SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்!

2018-07-18@ 14:33:10

நன்றி குங்குமம் டாக்டர்

செய்திகள் வாசிப்பது டாக்டர்


கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வேகம் பெறும் ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் தனித்தன்மையுடன் புத்துயிர் பெற்று வருகிறது யோகக் கலையும் இயற்கை மருத்துவமும். பொதுமக்களின் பார்வை சமீபகாலமாக அதன்மீது அதிகம் கவனம் பெற்றிருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகளும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன.

யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்த மத்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

‘இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் ஏற்படுகிற தொற்றா நோய்களைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளது. இங்கு பட்டப் படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப்

பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இங்கே இயற்கையான சூழ்நிலையில் மிகவும் பாதுகாப்பான சிகிச்சைமுறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபங்க்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்’ என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்