SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Colorful...Tasteful...Healthful... குடை மிளகாய்

2018-09-05@ 14:28:33

நன்றி குங்குமம் டாக்டர்

பச்சை, சிவப்பு, மஞ்சள் என விதம் விதமான நிறங்களில் கண்ணைக் கவரும் குடைமிளகாய் டேஸ்ட்டியானதும்கூட என்பது தெரியும்தான். ஆனால், அவற்றால் என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்று உணவியல் நிபுணர் யசோதா பொன்னுசாமியிடம் கேட்டோம்...

குடை மிளகாயின் நிறத்துக்கேற்றவாறு பலன்களும் மாறுமா?

‘‘குடை மிளகாய் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பர்பிள், பிரவுன் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் பலன்கள் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் சிவப்பு குடை மிளகாயில் Lycopene என்ற கரோட்டினாய்டு உள்ளதால் ப்ராஸ்ட்டேட், கருப்பை வாய், சிறு நீர்ப்பை மற்றும் கணையப் புற்றுநோயினால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும். மேலும் சிவப்பு குடை மிளகாயில் Lutein அளவு அதிகமாக உள்ளது என்று ஓர் ஆராய்ச்சியில் கூறியுள்ளார்கள். லூட்டீன் நமது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான கரோட்டினாய்டு, பச்சை குடை மிளகாயிலும் லூட்டீன் மற்றும் Zeaxanthin தேவையான அளவு உள்ளது.’’

குடை மிளகாய் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

‘‘குடை மிளகாயில் வைட்டமின் சி, ஏ, பி6, பி2, பி1, பி3, ஃபோலேட், பேண்டோதெனிக் ஆஸிட், வைட்டமின் ஈ, பொட்டாசியம், சோடியம், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் சி, பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளது.’’

குடை மிளகாயின் மருத்துவ குணங்கள் என்ன?

‘‘குடை மிளகாய் நரம்பு தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. குடை மிளகாயில் இருக்கும் Capsaicin-ல் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அவை கிருமிகள் மற்றும் புற்றுநோயினை எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளது. நீரிழிவினைக் கட்டுப்படுத்துகிறது. இதில் Cayenne என்னும் வேதிப்பொருள் பலவிதமான உடல் வலியைக் குறைக்கும் நிவாரணியாகவும் இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் பீட்டா-கெரோ இணைந்து இருப்பதால் ஆரோக்கியமான கொலஸ்ட்ராலுக்கு உதவி செய்கிறது. மேலும் வாதம் தொடர்புடையநோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண், பல் வலி, மலேரியா, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது.’’

குடைமிளகாய் எல்லா வயதினருக்கும் ஏற்றதா?

‘‘குடை மிளகாயில் எரிச்சலூட்டும் கார நெடி மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம். அதனுடைய விதை மற்றும் உள்பகுதியில் Capsaicin உள்ளதால் வாய், நாக்கு, தொண்டையில் எரிச்சலூட்டும் தன்மை இருக்கும். அவ்வாறு இருந்தால் தயிர் போன்ற குளுமையான பொருட்களை சாப்பிட்டால் காரத்தின் வீரியத் தன்மையை குறைத்து வயிற்றுப் புண் ஏற்படாமல் இருக்கும். போதுமான ஆராய்ச்சிகள் இல்லாததால் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’

குடைமிளகாயை  எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும்?

‘‘குடை மிளகாயினை அதிகம் தீயில் வாட்டினால் அதன் முழு சத்தும் போய்விடும். புலாவ், சட்னி, துவையல், சாலட், பஜ்ஜி, சாண்ட்விச் போன்ற வழிகளில் பயன்படுத்தலாம். இதன்மூலம் ருசியும் குறையாது. அதில் இருக்கும் முழு சத்தையும் பெற முடியும்.’’

குடை மிளகாய் தொடர்ந்து சாப்பிட்டால் அல்சர் வருமா?

‘‘அல்சர்/ வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடைமிளகாய் உண்ணும் அளவை குறைத்துக் கொள்ளுதல் இல்லையெனில் தவிர்த்தல் நல்லது. இதற்கு முழுக்காரணம் Capsaicin மட்டும் காரணமாக இருக்க முடியாது. வேறு சில காரணங்கள் அல்லது பழக்க வழக்கத்தினால் கூட அல்சர் வரலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் குடை மிளகாயினை தினமும் உணவில்
சேர்த்துக் கொள்வது நலம்.’’

டயட்டீஷியன் யசோதா
- எம்.வசந்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்