SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டான்ஸ் பாதி... ஒர்க் அவுட் மீதி!

2018-09-11@ 14:33:32

நன்றி குங்குமம் டாக்டர்

Centre Spread Special

வெற்றியாளர்களையும், பிரபலங்களையும் காணும்போது கொஞ்சம் பொறாமை கலந்த பிரமிப்பு ஏற்படுவது இயல்புதான். அவர்களுக்குக் கிடைக்கிற பணமும், புகழும் அதிகப்படியானதுதானோ என்று கூட தோன்றும். ஆனால், எல்லோரும் அப்படி அதிர்ஷ்டம் காரணமாக வெற்றி பெற்றுவிடுவதில்லை. அதற்குப் பின்னால் நிறைய தயாரிப்புகளும், தியாகங்களும் இருக்கும்.

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் சாயிஷாவைக் கூட அப்படி அதிசயமாகத்தான் பலர் பார்க்கிறார்கள். ஆனால், தன்னுடைய கட்டுடலுக்காக அவர் செய்யும் கடினமான ஒர்க் அவுட்டுகளைப் பார்த்தால் இந்த வெற்றிக்கு அவர் தகுதியானவர் என்றுதான் தோன்றும்.

இந்தியில் அஜய்தேவ்கன், தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் அகில் ஜோடியாக நட்சத்திரப் பாதையில் நடக்கத் தொடங்கிய சாயிஷா, தமிழ் சினிமாவிலும் அதே ராஜபாட்டையைத் தொடர்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’, கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் மும்பைப் பெண் சாயிஷா இப்போது பிரபுதேவா, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயல்பாகவே நடனம் ஆடுபவர்களுக்கு உடல் சிக்கென்று இருக்கும். ஏனெனில், நடனத்தைவிட சிறந்த உடற்பயிற்சி இருக்க முடியாது. அதிலும், சாயிஷா, லத்தீன்-அமெரிக்க ஸ்டைல், கதக், ஹிப்-ஹாப் மற்றும் பெல்லி டான்ஸ் என ஏகப்பட்ட நடனங்களை, முறையாக கற்று வைத்திருக்கிறார். ஆனாலும், நடனம் மட்டுமே போதும் என்றில்லாமல், தனி பயிற்சியாளரின் உதவியோடு தீவிர உடற்பயிற்சிகளையும் செய்வதைத் தவறுவதில்லை.

முக்கியமாக சாயிஷாவிடம் வியக்க வைக்கும் ஒரு விஷயம் வேகம். 21 வயதுக்கென்று ஒரு வேகம் இருக்கும்தான். ஆனால், சாயிஷாவின் வேகம் அதிவேகம். இணையதளத்தில் இவரது உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பார்த்தவர்கள் அதை உணர்வார்கள். சாயிஷா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றில், விளையாட்டு வீரர்கள் எடுத்துக்கொள்ளும் உடற்பயிற்சிகளை அனாயசமாக செய்வதைப் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது.

உணவிலும் இதேபோல் தீவிர கட்டுப்பாடுகள் உண்டு. சுவைக்காக எதையும் சாப்பிட மாட்டார் என்கிறார்கள் சாயிஷாவுடன் பணிபுரிந்தவர்கள்.அழகு, நிறம், கவர்ச்சி என்று உடலை மட்டும் நம்பாமல் உழைப்பையும் நம்பும் சாயிஷா இன்னும் உயரம் தொடட்டும்!

- இந்துமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்