SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்

2018-09-24@ 14:11:19

நன்றி குங்குமம் டாக்டர்

முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
புளி - கொட்டைப்பாக்களவு,
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு - தாளிக்க,
எண்ணெய் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும். நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும். சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்