SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை

2018-04-09@ 14:20:52

உடல் ரீதியாக தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளியில் சொல்ல பெரும்பாலும் பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அப்படி ஒரு பிரச்னைதான், சிறுநீர் தொற்று (யூரினரி இன்பெக்‌ஷன்). இது, ஏற்படுவதற்கான காரணம் மற்றும் தீர்வு இதோ...

அறிகுறி

* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
* சிறுநீர் சரியாக கழிக்க முடியாமல் வலி ஏற்படுவது.
* முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வின்மை.

காரணங்கள்

* தேவையான குடிநீர் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளாதது.
* நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது.
* நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.
* அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது.
* சுகாதாரமற்ற கழிப்பறை சூழல் மற்றும் கழிவறை பழக்கம்.
* மலம் கழிக்கும்போது சரியாக சுத்தம் செய்யாதது.
* சரியாக சாப்பிடாததால் சுரக்கும் அமிலங்கள் சிறுநீர் பாதையில் நோய் தொற்றை ஏற்படுத்துவது.
* காப்பர் - டி கருத்தடை சாதனம் பயன்படுத்துவதால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
* கேன்சர், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளாக இருக்கும் பட்சத்தில். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிப்பது.

தீர்வு

* யூரினரி இன்பெக்‌ஷன் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, இந்த பிரச்னையில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம்.
* 4% முதல் 10% வரை பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்கும் விதமாகவும், நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடனும் அதிகளவில் நீர் பருக வேண்டும்.
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மருத்துவர் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* யூரினரி இன்பெக்‌ஷன், ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே சரியாகிவிடும். ஆனால், அது வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் பட்சத்தில், ரத்தம், சீழ் கசிவதுடன் மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி காரணத்தை துல்லியமாக அறியும் வண்ணம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது அவசியம்.
* புதிதாக திருமணமான பெண்களுக்கு தாம்பத்திய காரணத்தால் சிறுநீர் தொற்று ஏற்படலாம். இது, இயல்பானது. மாத்திரை, டானிக் என்று எளிய சிகிச்சையில் இதை குணப்படுத்தலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vetpalar_meenu111

  பிரபல அரசியல் தலைவர்கள் மத்தியில் மீனாட்சியம்மன், மகாத்மா காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

 • dubaikenyateacher

  துபாயில் நடைபெற்ற சர்வதேச சிறந்த ஆசிரியருக்கான விருதை வென்ற கென்யா ஆசிரியர்

 • thai_makkal12

  தாய்லாந்தில் பச்சை குத்தும் திருவிழா :பரவசநிலையில் பச்சை குத்தப்பட்ட வடிவத்துடன் இரண்டறக் கலக்கும் மக்கள்

 • flag_hum12

  மக்களவைத் தேர்தல் எதிரொலி : கட்சி கொடி, சின்னங்களுடன் கூடிய வண்ண குடைகள், தொப்பிகள் அமோக விற்பனை

 • idai_hurricane1

  ஆப்பிரிக்காவில் இடாய் சூறாவளி கோரத்தாண்டவம் : 700க்கும் அதிகமானோர் மாண்டனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்