SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈஸி...டேஸ்ட்டி... ஹெல்த்தி...

2018-01-11@ 14:20:09

நன்றி குங்குமம் டாக்டர்

நம் நாட்டில் பல மொழி பேசக்கூடிய மக்கள் மற்றும் அவர்களது பல்வேறு உணவு கலாச்சார வகைகள் மாநிலத்துக்கு மாநிலம் ஒன்றோடு ஒன்று வேறுபட்டதாக உள்ளது. இருப்பினும் இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய எல்லா தரப்பு மக்கள் மற்றும் சாமானியர்களும் சமைத்து உண்ணக்கூடிய ஓர் உணவாக கிச்சடி இருப்பதால், நமது கிச்சடியை இந்திய உணவாக (Brand india food) உலக உணவு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளனர். இதனால், மற்ற உணவுக்கு எல்லாம் ராணி என்ற மதிப்பையும் கிச்சடி பெற்றுள்ளது.

சமீபத்தில் கின்னஸ் புத்தகத்தில் நமது கிச்சடி இடம் பெற்றுள்ளது. கிச்சடியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று உணவியல் நிபுணர் பத்மினி வெங்கடேஷிடம் கேட்டோம்...‘‘பொதுவாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரவா கிச்சடி சமைப்பது தான் வழக்கம். அதுவும் எப்போதாவது தான் கிச்சடியே நம் சமையலில் இடம்பெறும். காரணம், நமது வீடுகளில் கிச்சடியை அதிகம் விரும்ப மாட்டார்கள். ஆனால், பல்வேறு உணவு நிபுணர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கிச்சடி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு என கூறியுள்ளனர்.’’

கிச்சடி எந்த வேளை உணவுக்கு சிறந்தது?

‘‘எல்லா வேலைகளிலும் சாப்பிடக் கூடிய ஓர் எளிய உணவுதான் கிச்சடி. ஆனாலும், காலை உணவுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில் கிச்சடியில் அதிகமான கலோரிகளும் புரதச்சத்தும் உண்டு. காலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அந்த நாள் முழுவதுக்குமான தேவைப்படும் எனர்ஜி கிடைக்கும். வட மாநிலங்களில் மத்திய உணவுக்கு ரொட்டியுடன் சப்ஜி மற்றும் கிச்சடியை எடுத்துக் கொள்கிறார்கள். இரவு நேரங்களில் கிச்சடி சாப்பிட விரும்பினால் பருப்பு மற்றும் நெய் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.’’

குழந்தைகள் கிச்சடியை விரும்புவதில்லையே...

‘‘மெல்லுவதற்கும், விழுங்குவதற்கும், ஜீரணம் எளிதில் ஆவதற்கும் வசதியான உணவு கிச்சடி. எனவே, குழந்தைகளுக்கேற்ற சிறப்பான உணவு என்று கிச்சடியைச் சொல்லலாம். உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த காய்கறிகளைச் சேர்த்து சமைத்துக் கொடுக்கும்போது அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். இதன்மூலம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். பருப்பு மற்றும் நெய் சேர்க்கும் கிச்சடியை குழந்தைகளுக்கு மதிய வேளைகளில் கொடுப்பது நல்லது.’’

கிச்சடியை தினசரி உணவாக சேர்த்துக் கொள்ளலாமா?

‘‘இட்லி, தோசை போன்று கிச்சடியையும் தினசரி எடுத்துக் கொள்ளலாம். இதில் எந்தவித உணவு கட்டுப்பாடும் இல்லை. அரிசி கிச்சடி, ஓட்ஸ் கிச்சடி, கம்பு கிச்சடி, கோதுமை கிச்சடி, ரவை கிச்சடி, சாமை கிச்சடி, குதிரைவாலி கிச்சடி என 80 வகையான கிச்சடிகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவே!’’

சர்க்கரை நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு கிச்சடி எவ்வாறு பயன் தரும்?

‘‘கிச்சடி என்பது ஒரு தனிப்பட்ட சத்தினை மட்டுமே கொண்ட ஓர் உணவல்ல. கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதில் அடங்கியுள்ளன. எனவே, சர்க்கரை நோயாளிளுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு தான் கிச்சடி. அரிசிக்கு பதிலாக ஓட்ஸ் அல்லது நமது பாரம்பரிய உணவு தானியங்களான குதிரை வாலி, வரகு, சாமை மற்றும் கோதுமை போன்றவற்றின் மூலம் காய்கறிகளையும் அதிகமாக சேர்த்துத் தயார் செய்தால் இன்னும் அதிகம் பயன் தரக்கூடிய உணவாக கிச்சடி ஆகிவிடும்.’’

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கிச்சடி சாப்பிடலாமா??

‘‘பருப்பு, நெய் போன்றவற்றை கிச்சடியில் தவிர்த்தால் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கும் கிச்சடி சரியான உணவுதான்.’’

உடல்நிலை சரியில்லாதவர்கள் கிச்சடி சாப்பிடலாமா?

‘‘உடல்நிலை சரியில்லாதவர்கள் அரிசி, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து கஞ்சியாக வைத்து சாப்பிடலாம். இது அவர்களுக்கு சிறந்த ஆகாரமாக இருக்கும். இப்படி கஞ்சிபோல கிச்சடியைச் சாப்பிடுவதால் நோய்க்கால உடல்வலி நீங்கும். பலவீனமாக இருக்கும் உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.’’

கிச்சடியில் சேர்க்கப்படும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் பற்றி...

‘‘அரிசியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றலையும், குளிர்ச்சியையும் தரும். பச்சைப்பருப்பில் புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது. மேலும் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் A, B-12, B-6, D, இரும்புச்சத்து மற்றும் மக்னீஷியம் போன்றவையும் உள்ளதால் உடலுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும். வெங்காயம் இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து,
உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

மேலும் முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. பூண்டு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வாயுத் தொல்லைகள் உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். தேங்காய்க்கு வயிற்றுப் புண்களை நீக்கும் சக்தி உண்டு. அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய்ப்பால் சிறந்தது. கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் குடலில் உள்ள கிருமிகள் அழியும். கண் பார்வை தெளிவடையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். இதுபோன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது கிச்சடி. மொத்தத்தில் கிச்சடியானது சாப்பிடுவதற்கு மட்டுமல்ல எளிதில் சமைக்கக் கூடிய மிக எளிதான ஒன்று. தற்போதைய அவசர காலங்களில் 15 நிமிடத்துக்குள் யார் வேண்டுமானாலும் எளிதில் சமைத்துவிடக் கூடிய உணவு என்பதால் கிச்சடி பெஸ்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!’’

- எம்.வசந்தி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்