SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலும்புகளுக்கு பலம் தரும் கேரட்

2018-04-23@ 15:00:36

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கேரட்டின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்டது கேரட். நோய் எதிர்ப்பு சக்திமிக்க இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. கண்கள், எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதாக விளங்குகிறது. இதயத்துக்கு இதமான சூழலை தருகிறது. உள்உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்கிறது. கேரட் சாப்பிடுவதன் மூலம் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறுநீரை வெளித்தள்ள கூடியது. உடல் எடையை குறைக்க கூடிய கேரட், சிறுநீரக கற்கள், நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

கேரட்டை பயன்படுத்தி கண்களுக்கு பலம் கொடுக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், தேங்காய் பால், வெல்லம், ஏலக்காய். செய்முறை: கேரட் சாறுடன் தேங்காய் பால் சேர்க்கவும். இதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து காலையில் சாப்பிட்டுவர கண்கள் பலம்பெறும். கண் நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பார்வை தெளிவாகும். எலும்புகள் பலம் பெறும். தோலுக்கு நன்மையை தருகிறது.  கேரட்டை கொண்டு வாய், வயிற்று புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், மோர். செய்முறை: கேரட் சாறுடன் சம அளவு மோர் சேர்த்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்துவர வாய், வயிற்று புண்கள் ஆறும். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது மூட்டுவலி ஏற்படும். இப்பிரச்னைக்கு கேரட் சாறு மருந்தாகிறது. உள் உறுப்புகளில் ஏற்படும் வலி, வீக்கம், புண்களை ஆற்றும்.

கேரட்டை கொண்டு கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், கேரட், மஞ்சள், சீரகம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் கேரட் பசை, சிறிது மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் இருமுறை குடித்துவர ஈரல் வீக்கம் வற்றிப்போகும். ஈரல் பலப்படும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இதய படபடப்பை போக்கும். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் உப்பு சேர்க்காமல் எடுக்கவும்.

கேரட்டை கொண்டு சிராய்ப்பு காயங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், கேரட். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேய்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் கேரட் பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி சிராய்ப்பு காயங்கள் மீது போட்டுவர காயம் குணமாகும். தழும்புகள், தீக்காயம் சரியாகும். கேரட்டை அடிக்கடி சாப்பிட்டுவர கண்கள், தோல், எலும்பு, ஈரல், இதயம் ஆகியவை பலப்படும் என்பதில் ஐயமில்லை.  வாய் புண்ணை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிற்றில் புண் அதிகமாகும்போது வாயில் புண் ஏற்படுகிறது. ஒவ்வாத உணவுகளை சாப்பிடும்போது வாய்ப்புண் அதிகமாகும். இப்பிரச்னைக்கு பொன்னாங்கண்ணி மருந்தாகிறது. சிறிதளவு பொன்னாங்கண்ணி இலைகளை மென்று சாற்றை விழுங்குவதால் வாய்ப்புண் விலகிப்போகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • natioanalmemeoryday

  நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

 • CathedralShootingBrazil

  பிரேசில் தேவாலயத்தில் வழிபாடு நடத்துவது போல் வந்த ஒருவன் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

 • 13-12-2018

  13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ll112345

  102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

 • rajini_birthdy

  நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்