SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீரிழிவு நோயாளிகளுக்கு...

2018-04-04@ 14:41:46

நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி


நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்பதில் பல குழப்பங்களும், சில தவறான புரிதல்களும் உள்ளது. அவர்கள் எந்த மாதிரியான பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகள் இதோ...

* உள்ளூரிலும், அந்தந்த பருவ காலங்களிலும் கிடைக்கிற சுத்தமான, புதிய பழங்களை சாப்பிட வேண்டும்.

* குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள(Low Glycemic Index) பழங்களை சாப்பிட வேண்டும். அதிக க்ளைசெமிக் குறியீடுள்ள (High Glycemic Index) பழங்களை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.

* பழங்களை முதன்மை உணவாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உணவருந்தும் வேலைகளுக்கு இடையில் அவற்றை தின்பண்டங்கள் போன்று சாப்பிடலாம்.

* பழங்களுடன் அதன் சர்க்கரை அளவை சமன் செய்வதற்காக சில கொட்டைகள், ஆளி விதைகள் அல்லது லவங்கப்பட்டை போன்றவற்றை தூவி சாப்பிடலாம்.

* ஆப்பிளை சிலர் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். அதுபோல் எப்போதும் பழங்களை சமைத்து சாப்பிடக்கூடாது. பழத்தின் முழு சத்துக்களையும் பெறுவதற்கு, பழச்சாறுகளாக சாப்பிடுவதைக் காட்டிலும் அதை சுத்தம் செய்துவிட்டு  அப்படியே சாப்பிடுவது நல்லது.

* நீரிழிவு நோயாளிகள் தகுந்த நீரிழிவு மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் எல்லா வகையான பழங்களையும் ருசித்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள பழங்களை சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம். Glycemic Index என்றால் என்னவென்று தெரிந்துகொண்டால், அது இன்னும் எளிதாகப் புரிந்துவிடும்.

நாம் உட்கொண்ட உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலுள்ள கார்போஹைட்ரேட்டின் தரத்தின் அளவையே Glycemic Index என்கிறோம்.

எளிய கார்போஹைட்ரேட்டுகள் (Simple Carbohydrates) ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. ஆனால், சிக்கலான கார்போஹைட்டுகள் (Complex Carbohydrades) ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கிறது.

இந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடுகள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் மாறுபடுகிறது. இதன் மதிப்பு 70 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அதை High Glycemic Index என்றும், 56 முதல் 69 வரை இருந்தால் அதை Medium Glycemic Index என்றும், 50 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அதை Low Glycemic Index என்றும் சொல்கிறோம். உதாரணமாக, நாம் பயன்படுத்தும் சில பழங்களின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடுகளைப் பார்ப்போம்.

* க்ளைசெமிக் மதிப்பு 120 கிராம் ஆப்பிள் பழத்தில் 38 என்றும், 250 கிராம் ஆப்பிளை சாறெடுத்து அதில் சர்க்கரை சேர்க்கப்படாதபோது இந்த மதிப்பு 40 என்றும் உள்ளது.

* 120 கிராம் இனிப்பு சேர்த்த இலந்தைப் பழத்தில் 64 என்றும், 60 கிராம் சாதாரண இலந்தைப் பழத்தில் 31 என்றும் இந்த மதிப்பு உள்ளது.

* 120 கிராம் சரியான அளவில் பழுத்த வாழைப்பழத்தில் 51 என்றும், 120 கிராம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தில் 31 என்றும், 120 கிராம் அதிகமாக பழுத்த வாழைப்பழத்தில் 48 என்றும் இந்த மதிப்பு உள்ளது.

* 60 கிராம் உலர்ந்த திராட்சையில் 103 என்றும், 120 கிராம் மாம்பழத்தில் 51 என்றும், 250 கிராம் சர்க்கரை சேர்க்கப்படாத தக்காளிச்சாற்றில் 38 என்றும் இந்த மதிப்பு உள்ளது.

இப்படி நாம் சாப்பிடும் ஒவ்வொரு பழங்களின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் அளவுகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்து, நமக்கு தேவைப்படுகிறஅளவில், தகுந்த பழங்களைத் தேர்வு செய்து சாப்பிடலாம்.

 தொகுப்பு: க.கதிரவன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்