SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டான்ஸர்சைஸ்

2018-04-17@ 14:58:57

நன்றி குங்குமம் டாக்டர்

 ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்...

‘ஒரே இடத்தில் எல்லாமே கிடைக்க வேண்டும்’ என்கிற மல்ட்டிஃப்ளெக்ஸ் மனப்பான்மையைப் போலவே, இப்போது ஹெல்த் விஷயமும் சௌகரியத்தைத் தேடும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. உடற்பயிற்சியை தனி வேலையாக செய்யாமல், வேறு ஏதாவது ஒன்றுடன் சேர்த்து செய்ய முடியுமா?

அதுவும் சிரமப்பட்டு சிவனே என்று செய்யாமல் ஜாலியாக இருக்க ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா? என்று பல கோணங்களில் நவீன சமூகம் யோசித்து வருகிறது. அந்த சிந்தனைக்கேற்ப புதிதாக ஒரு விஷயத்தை ஹெல்த் ஃபேஷனாக உருவாக்குகிறார்கள் அல்லது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவற்றைக் கொஞ்சம் மாற்றுகிறார்கள். அப்படி சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் ஒரு ஃபிட்னஸ் கலாசாரம்தான் டான்ஸர்சைஸ்(Dancercise).

Pole Dance

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை நடன அசைவுகளுடன் இணைத்து செய்வதுதான் டான்ஸர்ஸைஸ்.வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான நடன அசைவுகளை கற்றுக் கொள்ளவும், அதேநேரம் இசைக்கேற்ற நடனம் ஆடிக்கொண்டே விளையாட்டாக எடையையும் குறைக்க முடியும் என்பதால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என எல்லோரும் இந்த வகுப்புகளை விரும்புகின்றனர்.

சமீபத்தில் ஜூம்பா, ஹிப்-ஹாப் வகுப்புகளில் நிரம்பி வழியும் கூட்டமே இதற்கு உதாரணம். இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம், இந்த நடனங்கள் எல்லாமே ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவை என்பதுதான். ‘நடனம் என்பது வெறுமனே கலை மட்டுமே அல்ல. அதனால், ஆரோக்கியரீதியான பலன்களும் இருக்கின்றன’ என்பதை ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்தபிறகு, இவை மிகவும் பிரபலமாகி வருகின்றன. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

அரங்கின் நடுவில் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கம்பத்தை சுற்றியும், உச்சியிலிருந்து, அடிவரை சுழன்று நடனமாடுகிற போல் டான்ஸ் நடன அசைவுகளையும், கழைக்கூத்து வித்தையையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்களின் கேளிக்கை கிளப்புகளில் இடம்பிடித்திருந்த இந்தக் கலை சமீபகாலமாக முக்கிய உடற்பயிற்சியாக மாறியுள்ளது. கட்டான உடலில் கவனம் செலுத்தும் பல பிரபலங்களும் ஜிம் மற்றும் டான்ஸ் ஸ்டுடியோக்களில் இந்த நடனப்பயிற்சியைத் தீவிரமாக செய்கின்றனர்.

இரும்பு, பித்தளை போன்ற உலோகத்தால் ஆன 2 இன்ச் சுற்றளவுள்ள கம்பமானது தரையிலிருந்து, மேல் கூரையை தொடுமாறு ஊன்றி வைக்கப்படுகிறது. ‘இந்த வகுப்புகளில், வலிமைப்பயிற்சி, புஷ்-அப்ஸ், சிட்-அப்ஸ் போன்ற பயிற்சிகளை சுழன்றுகொண்டே கம்பத்தில் ஏறும்வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ‘போல்’ நடனத்துக்கு தசைவலிமையோடு கூடிய நுணுக்கமான நடன அசைவுகள் மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை அவசியம்.

உடலை ரப்பர் போல் வளைத்து சுழன்று, சுழன்று ஆடுவதற்கு கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது. இதனால் ஒரு உடற்பயிற்சி மையத்தில் செய்யும் அனைத்துப் பயிற்சிகளின் பலனையும் ஒட்டுமொத்தமாக இந்த போல் நடனத்தில் கற்றுக்கொள்ள முடியும்.

