SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவுகள் பலவிதம்

2019-01-31@ 15:24:32

நன்றி குங்குமம் டாக்டர்

GOOGLE DIET

சைவம், அசைவம், செட்டிநாடு, பேலியோ, சைனீஸ், வெஸ்ட்டர்ன் என பலவிதமான உணவு வகைகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இவை அனைத்தையும் சுவைத்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால், கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்த உணவு வகைகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களின் பதில் இல்லையென்றால், கீழே வருபவற்றைத் தொடர்ந்து படியுங்கள்;  2018-ம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட டயட்டுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வீர்கள்!

ஃபாஸ்ட்டிங் டயட்

சாப்பிடாமல் இருத்தலும் (Fasting) ஒரு டயட்டா!? என ஆச்சரியப்பட வேண்டாம். இதுவும் ஒருவகை டயட்தான். ஒரு சிலர் பலமணி நேரமும், வேறு சிலர் நாள் முழுவதும் இந்த டயட்டில் இருப்பார்கள். Intermittent Fasting என குறிப்பிடப் பெறும் இந்த வகை டயட், உடல் எடையைக் குறைப்பதைக் கடந்து இதய நோய்கள், புற்றுநோய் ஆகியவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைக்கவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  

டப்ரோ டயட்

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யதார்த்தமான, வெற்றிகரமான இணையாக உலா வரும் ஹீதர் டப்ரோ - டெரி டப்ரோ ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது DD என சுருக்கமாக அழைக்கப்பெறும் இந்த Dubrow Diet . ஹீதர் டப்ரோவின் கணவரான டெரி டப்ரோ அறுவை சிகிச்சை மருத்துவரும் கூட என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த டயட்டாக கருதுகிறார்கள்.

எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்த ‘இடையீடு உண்ணா நோன்பு’ ஆகத்தான் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் நீங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் சாப்பிட வேண்டும்; மற்ற நேரங்களில் எதையும் உண்ணக் கூடாது. விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறது. மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய இவ்வகை உணவு, நீங்கள் எத்தனை மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும்; என்ன மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

ஆப்டேவியா டயட்

அண்மையில் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட டயட் வகைகளில் Optavia புதிய வரவு. உடலில் காணப்படுகிற கலோரி அளவினைக் குறைக்க, உங்களுக்கு மிக அருகில் உள்ள டயட் இதுவாகும். இவ்வகை உணவை, நீங்கள் 5-1 முதலான ப்ளான்கள் மூலம் தேர்ந்து எடுத்து கொள்ள முடியும். உயர் தரமான புரதம் மற்றும் பாக்டீரியாக்களை உள்ளடக்கிய ஆறு ஆப்டேவியா டயட் (சிறியது) தினசரி ஒருவர் சாப்பிட்டு வர, செரிமான பிரச்னை இல்லாமல் இருக்க முடியும்.  

கார்னிவோர் டயட்

இதனுடைய பெயரைப் படிக்கும்போதே, இவ்வகை டயட்டில், என்னென்ன உணவு வகைகள் இதில், இடம் பெற்றிருக்கும் என்பதை ஓரளவுக்கு நீங்கள் ஊகித்து இருப்பீர்கள்; ஆம்!  உங்களுடைய எண்ணம் சரிதான்.  பழங்கள், காய்கறிகள் மற்றும் அலுவலகத்தில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களோ இதில் இடம்பெறப்போவது இல்லை. இறைச்சியை மட்டுமே நீங்கள் சாப்பிடுவீர்கள். அதற்கு முன்னதாகவே, உங்களுக்குள் இருக்கும் ‘சுவை நாளங்கள்’ உற்சாகம் அடைந்துவிடும். இது தொடர்பான தகவல்களைக் கேட்பது உங்களின் தேவையாய் இருக்கும்.

இந்த உணவு வகைகளின் தரம், ஈடு இணையற்ற உணவினைத் தயாரிக்கும் ரெசிபிக்கு இணையானது; இதனைச் சாப்பிடுவது அவசியம். அப்படி செய்யாத பட்சத்தில், உடல் இயக்கங்களைச் சீராக்கவும், அறிவாற்றலுடன் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சிறந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடும் என்கிறார்கள். அசைவ உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், ஏற்படும் நீண்ட கால விளைவுகள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. எனவே, முடிவு எதுவும் தெரியும்வரை இந்த Carnivore டயட்டைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.     

டாக்டர் கன்ட்ரை டயட்

Dr.Gundry என்கிற தனிநபர் ஒருவரின் பெயரில், ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகள், துணை உணவுகள்(Supplements),ஸ்கின் கீரிம் மற்றும் காலந்தோறும், உணவு அடைந்த பரிமாண வளர்ச்சி பற்றிய புத்தகம் என விற்பனை செய்யப்பட்டாலும், இதயத்தின் நலனை மேம்படுத்துவதும், பல நாட்களாக நீடிக்கும் நோய்களை(உயர் ரத்த அழுத்தம் முதலானவை)வராமல் தடுப்பதும் இந்த டயட்டின் நோக்கமாகும். மூன்று கட்டங்களாக, உங்களுடைய உணவு முறையை மாற்றுவதனாலும், ஃப்ரெஷ்ஷான உணவுப்பண்டங்களை அதிகளவிலும், விலங்குகளில் இருந்து பெறப்படும் இறைச்சி, பால், தயிர், நெய் போன்றவற்றை குறைவாகவும் சாப்பிடுவதாலும் இந்த நோக்கம் சாத்தியமாகும்.

