SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல் வலியை போக்கும் ஈச்சங்காய்

2018-05-02@ 14:43:07

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பற்கள், நரம்புகளுக்கு பலம் தரக்கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் தன்மை கொண்டதுமான ஈச்சமரத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.ஈச்ச மரத்தின் பாகங்கள் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இந்த மரத்தின் குருத்து, காய் நமக்கு பயன்தருகிறது. பழங்கள் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை அழிக்கிறது. ஈச்சங் காய்களை பயன்படுத்தி ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஈச்சங்காயை நசுக்கி எடுக்கவும். இதனுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாய் கொப்பளித்துவர பற்களில் ஏற்படும் ஆட்டம், ஈறுகள் வீக்கம், ரத்தகசிவு சரியாகும். பற்களுக்கு பலம் தருவதாக அமைகிறது. பற்கள் ஆரோக்கியம் அடையும். பல் சிதைவு தடுக்கப்படும். ரத்தத்தை உறைய வைக்கும். இது துவர்ப்பு சுவை உடையது என்பதால் பாக்கு போல தாம்பூலத்தில் பயன்படுத்த கூடியதாக விளங்குகிறது. ஈச்ச மரத்தின் வேர்களை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஈச்சமர வேர், பனங்கற்கண்டு, பால்.
செய்முறை: ஈச்சமர வேர்களை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுக்கவும். இதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி இதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இரவு தூங்கப்போகும் முன்பு இதை குடித்துவர நரம்புகள் பலப்படும்.

ஈச்சரமர வேர் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடியது. உள் உறுப்புகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவும். கை, கால்களில் ஏற்படும் நடுக்கத்தை போக்கும் தன்மை கொண்டது.  ஈச்ச மரத்தின் குருத்தை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, பால்வினை நோய்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஈச்சங்குருத்து, பனங்கற்கண்டு, பால்.செய்முறை: ஈச்சங்குருத்தை நசுக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை காலை, மாலை என இருவேளையும் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையை பலப்படுத்தும். கருப்பை நோய்களை விரட்டும். சிறுநீர் தாரையை சீர்படுத்தும். பால்வினை நோய்கள் குணமாகும்.

திருவிழா, திருமண விழாவின்போது முற்றத்தில் ஈச்சங்காய், பழம், குருத்து ஆகியவை அழகுக்காக தொங்க விடப்படுகிறது. தோரணமாக பயன்படுத்தப்படும் இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காய்கள் பற்களுக்கு பலம் தருகிறது. இதன் பழங்கள் உடலுக்கு நலம் தருகிறது. வேர்கள் உடல் நடுக்கம், நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. குருத்துகள் வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு பொருமல், வயிற்று வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வசம்புவை விளக்கெண்ணெய்யில் துவைத்து நெருப்பிலிட்டு சுட்டு, தாய்ப்பால் விட்டு குழைத்து நாக்கில் தடவ வேண்டும். தொப்புளை சுற்றி சிறிது தடவினால் வயிற்று வலி விலகிப் போகும். குழந்தைகளுக்கு வாயு பிரச்னை சரியாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்