Jazz Dance

ஜாஸ் நடனத்தை கற்றுக் கொள்வதால் உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, வலியைத் தாங்கும் திறன் கிடைக்கும். காற்றில் மிதப்பதுபோல் எம்பி குதித்து, கைகளை விரித்து ஆடும் பயிற்சியால் கால் தசைகளுக்கும், தோள்பட்டை, கைகளிலுள்ள எலும்புகள், தசைகளுக்கும் வலிமை கிடைக்கிறது. உடல் முழுவதையும் ஒருங்கிணைத்து செய்யும் கடுமையான நடன அசைவுகளால் ஒரு தடகள வீரருக்கு நிகரான உடல் வலிமையை பெற முடியும்.

Bollywood Dance

இந்திய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் பாலிவுட் நடனம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தாளத்துக்கேற்ப கால்களை துரிதமாக தட்டியும், அதேநேரத்தில் மெதுவாக தோள்களை அசைத்து செய்யும் இந்த நடனம் உடலுக்கு ஒருங்கிணைப்புத்திறன் மற்றும் சமநிலையைக் கொடுக்கிறது. அனிமேஷன் மூவ்மென்ட் போல இருக்கும் நடன அசைவுகள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் பலனைக் கொடுக்கிறது.

பின்னங்கால் தசைகளுக்கு வலிமையையும், உடலின் அனைத்து மூட்டு இணைப்புகளுக்கும் நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உள்ளங்காலிலிருந்து மூளை வரை பாயும் ரத்த ஓட்டத்துக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. தொடர்ந்து இந்த நடனத்தை பயிற்சி செய்வதன் மூலம் மனமும் உடலும் லேசாகும்.

Belly Dance

இடுப்பை ‘8’ வடிவத்தில் வளைத்து வளைத்து இந்த நடனத்தை ஆடுவதால் கீழ்முதுகு இடுப்பு பகுதிகளுக்கு அசைவுகள் கிடைக்கின்றன. இடுப்பு எலும்பு, கீழ் முதுகு, முதுகுத்தண்டுவடத்தின் வால்பகுதியிலுள்ள இணைப்பு எலும்புகள் மற்றும் தசைநார்கள் நெகிழ்ச்சி அடைகின்றன.

இதனால் இடுப்புவலி, கீழ்முதுகுவலி குணமாகும். எலும்புகளின் அடர்த்தி அதிகமாகிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைவதால் ‘ஒல்லி பெல்லி’ யாகலாம். இந்த நடனத்தை கர்ப்பிணிகள் பயிற்சி செய்தால் சிக்கல் இல்லாத சுகப்பிரசவம் நிச்சயம். இடுப்பு எலும்புகள் விரிவடைவதால் பிரசவத்தின்போது கடுமையான வலி குறையும். மேலும் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலியிலிருந்தும் விடுபடலாம். ‘பெல்லி’ டான்ஸ் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதால் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Kathak

நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு தசைகளை கரைத்து, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ‘கதக்’ நடனம் கற்றுக் கொள்வது நல்ல பயனை கொடுக்கும். கதக் நடனகலைஞர்கள் இடுப்பைச் சுற்றிலும் அதிக எடையிலான ஆபரணங்களை அணிந்து கொள்வதை பார்த்திருப்போம். இது எடைதாங்கும் பயிற்சிகளுக்கு இணையானது. மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் கதக் நடனத்தால், மனம், உடல் கட்டுப்பாடு கிடைக்கும்.

Odyssey

‘ஒடிசி’ நடனக்கலைஞர்களின் அங்க அசைவுகள் தசைகளை வலிமையடையச் செய்கின்றன. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து எலும்பு இணைப்பு களுக்கு நெகிழ்ச்சித்தன்மையை கொடுக்கிறது. வெளிப்படுத்தும் முக பாவனைகள், முகப் பயிற்சியாகவும் (Facial exercises) பயனளிப்பவை.

தொகுப்பு: இந்துமதி

Tags:

Tansarcais
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vehicletest

  பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்