நூம் டயட்

Noom என்ற செயலியின் மூலம் கற்றுக் கொள்ளும் உணவுமுறை இது. உடல் கட்டுமானம் மற்றும் எடை குறைத்தலுக்கான சிறப்பு செயலி என ஃபிட்னஸ் உலகில் பிரபலமாக அறியப்படுகிறது. ஒரு உணவு முறை ஆரோக்கியம் அளிப்பதோடு மட்டுமில்லாமல், தன்னைப் பின்பற்றுவோருக்கு மன வலிமையினையும் வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது நூம் டயட்.

எடையைக் குறைக்க வேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஒருவரின் மனநலத்தின் மீது அக்கறை செலுத்துவது நூம் டயட்டின் ஸ்பெஷல் என்று சொல்லலாம். ஒருவர் என்ன வகை உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், எவ்வளவு நேரம் உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பதோடு நின்றுவிடாமல் ஆரோக்கியமான பயிற்சிகளுக்குப் பின்புலமாக உள்ள காரணங்களையும் நூம் கற்றுக் கொடுக்கிறது. இவை தவிர, உடல் எடையினைக் குறைக்கும்விதமாக, தவறான பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தவும், கை விடவும், ஆரோக்கியத்துக்கு உகந்த நல்லவற்றைப் பின்பற்றவும் நூம் செயலி உதவுகிறது.

மத்திய தரைக்கடல் உணவு

இத்தாலி மற்றும் கிரேக்கம்(மத்திய தரைக்கடல் நாடுகள்) போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் உண்கிற பாரம்பரிய உணவினை இந்த Mediterranean Diet பின்புலமாக கொண்டது. இந்த நாட்டு மக்கள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கெடுதலை ஏற்படுத்தாத கொழுப்பு போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். இதன்மூலம், உடல் எடையைக் குறைப்பதோடு, இதய பாதிப்பு, மன அழுத்தம் மற்றும் ஞாபக மறதி போன்ற குறைபாடுகளால் உண்டாகும் பாதிப்புக்களையும் கணிசமாகக் குறைத்துள்ளனர்.

முழு தானியங்கள், பருப்பு வகைகள், மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு போன்றவை மத்திய தரைக்கடல் டயட்டின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன. மாவுச்சத்து அற்ற உணவுப்பண்டங்கள் கொண்ட இந்த உணவு வகைகளின் தனித்தன்மையை விளக்கும் வகையில், சமீப காலமாக, அதிக முறை தேடப்பட்ட டயட்டில் இதற்குத்தான் முதலிடம்.  

Fodmap டயட்

Fermentable, Oligosaccharides, Disaccharides, Monosaccharides and Polyols என்பதன் சுருக்கம்தான் Fodmap டயட். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஒருவகை கார்போஹைட்ரேட். கோதுமை, பூண்டு, வெங்காயம் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுப்பண்டங்களில் இது காணப்படுகிறது. செரிமானப் பிரச்னைகளான, கேஸ் டிரபிள், வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் ஃபோட்மேப் டயட் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, குடல் எரிச்சல் போன்ற செரிமான குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள் இந்த வகை டயட்டினை அதிகமாக உபயோகப்படுத்துவது இல்லை.  

கீட்டோ டயட்

2018-ம் ஆண்டில், பொதுவான உணவு வகைகளில் Keto அதிகம் தேடப்பட்ட உணவு என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த டயட்டில், கொழுப்பு அதிகமாகவும், புரோட்டீன் சரியான விகிதத்திலும் காணப்படுகிறது. சக்தியைப் பெறுவதற்காக, கொழுப்பினைச் செலவழிக்கும்போது, உடலின் எடை குறைதலுக்கு வழி ஏற்படுகிறது. கீட்டோ டயட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் தட்டில், பன்றி இறைச்சி, வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி நிரம்பி காணப்படும். அதேவேளையில், இந்த உணவுப்பிரியர்கள் ப்ரெட், உருளை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ஒதுக்கி வைப்பார்கள்.

ஷெப்பர்ட்ஸ் டயட்

கடந்த ஆண்டு கூகுள் முதலான இணையதளங்களில் தேடப்பட்ட உணவுப்பட்டியலில், மதம் சார்ந்த டயட்டாக, இடம்பெற்ற ஒரே டயட் Shepherds Diet-தான். 7 நிலைகளைக் கொண்ட இந்த சிஸ்டம் ஆரோக்கியமாக சாப்பிடுதல் பற்றி மனிதர்களுக்குக் கற்று தருகிறது. இந்த வகை டயட் பைபிளில் சொல்லப்பட்ட 7 வகை பாவங்களுடன் மனித இனத்தை இணைக்கிறது. இந்த சாராம்சம், மக்கள் உணவு பற்றி சிந்திப்பதை மீண்டும் பைபிளில் கூறப்பட்டு இருப்பதுடன் சேர்க்கிறது.

தொகுப்பு : விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்