SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்லதைத் தவிர்க்க நல்லதே நினைப்போம்!

2018-08-27@ 16:31:52

நன்றி குங்குமம் டாக்டர்

Centre Spread Special

ஒரு சின்ன கேள்வி... ஆனால், முக்கியமான கேள்வி!

எதிர்மறையாகவே யோசிப்பதால் உங்களுக்கு இதுவரை கிடைத்தது என்னவென்று யோசித்துப் பாருங்கள். விரக்தி, பதற்றம், குற்ற  உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, கோபம் போன்ற தேவையற்ற குப்பைகள்தானே... அதன்மூலம் உடலையும் அழித்து, மனதையும் கெடுத்து  இருக்கிற ஒரே வாழ்க்கையை ஏன் நரகமாக்க வேண்டும்?

ஒரு மாறுதலுக்காக பாஸிட்டிவ்வாக யோசித்துப் பாருங்கள். பல அழகான மேஜிக்குகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். அதற்கு CBT  என்கிற Cognitive Behavioural Therapy உங்களுக்கு உதவும் என்று நவீன உளவியலாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

‘எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கும், துன்பங்கள் வருவதும் எதிர்காலத்தில் என்னுடைய நன்மைக்காகவே’ என்று யோசிக்கக் கற்றுக்  கொள்வதுதான் இந்த தெரபியின் அடிப்படை நோக்கம். நேர்மறையான ஓர் எண்ணம் மனதுக்குள் விதைக்கப்படும்போது, ஒற்றைக்குரல்  பள்ளத்தாக்கில் பன்மடங்காக எதிரொலிப்பதுபோல உருமாறும் சக்தி கொண்டது என்பதை அழுத்தமாக பல ஆராய்ச்சியாளர்களும்  நம்புகிறார்கள். இதன்மூலம் நிம்மதி, அமைதி, திருப்தி உணர்வு, நம்பிக்கை, ஆரோக்கியம் என பல விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்  உங்களுக்குக் கிடைக்கும்.

சரி... எப்படி எதிர்மறை சிந்தனைகளை நேர்மறையாக மாற்றுவது?

ஒருவரின் சிந்தனைப்போக்கையும், அவரது செயல்களையும் விழிப்போடு கவனித்து மாற்றும் திறன் கொண்டதுதான் CBT. அழுத்தம்  நிறைந்த சூழல்களை எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாகக் கடப்பதற்கான கற்றலையும் அள்ளிக் கொடுக்கும் இந்த தெரபி.  வெளிநாடுகளில் இதற்காக நிறைய தெரபிஸ்ட்டுகள் எல்லாம் உருவாகிவிட்டார்கள். எப்படி யோசிக்க வேண்டும், விரும்பத்தகாத நிகழ்வுகள்  நடக்கும்போது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று செஷன், செஷனாக வகுப்பே நடக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவருக்கு போன் செய்கிறீர்கள் அல்லது மெசேஜ் அனுப்புகிறீர்கள். அவர் உங்களுடைய போன் காலை அட்டெண்ட்  செய்யாமல் இருந்தாலோ, மெசேஜுக்குப் பதில் அளிக்காவிட்டாலோ உடனே உங்கள் எண்ணக்குதிரை இறக்கை கட்டிப் பறக்க வேண்டாம்.  ‘எனக்கு மரியாதை இல்லை’, ‘என்னைத் தவிர்க்க நினைக்கிறார்’ என்று உடனே சிந்தனையை தாறுமாறாக ஓட விடவும் வேண்டாம். போன்  எடுக்க முடியாத சூழலில் மீட்டிங்கிலோ, டிரைவிங்கிலோ அவர் இருக்கலாம் என்று நேர்மறையாக யோசியுங்கள்.

இப்படி யோசிக்கும் உத்தியின் மூலம் எதிர்மறை உணர்வுகளுடன் தொடர்புடைய மூளையின் Amygdala பகுதியின் தீவிரத்தன்மை  குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதன் மூலம் பொறுமை, நிதானம் போன்ற நல்ல குணங்கள் மேம்படுகின்றன  என்றும் பரிந்துரைக்கிறார்கள்.

இதற்காக உளவியல் மருத்துவரைத் தேடிச் சென்று, CBT Session எல்லாம் போக வேண்டும் என்று அவசியம் இல்லை. எதிர்மறையான  சூழலிலும் பாசிட்டிவாக யோசித்தால் போதும் என்று புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்…So.... Always Be Positive....

- ஜி.ஸ்ரீவித்யா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்