SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி!

2018-11-14@ 15:49:41

நன்றி குங்குமம் டாக்டர்

ஷாப்பிங்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுங்கள் என்று எல்லோருமே பரிந்துரைக்கிறார்கள். அதேவேளையில் அவற்றில்தான் அதிகப்படியான பூச்சிக் கொல்லி மருந்துகளும், மெழுகு போன்ற கலப்படங்களும் நிறைந்திருக்கின்றன என்று மற்றோர் தரப்பினர் அச்சுறுத்துகிறார்கள். என்னதான் செய்வது என்று பொதுமக்கள் தலையைப் பிய்த்துக் கொள்வதை கவனித்த சில நிறுவனங்கள், அதை வியாபாரமாக கையில் எடுத்திருக்கின்றன.

காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும், இறைச்சியையும் சுத்தம் செய்வதற்காக பிரத்யேகமான கருவிகளை வடிவமைத்து சந்தையில் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னென்ன கருவிகள் வந்திருக்கின்றன, அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்களைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்...

இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன சாப்பிடுகிறோம். அது நம் உடல்நலனுக்கு உகந்ததுதானா என்பதை அறிந்து உண்ண வேண்டியது மிகவும் அவசியம். நாம் நம்பி சாப்பிடும் சில காய்கறிகளும், பழங்களும் உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் வேதிப்பொருட்கள், செயற்கை மெழுகுகள் மற்றும் நம்மால் காண முடியாத நோய்க் கிருமிகள் போன்ற பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போது நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட காய்கறிகள் சுத்தப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Ultrasonic & Ozone Vegetable Washer and Vegetable Purifier
உணவு தர அடிப்படையில் துருப்பிடிக்காத எஃகினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன இயந்திரம் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இது விரும்பத்தகாத நாற்றங்கள், குளோரின் மற்றும் பிற ரசாயனங்களை அகற்ற உதவும் எதிர்மறை அயனிகளைப் பெற்றுள்ளது. இதனை இயக்கும்போது அமைதியாக செயல்படுவதோடு, எளிதில் சமையலறைகளில் நிறுவவும் முடியும்.

இதிலுள்ள Ultrasonic என்கிற மீயொலி கிளர்ச்சியானது பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து வேளாண் வேதிப் பொருட்கள், தூசி, அழுக்கு போன்றவற்றை 99.99 சதவிகிதம் துடைப்பதற்கு உதவுகிறது. இதில் சிறிய காற்றுக் குமிழி மூலம் உறிஞ்சும் தொழில்நுட்பம் (Tiny air bubble suction technique) உள்ளது. இதிலுள்ள Ozone துர்நாற்றம், பிற வேதியியல் பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பழங்களின் மேற்பரப்பில் இருக்கும் வைரஸ்கள் போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. இந்த இரண்டுவிதமான நடவடிக்கைகள் காய்கறி மற்றும் பழங்களை வேகமாகவும், முழுமையாகவும் சுத்தப்படுத்த உதவியாக இருக்கிறது.   

 Vegetable and Meat Cleaning Machine
காய்கறி, கடல் உணவு மற்றும் இறைச்சி போன்றவற்றை சுத்தமாகவும், புதிதாகவும் வைத்துக் கொள்வதற்கு  இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.ஓசோன் தொழில்நுட்பம் உள்ள இயந்திரங்கள் இதுபோன்ற உணவுப் பொருட்களை சுத்தப்படுத்தும்போது, அதில் எஞ்சியுள்ள ரசாயனங்களை திறம்பட ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது. இந்த இயந்திரங்கள் கடல் உணவு மற்றும் இறைச்சி போன்றவற்றின் மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிர்க் கொல்லிகளை சுத்தப்படுத்தி நாம் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

Fruit & Vegetable Cleaner
இது முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் பழங்களையும், காய்கறிகளையும் சுத்தப்படுத்துவதற்கு ரசாயனப் பொருட்கள் ஏதும் தேவையில்லை. ஒரு தொடுதல் மூலம் எளிதாக இந்த இயந்திரத்தை இயக்கலாம். இது குறைந்த ஆற்றல் நுகர்வினை உடையதாகவும், அமைதியான அதிர்வுகளோடு இயங்கக்கூடியதாகவும், பராமரிப்பு செலவு இல்லாததாகவும் உள்ளது.

இந்த இயந்திரம் பழங்கள் மற்றும் காய்கறிகளிலுள்ள தூசு, பூச்சிக்கொல்லிகள்மற்றும் பல்வேறு அறியப்படாத நோய்க்  கிருமிகளை 99 சதவிகிதம் நீக்க உதவுகிறது. கோழி மற்றும் பிற இறைச்சிகளிலுள்ள Ecoli, Enterococcus, Campylobacte, Klebsiella, Salmonella, Staphylococcus aureus போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளை நீக்க உதவுகிறது. மீன் போன்ற பிற கடல்சார் பொருட்களில் உள்ள அறியப்படாத பாக்டீரியா மற்றும் புழுக்களை நீக்க உதவுகிறது. அரிசியைக் கழுவும்போது அதிலுள்ள பூச்சிக்கொல்லிகளை நீக்கவும் உதவுகிறது.

- க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்