SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை

2018-04-13@ 14:26:27

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் காணக்கூடிய சரக்கொன்றையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நோய்களை தீர்க்க கூடிய தன்மை கொண்ட சரக்கொன்றை மரத்தின் காய்கள், பூக்கள், பட்டை ஆகியவை மருத்துவ குணங்களை உடையது. சரக்கொன்றை பூவை மேல்பற்றாக போடும்போது தோல்நோய்கள் குணமாகும். இதை காயவைத்து பொடித்து சாப்பிடும்போது ஆவரையை போன்று இதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வயிற்று பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சரக்கொன்றை பூக்கள், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒருபிடி சரக்கொன்றை பூக்கள் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து வேக வைக்கவும். இதை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இதில், 20 மில்லி அளவுக்கு வாரம் ஒருமுறை இரவு தூங்குமுன்பு குடித்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். பல்வேறு நன்மைகளை கொண்ட சரக்கொன்றை மரம் முழுவதும் பூக்களாக இருக்கும். இது அழகுக்காக வளர்க்கப்படுகிறது. சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சரக்கொன்றை பூக்கள், பால், பனங்கற்கண்டு அல்லது தேன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒருபிடி அளவுக்கு சரக்கொன்றை பூக்கள் எடுக்கவும். இதனுடன், அரை டம்ளர் பால் சேர்த்து வேக வைக்கவும். இதில், பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து கலக்கவும். தினமும் ஒருவேளை தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் உள்ள கிருமிகள் வெளியேறும். கருப்பை பலப்படும். சிறுநீர்தாரையில் ஏற்படும் புண்கள் ஆறும். ரத்தத்தில் உள்ள பித்தத்தின் அளவை குறைக்கும். பூஞ்சை காளான்கள், நோய்கிருமிகளை போக்கும்.

சரக்கொன்றை காயை பயன்படுத்தி அடிபட்ட காயம், வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சரக்கொன்றை காய், பெருங்காயப்பொடி, சுக்குப்பொடி. செய்முறை: சரக்கொன்றை காய்களின் உள்ளே இருக்கும் புளியை எடுக்கவும். இதனுடன் பெருங்காயப்பொடி, சுக்குப்பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து பசையாக தயாரிக்கவும். இதை ஆறவைத்து பூசும்போது வீக்கம், வலி சரியாகும்.

சரக்கொன்றை காய்கள் முருங்கையை போன்று இருக்கும். இதன் உட்பகுதியில் இருக்கும் புளி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது, வண்டு கடி, வீக்கம், வலிக்கு அற்புதமான மருந்தாகிறது. கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடிய மூலிகைகளில் ஒன்றான சரக்கொன்றை பூக்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. சொரியாசிஸ், சிரங்கு, படை போன்றவற்றை சரிசெய்கிறது. இதை சேமித்து வைத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் பயன்தருவதாக அமையும்.

வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு வயிற்றுப்புண் முக்கிய காரணமாக அமைகிறது. வாயில் கிருமிகள் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். இப்பிரச்னைக்கு நுனா இலைகள் மருந்தாகிறது. சாலையோரம் காணப்படும் நுனா இலைகளை நீரில் கொதிக்கவைத்து வாய்கொப்பளிப்பதாலும், சிறிது சாப்பிடுவதாலும் வயிறுப்புண் குணமாகும். வாய் துர்நாற்றம் விலகிப்போகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்