SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் - மே 30

2018-05-30@ 15:05:38

நன்றி குங்குமம் டாக்டர்

சர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் (World Multiple Sclerosis Day) ஒவ்வோர் ஆண்டும் மே இறுதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. நோய் கண்டறிதல், மருத்துவம், ஆதரவு ஆகியவற்றில் மட்டுமன்றி நோயாளிகளின் பயணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கவனம் செலுத்துவது, நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்குவது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் 30-ம் நாள் இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நரம்புகளின் பாதுகாப்பு உறை சிதைவடைந்து, மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு அறுந்து போவதால் ஏற்படும்
நரம்பியல் கோளாறுகளை இந்நோய் உள்ளடக்கி உள்ளது. இதனால் பேச்சு, பார்வை மற்றும் அசைவுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் இளைஞர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நரம்புகளின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்நோயின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. உடல் உறுப்புகளில் பலவீனம் அல்லது மரப்பு, கண் பார்வை மங்குதல், பகுதி அல்லது முழு பார்வை இழப்பு, பேச்சுக் குழறல், தலை கிறக்கம், நடுக்கம், உடல் ஒத்தியங்காமை, உடல் பாகங்களில் கூச்சம், வலி போன்ற அறிகுறிகள் இந்நோயால் ஏற்படுகின்றன.

நோய் கண்டறிதல்

ஒரு நரம்பியல் நிபுணர் பல்வேறு சோதனைகள் மூலம் மூளை தண்டுவட மரப்பு நோயைக் கண்டறிகிறார். பாதிக்கப்பட்ட நரம்பு செயல்பாட்டைச் சோதித்து நரம்பியல் ஆய்வு, கண் நோய் மற்றும் பார்வையை மதிப்பிடுவதற்கான கண் பரிசோதனை, இடுப்புப் பகுதியில் துளையிட்டு, மூளை மற்றும் தண்டுவடத்தைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை அதற்கான ஊசி மூலம் எடுத்து பரிசோதனை செய்தல் போன்றவற்றின் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது. இந்த நோயின் சிக்கல்களும் அறிகுறிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளித்தால் இதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்