SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை

2018-06-18@ 15:03:39

நன்றி குங்குமம் டாக்டர்

டயாபட்டீஸ் மேக் இட் சிம்பிள்

புவி வெப்பநிலை உயர்வு காரணமாக ஏற்படும் இயற்கைப் பாதிப்புகள் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது இவர்களோடு நீரிழிவு ஆராய்ச்சியாளர்களும் கைகோர்த்திருப்பதுதான் ஆச்சர்யம்!

உலக வெப்பநிலை அளவுகளையும் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் நீரிழிவு பாதிப்புகளையும் நெதர்லாந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த ஆய்வின்படி, ஒரு பகுதியில்1.8 டிகிரி ஃபாரன்ஹீட் (அதாவது 1 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை உயரும்போது நீரிழிவாளர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கு 0.3 பேர் என்கிற அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு லட்சம் நீரிழிவாளர்கள் உருவாவதையும் வெப்பநிலை விவகாரத்தையும் முடித்துவிட்டு ஆய்வைத் தொடர்கின்றனர் விஞ்ஞானிகள்.

`வெப்பநிலை மட்டுமே நீரிழிவை அதிகரிக்கும் காரணியாக இருக்க முடியாது’ என சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தாலும்கூட, அறை வெப்பநிலை மற்றும் உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளையும் கணக்கில் கொண்டே இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வெப்ப நிலைக்கும் உடற்பயிற்சி செயல்பாட்டுக்கும் தொடர்புண்டு என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம்.

இப்படி வெப்பநிலை சார்ந்த புறக்காரணிகளும் நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.1996 முதல் 2013 வரை 18 ஆண்டுகால டேட்டாக்களை ஆய்வு செய்ததிலும் வெப்பநிலை அதிகமாக இருந்த ஆண்டுகளில் நீரிழிவு சதவிகிதமும் அதிகரித்தே வந்துள்ளது. இவ்வாண்டுகளில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்திருந்தால்கூட, உலக அளவில் சராசரி ரத்த சர்க்கரை அளவு 0.2 சதவிகிதம் அதிகரித்து வந்துள்ளது.

சரி... வெப்பம் அதிகரிப்பதற்கும் ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் என்ன சம்பந்தம்?

இந்தக் கேள்விக்கும் பதில் வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்குக் காரணம் கொழுப்புதான். சாதாரண கொழுப்பல்ல... பழுப்புக் கொழுப்பு (Brown fat). வளர்சிதை மாற்ற நிகழ்வில் பங்காற்றும் தன்மை கொண்டது இந்த பிரவுன் ஃபேட்.டைப் 2 நீரிழிவாளர்கள் ஊட்டி போன்ற குளிர்ச்சியான பகுதிகளில் பத்து நாட்கள் தங்கினால்கூட. அவர்களுடைய இன்சுலின் சென்சிடிவிட்டி  அதிகரிக்கும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறது வேறோர் ஆய்வு. இன்சுலின் சென்சிடிவிட்டி குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏற்கனவே நீரிழிவு இல்லாமலிருந்தால் டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயமும் இதில் உண்டு. இதையே இன்சுலின் தாங்குதிறன் என்றும் சொல்கிறோம்.அப்படியானால் எந்நேரமும் ஏசியிலேயே இருப்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு குறையுமா என்கிற கேள்வியும் இதில் எழாமல் இல்லை. ஒரே வெப்பநிலை நிலவும் இருவேறு பகுதிகளில் நீரிழிவு அளவீடுகளும் வேறுபட்டுதானே இருக்கின்றன?

இதுபோன்ற குழப்பங்களுக்கு விடை காணும் முயற்சியில் இருக்கின்றனர் நீரிழிவு விஞ்ஞானிகள். எப்படி பார்த்தாலும், இனி சர்க்கரையில் சூரியனுக்கும் பங்கு இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!

- கோ.சுவாமிநாதன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்