SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூட்டுவலியை தவிர்க்கும் பயிற்சிகள்!

2018-07-05@ 16:24:18

நன்றி குங்குமம் டாக்டர்

வரும்முன் காத்தலே சிறந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் உடல்நல விஷயத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்தான் உடலை கவனிக்கிறோம். மூட்டுகளின் ஆரோக்கியத்திலும் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். மூட்டுவலி வந்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிற வரை அதைக் கண்டுகொள்வதில்லை.
ஆனால், இளவயதிலிருந்தே மூட்டுகளையும் மூட்டுகளின் இணைப்புத் தசைகளையும் பலமாக்கும் பயிற்சிகளைச் செய்து வந்தால் பிற்காலத்தில் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

எங்கேயாவது அடிபட்டு மூட்டுகளில் காயம் ஏற்படும்போது அது தீவிரமான பாதிப்பைக் கொடுப்பதையும் தவிர்க்கலாம். மூட்டுகளைப் பலப்படுத்தும் பயிற்சிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். இந்தப் பயிற்சிகளை வெறும் படங்களைப் பார்த்து நீங்களாக செய்ய வேண்டாம். மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையுடன் செய்வதுதான் பாதுகாப்பானது.

* ஸ்ட்ரெயிட் லெக் ரெயிஸ் (Straight Leg Raise)

தரைவிரிப்பின் மேல் சமதளமாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். ஒரு காலை லேசாக மடக்கி, உள்ளங்கால் தரையைத் தொடும்படி வைத்துக் கொள்ளவும். இன்னொரு காலை வளைக்காமல் நேராக நீட்டியபடி உங்களால் முடிந்த உயரத்துக்குத் தூக்கவும். ஒவ்வொரு காலுக்கும் இதே போல 10 முதல் 15 முறைகள் செய்யவும்.

* ஹாம்ஸ்ட்ரிங் கர்ல் (Hamstring Curl)

தரைவிரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொள்ளவும். கால்களை மடக்கி உங்கள் குதிகால் பகுதியானது பிட்டப்பகுதியைத் தொடும்படி மடக்கவும். அதே நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டுப் பழைய நிலைக்குத் திரும்பவும். 15 முறை செய்யவும்.நின்ற நிலையிலும் இதைச் செய்யலாம். நாற்காலியின் பின்பக்கத்தைப் பிடித்தபடி நின்றுகொள்ளவும். ஒவ்வொரு காலாக உயர்த்தி குதிகால் பிட்டத்தைத் தொடும்படி உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இன்னொரு காலுக்கும் செய்யவும்.

* வால் ஸ்குவாட்ஸ்(Wall Squats)

சுவரில் சாய்ந்தபடி நேராக நிற்கவும். நாற்காலி இல்லாமலேயே நாற்காலியில் அமர்வது போலக் கற்பனை செய்துகொண்டு உட்காரும் நிலைக்கு வரவும். கைகள் சுவரைப் பிடித்துக்கொள்ளலாம் அல்லது கைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளலாம். உட்கார்ந்திருப்பது போன்ற நிலையில் 10 நொடிகள் இருக்கவும். பயிற்சியின் ஆரம்பத்தில் இது சிரமமாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் பயிற்சியின் நேரத்தை ஒவ்வொரு நொடியாக அதிகரித்தால் சிரமம் தெரியாது. இந்தப் பயிற்சிகளை தினமும் செய்துவந்தாலே மூட்டுகளும் தசைகளும் வலுவாகும்.

மூட்டு வலி வராமல் தவிர்க்கும் வழிகள்....

சரியான உடல் எடையைப் பராமரித்தல் உங்கள் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற சரியான உடல் எடையைப் பராமரியுங்கள். அதிகப்படியான எடை, உங்கள் மூட்டுகளில் அழுத்தம் சேர்த்து, வலியை அதிகரிக்கச் செய்யும். சரியான காலணிகளை அணிவது அழகுக்காக அணிகிற காலணிகள் பெரும்பாலும் மூட்டுகளைப் பதம் பார்ப்பவையாகவே இருக்கின்றன. எனவே, காலணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவை உங்கள் கால்களை உறுத்தாமலும், நடக்கும்போது மூட்டுகளில் சிரமம் ஏற்படுத்தாதவையாகவும் இருக்கும்படி பார்த்து வாங்குங்கள்.

உடற்பயிற்சிகளுக்கு முன் வார்ம்-அப்எந்த உடற்பயிற்சியையும் வார்ம் அப் பயிற்சிகள் செய்யாமல் தொடங்கக் கூடாது. வார்ம் அப் பயிற்சிகள் உங்கள் தசைகளைத் தளர்த்தி பயிற்சிகளுக்குத் தயார்படுத்தும். நீச்சலும், நடைப்பயிற்சியும் ஜிம்மில் போய் உடற்பயிற்சிகள் செய்ய முடியாதபோதும், வெளியூர்களுக்குச் செல்லும்போது பயிற்சிகள் செய்ய முடியாத நிலையிலும் நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

உடலுக்கு வேலை கொடுப்பது உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்காதீர்கள். ஓய்விலிருப்பதை விரும்பி அதிலேயே சுகம் காணாதீர்கள். உடலுக்கு எந்தளவுக்கு வேலைகள் கொடுக்கிறீர்களோ அந்தளவுக்கு மூட்டுகளும், எலும்புகளும், தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். சுயபயிற்சிகள் தவிர்ப்பது யாருக்கோ பலனளித்த பயிற்சிகளை நீங்களாக செய்யத் தொடங்க வேண்டாம். அதேபோல நீங்கள் வழக்கமாகச் செய்கிற பயிற்சிகளின் வேகத்தையோ, எண்ணிக்கையையோ திடீரென அதிகரிக்க வேண்டாம்.

சிகிச்சைகள்…

Analgesics வகை மருந்துகளே பெரும்பாலான மூட்டுவலிகளுக்குப் பரிந்துரைக்கப்படும். மூட்டுகளில் அடிபடும்போதும், காயங்கள் ஏற்படும்போதும் நிவாரணம் தரவும் இந்த மருந்துகள் உதவும். வலியை மட்டும் குறைக்கக்கூடியது. பக்க விளைவுகள் அற்றது.

கார்டிகோஸ்டீராய்டு மருந்துகள் (Corticosteroids)

நம் உடலில் உற்பத்தியாகிற கார்ட்டிசோன் என்கிற ஹார்மோனுக்கு இணையானது. வீக்கத்தைக் குறைக்கும்.
 
Disease modifying anti-rheumatic drugs (DMARDs)

இந்த வகை மருந்துகள் மூட்டுவலிகளின் தன்மை, அவற்றின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து பரிந்துரைக்கப்படுபவை. உதாரணத்துக்கு ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ், லூப்பஸ், சோரியாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்....

கவுட் மருந்துகள்(Gout medications)

கவுட் பாதிப்பாக இருந்தால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதற்காக இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

(விசாரிப்போம்!)

- எம்.ராஜலட்சுமி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்