். உடலுக்கு நோய் எதுவும் வராமல் பாதுகாத்து நீண்ட நாட்கள் வாழ செய்யும் குணங்களை உடைய மூலிகையினை காயகல்ப மூலிகை என்று கூறுவார்கள். அந்த வகையில் ஓரிதழ் தாமரை காயகல்பத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வரலாம்.

ஆண்மைத்தன்மை அதிகரிக்க இதன் வேர் முதல் பூ வரை சமூலமாக எடுத்துக்கொண்டு சுண்டக்காய் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர ஆண்தன்மை அதிகரிக்கும். பலமின்மை குறைந்து ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். இதன் சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு அதனுடன் 50 மிலி ஆட்டுப்பால் சேர்த்துக் குடித்து வர இழந்த ஆண்தன்மை மீண்டும் உண்டாகும். இதனை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு அழகும் பலமும் அதிகரிக்கும். ஓரிதழ் தாமரையின் முழுச்செடியை எடுத்துக்கொண்டு கற்கமாக அரைத்து அரை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் கீழாநெல்லி இலையையும் கற்கமாக அரைத்து எடுத்துக்கொண்டு தினமும் இதனை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலையில் சாப்பிட்டு வர வயது முதிர்ச்சி நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.’’
 
தொகுப்பு: சக்தி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

 • nortkorean_adhibar1

  வடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்

 • 25-04-2019

  25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்