SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம்!

2018-11-14@ 15:53:05

நன்றி குங்குமம் டாக்டர்

ஆராய்ச்சி

உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்கள் நம்முடைய மனநிலையையும், உடல்நிலையையும் தீர்மானிக்கின்றன என்பதை அறிந்திருப்போம். அந்த வகையில் கார்ட்டிசால் (Cortisol) என்கிற ஹார்மோனே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இதுவரை கார்ட்டிசாலின் அளவைக் கணக்கிட வழி இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதற்கும் முடிவு கட்டிவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

ஒருவருடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிவதற்குப் போதுமான தகவல்கள் அவரது ரத்தத்தில் மட்டும் இன்றி வியர்வையில்கூட இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இதனால்தான் நீரிழிவு முதல் பல நோய்களைக் கண்டுபிடிக்க உதவும் புதுப்புது மின்னணு உணரிகளை (Electronic Sensor) விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

இதில் கவலைகளால் ஏற்படும் மனச்சுமை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. மனச்சுமை அதிகம் உள்ளவர்களது ரத்தத்தில் கார்டிசால் என்ற ஹார்மோன் கூடுதலாக இருக்கும். நமது வியர்வையில் இருந்து வெளிப்படுகிற இந்த ஹார்மோனை அளக்கும் மின்னணு உணரியை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணரியில் உள்ள பட்டையை, ஸ்டிக்கர் போல தோலில் ஒட்டிக்கொண்டால் போதும். அது தொடர்ந்து வியர்வையில் கார்ட்டிசாலை அளந்து சொல்லும். இந்தத் தகவலை வைத்து நாள் முழுவதும் ஒருவருடைய மனச்சுமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை மருத்துவர்களால் கணக்கிட முடியும். உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் இந்த கண்டுபிடிப்பு.

நோயாளி தன்னைப் பற்றி முழுமையாக விளக்காவிட்டாலும் அல்லது விளக்கத் தெரியாவிட்டாலும் மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் ஒரு நோயாளியை முழுவதுமாக அறிய இந்த உணரிகள் பெரிதும் உதவும் என்று பெருமையுடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

- கௌதம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்