SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் உருவாகிறது தடுப்பூசி பூங்கா!

2018-12-10@ 17:14:50

நன்றி குங்குமம் டாக்டர்

நாட்டு நடப்பு


சமீபத்தில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்கிற செய்தி  வெளியானது. அது என்ன தடுப்பூசி பூங்கா என்பது பற்றியும், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்...

‘‘உலக சுகாதார அமைப்பின் உரிமத்துடன் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை நிறுவுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் 2016 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதலின்படி செங்கல்பட்டில் ஆலப்பாக்கம் என்கிற இடத்தில் நாட்டின் முதல் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா உருவாகி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய ஒழுங்குமுறை ஆணையம், குன்னூரிலுள்ள Pasteur Institute, சென்னையிலுள்ள BCG Vaccine Laboratory மற்றும் உத்திரபிரதேசத்திலுள்ள Kasauli ஆகிய மூன்று பழைய அரசு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தரம், உள்கட்டமைப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றிலுள்ள குறைகளைக் கண்டறிந்த பிறகு இவற்றின் உற்பத்தியை நிறுத்திவிட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.

தற்போது செங்கல்பட்டில் உருவாகி வரும் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா 100 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.594 கோடி மதிப்பீட்டில் உருவாகி வருகிறது. இங்கு Pentavalent (DPT-HepB-Hib), Hepatitis B, Haemophilus influenzae type b, Rabies, Measles-Rubella, BCG & Japanese Encephalitis (JE) Vaccine ஆகிய மனிதர்களுக்கான தடுப்பூசி மருந்துகள் தயார் செய்வதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பிற அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் பூங்காவின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆலோசனையை பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வழங்கி வருகின்றனர். இங்கு உற்பத்தி சார்ந்த உள்கட்டமைப்பானது 6 பிரிவுகளாக அமையவிருக்கிறது. அதாவது இந்த 6 பிரிவுகள், Admin Block with QA & QC, Viral Vaccine Formulation Block, Bacterial Vaccine Formulation Block, BCG Block, Multiple Bacterial Block, Secondary Packaging, Anti Rabies Block, Warehouse போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

தற்போது 100 ஏக்கரில் இந்த பூங்காவிற்கான கட்டிட வேலைகள் மற்றும் பிற வெளிப்புற வேலைகள் முழுவதும்  நிறைவடைந்துள்ளது. இயந்திரங்கள் மற்றும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. சரி பார்த்தல் பணியில் முன்னேற்றம் உள்ளது. தொழில்நுட்ப இணைப்பு சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

நம் நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும், மக்களுக்கான இந்த தடுப்பூசி பூங்கா திட்டமானது மத்திய அரசின் திட்டமாக இருப்பதால், அதைத் துவக்கி வைப்பதற்காக நமது பிரதமரை அழைக்க இருக்கிறோம். அவரது தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் அவரது தலைமையில் இத்திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வருவதற்குரிய பணியை தற்போது மேற்கொண்டுள்ளோம்’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.  

- க.கதிரவன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்