SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்காளிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?!

2018-05-10@ 14:22:13

நன்றி குங்குமம் டாக்டர்

நம்முடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் உணவுப் பொருளாக தக்காளி அமைந்துள்ளது. சுவை என்பதையும் கடந்து ஏராளமான உயிர் சத்துக்களும், கனிம சத்துக்களும் தக்காளியில் அடங்கியுள்ளன. அதனாலேயே ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று செல்லமாக வர்ணிக்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் பற்றியும், பலன்கள் பற்றியும் பேசுகிறார் சித்த மருத்துவர் பானுமதி.‘‘தக்காளியின் அறிவியல் பெயர் Solanum lycopersicum என்பதாகும்.

நமது உடலின் சருமப் பராமரிப்புக்கும், இதய நலனுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது தக்காளி. மேலும், உடல் எடை குறைப்புக்கு உதவக்கூடியது. தக்காளியில் காணப்படும் Lycopene என்ற சத்து புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கக் கூடியது. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, B2, B6 மற்றும் வைட்டமின் C ஆகிய சத்துக்கள் தக்காளியில் மிகுதியாக அடங்கியுள்ளன. இந்த சத்துக்கள் சமைத்து சாப்பிடுவதானாலோ அப்படியே பச்சையாக சாப்பிடுவதனாலோ மாறுபடுவதில்லை.

எப்படி எடுத்துக் கொண்டாலும் தக்காளியின் சத்துக்கள் குறையாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது இதன் விசேஷ சிறப்பம்சம்’’ என்கிற மருத்துவர் பானுமதியிடம், தக்காளியின் மருத்துவ பயன்கள் பற்றிக் கேட்டோம். ‘‘தக்காளியில் உள்ள லைகோபீன் சிறந்த புற்றுநோய் தடுப்பானாக இருக்கிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் C ஆகியவை இதயத்துக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருளாகவும், இதய நோய்களைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.

தக்காளியில் உள்ள சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் கே-வும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது. லைகோபீன், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் கண் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. தக்காளியில் உள்ள கொலாஜென் என்னும் பொருள் நம்முடைய சருமம், நகம், முடி மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கிய சத்துப் பொருளாக விளங்குகிறது. இதில் காணப்படும் ஃபோலிக் அமிலம் கருவுற்ற காலங்களில் பெண்களின் கருவில் உள்ள சிசுவின் நரம்பு மண்டலத்தின் குழல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நியாசின் (வைட்டமின் B3) என்ற உயிர்ப் பொருளானது, நம் உடலில் சேர்கிற கொழுப்பினை ரத்த நாடி மற்றும் நாளங்களில் தேங்காமல் தடுக்கிறது’’ என்கிறார்.

தக்காளி விஷயத்தில் கவனிக்க...
 
தற்போது கடைகளில் கிடைக்கும் தக்காளி வகைகளில் நாட்டுத் தக்காளியே நமக்கு சிறந்தது. அன்றாட உணவில் சேர்மான பொருளாக மட்டும் தக்காளியை பயன்படுத்தாமல் சூப்பாகவும், பச்சையாகவும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ரெடிமேடாக கிடைக்கும் தக்காளி சாஸ், தக்காளி ஜாம் போன்றவைகளைத் தவிர்த்து விடுவது நல்லது. அதில் சுவைக்காகவும், கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் ஏராளமான ரசாயனங்கள்
கலக்கப்படுகிறது.

- க.இளஞ்சேரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்