SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழுவெட்டு

2019-02-13@ 14:40:29

நன்றி குங்குமம் டாக்டர்

அழகே... என் ஆரோக்கியமே...


பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் முடி கொட்டுதல் பிரச்னை பற்றி இதற்கு முன்பு பார்த்தோம். சிறுவர், சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் ‘புழுவெட்டு’ பற்றி இந்த இதழில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனக்கு இருக்கும் புழுவெட்டைப்பற்றி தெரியாது. முடி வெட்டுபவரோ அல்லது அருகில் இருப்பவரோ சொல்லித்தான் தெரிய வரும். சிறு வட்டமாக முடி கொட்டி இருக்கும். இது தலையில் ஒன்றிரண்டு முதல் பல இடங்களில் வரலாம். அது மட்டுமில்லாமல் சிலருக்கு மீசை/தாடி போன்ற இடங்களிலும் வரலாம்.

மரபணுக்களில் HLA DQ3 DR4, மற்றும் DR 11 போன்ற வகையினருக்கு இப்பாதிப்பு ஏற்படலாம். இந்நோயை ஆங்கிலத்தில் Alopecia Areata என்றழைப்பார்கள். இது ஒரு வகையான Autoimmune Disorder. அதாவது நம்முடைய எதிர்ப்பு சக்தியானது எப்போதும் நம் உடலினுள் உள்ள செல்களை எதிர்த்து போரிடாது. மனித உடலின் சில தளங்கள் நோய் எதிர்ப்புக்குரிய சலுகையைக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு அழற்சி நோயெதிர்ப்பு பிரதிசெயலைப் பெறாமலேயே, அவற்றால் உடலில் ஆன்டிஜென்களின் அறிமுகத்தை சகித்துக்கொள்ள முடியும்.

இதன் பொருள் அவர்கள் அழற்சி எதிர்ப்பு நோயைத் தவிர்ப்பதற்கு இல்லாமல் ஆன்டிஜென்களின் அறிவை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதை Immune privilege என்று சொல்வோம். எந்தெந்த செல்களில் இந்த Immune privilege பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த சுய எதிர்ப்பு(Autoimmune Disorders) நோய்கள் ஏற்படுகிறது. இந்த நோய் மற்ற Autoimmune Disease-களான Hashimoto’s Thyroiditis, Addison’s Disease, Vitilago Pernicious Anaemia, Systemic Lupus Erythematosus போன்றவைகளோடு சேர்ந்தும் சிலருக்கு தோன்றலாம்.

சர்க்கரை நோய், பெப்டிக் அல்சர் போன்ற நோய்களுடனும் வரலாம்.Atopic வகையைச் சேர்ந்த Alopelia Areata, ஒற்றை தலைவலி, Dust allergy, ஆஸ்துமா போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். Pre Hypertensive Type என்பது ரத்தக்கொதிப்பு வருவதற்கு முன்பு அல்லது பெற்றோர்கள் யாருக்காவது ரத்தக்கொதிப்பு இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு வருவது.

இந்த Alopecia Areata என்று அழைக்கப்படும் புழுவெட்டு நோய்க்கும் புழுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது ஒரு தொற்று நோய் அல்ல. இது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது. இது சின்னதாக இருந்தாலோ ஒன்றிரண்டு இருந்தாலோ பரவாயில்லை. ஆனால், நிறைய ஏற்படுமாயின் பாதிப்பின் அளவைப் பொறுத்து இதை பல வகையாகப் பிரிக்கலாம்.

* Alopecia Areata of Beard - தாடியில் ஏற்படும் புழு வெட்டு
* Alopecia Areata of Eyelashes - கண் இமைகளில் ஏற்படும் புழு வெட்டு
* Alopecia Areata of Eyebrows -
புருவங்களில் ஏற்படும் புழு வெட்டு
* Alopecia Areata of Body Hair - உடம்பில் உள்ள முடிகளில் ஏற்படுவது.

தலையில் ஏற்படும் Alopecia Areata-வில் Reticulate Type, Sisiapho, Ophiasis, Diffuse Type  என பல வகைகள் உள்ளன. மேற்சொன்ன வகைகள் தவிர, எவ்வளவு சதவீதம் முடி கொட்டியிருக்கிறதோ அதைப் பொறுத்து AA Circumscripta, AA Subtotalis, AA Totalis, AA Universalis போன்ற வகைகளும் உள்ளன.தலையில் உள்ள முடி முழுவதும் இந்த புழு வெட்டால் கொட்டினால் இதை Alopecia Totalis என்று அழைப்போம்.

தலைமுடியோடு சேர்த்து உடம்பில் உள்ள முடி அனைத்தும் கொட்டிப் போனால் அதை  Alopecia Universalis என்று அழைப்போம். இவ்வகையில் இமைகள், புருவம், மூக்கு மற்றும் காதில் உள்ள முடிகள்கூட கொட்டும். ஆனால், இவ்வகை கொஞ்சம் அரிதுதான். அதனால் கவலை கொள்ள வேண்டாம்.

