SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிராய்லர் பிராப்ளம்

2018-08-16@ 15:25:22

நன்றி குங்குமம் டாக்டர்

விளக்கம்

மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவாகவும் அதேநேரத்தில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் உணவாகவும் பிராய்லர் சிக்கன் இருக்கிறது. பிராய்லர் கோழிகளை உண்ணக் கூடாது என்று தொடர்ந்து மருத்துவ உலகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி என்னதான் பிராய்லர் கோழியில் பிரச்னை என்பதை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் இங்கே விவரிக்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான சுகுமார்.

வழக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள் பழங்கள் யாரும் விரும்பி எடுத்துக் கொள்வதில்லை இதனால் நாங்கள் இதை தொடர்ந்து அறிவுறுத்தி ஆரோக்கியமன உணவுகள் எடுக்க சொல்லி அவர்களை வலியுறுத்தி வருகிறோம். தவறான உணவு பழக்கவழக்கங்களால் சாதாரண வாயு தொல்லை, அல்சர் முதல் செரிமான உறுப்புகளில் வருகிற புற்றுநோய் வரை காரணமாக இருக்கிறது. அவற்றில் பிராய்லர் கோழி உணவால் ஏற்படும் பிரச்னை முக்கியமானது.

பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஊசிகள் அனைத்தும் ரசாயனங்களால் ஆனது.

பிராய்லர் கோழிகளுக்கு சராசரியாக 12 வகையான ரசாயனங்கள் தரப்படுகிறது. உணவுகள் மூலமும் நேரடியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்காக வளர்கிற கோழிகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்காகவும், 40 நாட்களிேலயே அதிக எடையுடன் வளர்வதற்காகவும் இதுபோன்ற மருந்துகள் செலுத்தப்படுகிறது. இதனால் அந்த கோழிகள் குறைந்த நாளில் அதிக எடையுடனும் இருக்கிறது. இதற்காக பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகளும் போடப்படுகிறது.

இவ்வாறு தயாராகும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து உண்ணுகிற ஒருவர் நோய்வாய்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும்போது அவருக்கு சில முக்கிய ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்வதில்லை. இதற்கு காரணம் பிராய்லர் கோழிகளில் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் இருப்பதே காரணம்.

ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தி குறைந்து ஆண்மை குறைவு ஏற்பட காரணமாகிறது. பெண்களுக்கு கருமுட்டை பாதிப்படைந்து குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது. நோய்களை உண்டு பண்ணக்கூடிய கூறுகள் பிராய்லர் கோழியில் இருக்கிறது என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிராய்லர் கோழி தொடர்ந்து உண்டு வந்தால் அதில் உள்ள ஹார்மோன் ரசாயனங்கள் அந்த பெண் குழந்தை சிறு வயதிலயே பூப்படைய காரணமாக இருக்கிறது.

பிராய்லர் கோழி அதிக அளவு கொழுப்பு நிறைந்தவையாகவும் இருக்கிறது. இதனை உட்கொள்ளும்போது சிறுநீரகத்தில் அதிகமான கெட்ட கொழுப்பு படிகிறது. மேலும் கல்லீரல் வீக்க நோயும் ஏற்படுகிறது. அதோடு மஞ்சள் காமாலை நோயும் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

பிராய்லர் கோழிகளில் உள்ள கொழுப்பு ரத்த நாளங்கள் அடைப்பு ஏற்படுத்தி ரத்த அழுத்த நோய் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது. பிராய்லர் கோழிகள் உட்கொள்ளும் நூறுபேரில் 65 நபருக்கு ரத்த அழுத்தம் நோய் ஏற்படுகிறது.

குடல், இரைப்பை, கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக பிராய்லர் இறைச்சி உள்ளது. வளரும் குழந்தைகள் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது அவர்களுக்கு எலும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பிராய்லர் கோழிகள் தைராய்டு போன்ற நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

வெளியிடங்களில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பிராய்லர் கோழி வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி, மீன் போன்ற உணவுகளை எந்த அளவு இயற்கையானது. அது வளர்க்கப்படும் சூழல் போன்றவற்றை கவனத்தில் கொண்டு பார்த்து உண்ணலாம்.’’

- க.இளஞ்சேரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்