இந்த புழுவெட்டில் உண்டாகும் முடி இழப்பில் முடியின் வேர்கால்களில் தழும்பு ஏதும் ஏற்படாததால் முடி திரும்பவும் முளைக்கும். 80% ஒரு patch -தான் இருக்கும். 2.5% இரண்டு patch-கள் இருக்கும். 7.7% பல முடியில்லா patch-கள் இருக்கும். இந்த புழுவெட்டால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நகங்கள் சொரசொரப்பாக மாறலாம். 20 Nail Dystrophy என்ற நக பாதிப்பும் ஏற்படலாம்.

சரி, இதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது? ஒரே ஒரு patch இருந்தால் சிகிச்சை எதுவும் செய்யாமல்கூட திரும்பவும் முடி முளைக்கலாம்...

ஒன்றுக்கு மேற்பட்ட patches இருந்தால் கண்டிப்பாக சிகிச்சை செய்ய வேண்டும். ஸ்டீராய்ட் களிம்புகள், Tacrolimus, Minoxidil lotion போன்ற மருந்துகளை தடவலாம். நிறைய இடங்களில் வட்டம் வட்டமாக முடி கொட்டியிருந்தால் ஸ்டீராய்ட் மாத்திரைகள், Cyclosporine, Methotrexate, Puva Therapy போன்ற சிகிச்சை முறைகளும் செய்ய வேண்டி இருக்கலாம்.

சில நேரங்களில் Contact irritants-Anthralin போன்ற கிரீம்களை தடவியும், சிறிது சிறிதாக க்ரீம்கள் தடவி வைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியும் சிகிச்சை செய்யலாம். தனக்கிருக்கும் இந்தப் பிரச்னையைப்பற்றி மிகுந்த கவலை கொள்பவர்களாக இருந்தால், குணமான பின்பும், திரும்பவும் இதேபோல் ஏற்படலாம். ஆகையால், சிகிச்சை மேற்கொள்ளும் போதும், சிகிச்சைக்குப் பின்பும் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

சிறுவர், சிறுமியர்களுக்கு இதேபோல் வட்டமாக முடி கொட்டியிருந்தால் வேறு சில நோய்களும் காரணமாகலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் மொட்டை அடித்த பிறகு, இதுபோல் வட்டம் வட்டமாக முடி கொட்டியிருந்தால் அது தலைமுடியை பாதிக்கும் ஒருவகை படர்தாமரையான Tinea Capitis ஆக இருக்கலாம்.

வழிபாட்டுத் தளங்களில் மொட்டை அடிக்கும்போது நன்கு கவனித்து பார்த்தீர்கள் என்றால், ப்ளேடை மட்டும்தான் மாற்றுவார்களே தவிர, அவர்கள் உபயோகப்படுத்தும் தண்ணீரை மாற்ற மாட்டார்கள். ஒருவருக்கு மொட்டை அடித்த பின்பு, அடுத்தவருக்கு செய்யும் முன் கையை சோப்பு போட்டு கழுவவும் மாட்டார்கள்.

12-14 வயது வந்த பின்புதான் தலையில் எண்ணெய் பசை அதிகமாகும். அந்த எண்ணெயான Sebum-க்கு இந்த பூஞ்சைகளை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. ஆனால், சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளுக்கு தலையில் எண்ணெய் இல்லாததால் அவர்களுக்கு எளிதில் Tinea Capitis ஏற்படலாம். அந்த பாதிப்பு இருக்கும்போது வட்டம் வட்டமாக முடி இல்லாததோடு, முடி இல்லாத இடத்தில் கொஞ்சம் தோலும் உரிந்து காணப்படும். ஒரு சிலருக்கு முடிகள் அப்படியே உடைந்து காணப்படும். இந்த பாதிப்புக்கு பூஞ்சைகளை கட்டுப்படுத்தும்  Antifungal Tablets, Cream மற்றும் ஷாம்பு
உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல் இன்னொரு நோயான Trichotillomania-வாலும், வட்ட வட்டமாக முடி கொட்டியிருக்கும். இது பொதுவாக பெற்றோர்களின் பராமரிப்பு சரிவர கிடைக்காத பிள்ளைகள், தங்களின் மனப்பிரச்னைகளால், தங்களின் கைகளுக்கு எளிதாக கிடைக்கும் முடியை பிடித்து இழுத்து இழுத்து முடிகள் உடைந்துபோய் முடி கொட்டியிருக்கும். வட்டமாக என்பதைவிட ஒரு முக்கோண வடிவத்தில் முடி கொட்டியிருக்கும். முடியின் வேர்கால்களை Trichoscopy வைத்து பார்த்தால் அவ்விடங்களில் புள்ளி புள்ளியாக ரத்தக்கசிவும் இருக்கும்.

இந்த பிரச்னைக்கு தீர்வு என்பது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் மனப்பிரச்னைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்தாலே அவர்களை இப் பிரச்னையிலிருந்து மீட்டு விடலாம். சில வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதோடு, மனரீதியாக அவர்களுக்குச் சரியான உதவி கிடைக்குமாயின் இதை மிக எளிதாக சரி செய்துவிடலாம்.

( ரசிக்கலாம்... பராமரிக்கலாம்... )

Tags:

Puluvettu

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்