SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தையும் தேனும்

2017-12-18@ 12:53:19

பார்த்தேன். சிரித்தேன். பக்கத்தில் அழைத்தேன். உனைத்தேன். என நான் நினைத்தேன் இது மலைத்தேன் என நான் மலைத்தேன் என்ற கவிஞரின்  வரிகள் குழந்தையின் தேன் சிரிப்பை படம்பிடித்துக் காட்டுவதுடன் இதயத்தில் இன்பத் தேன் ஊற்றுகிறது. குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு  தனிக்கலை. குழந்தை அழும்போதெல்லாம் பசிக்காகத்தான் அழுகிறது என்று நினைக்கக்கூடாது. குழந்தையின் பிரச்னைகளை புரிந்து, தீர்க்கும் தாயின்  அன்புதான் குழந்தைக்கு பலம். குழந்தைக்கு தேன் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கிறது. நமக்கு குழந்தைகள் முத்தம் எப்படி தேன் போல்  இனிக்கிறதோ. அதுபோல் தேன், குழந்தைகளுக்கு உடல் ரீதியான பல்வேறு கோளாறுகளை தீர்த்து வைத்து புன்னகைக்க வைக்கிறது.

குழந்தைகளுக்கு தேன் தரும் பலன்கள்

*இளஞ்சூடான நீரில் தேன் கலந்து குழந்தை தூங்குவதற்கு முன்பு கொடுத்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நீங்கும்.

*கேரட்டை நன்றாக அரைத்து சாறாக்கி அதில் தேன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உடல் பலம் பெருகும்.

*தேங்காய் தண்ணீரில் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கிருமித்தொல்லை நீங்குவதுடன் உடல் பலமும் பெறும்.

*நேந்திரம் பழத்தை வேகவைத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலம் பெறும்.

*பேரிச்சம் பழத்துடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை பெருகும்.  

*குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது ஏற்படும் வலியைப்போக்க பல் முளைக்கும் பகுதியான எகிறில் தேனைத் தடவினால் வலி குறைந்து உடல் வலிமை பெறும்.

*குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தவுடன் தேன் கொடுத்தால் மருந்தின் கசப்புத்தன்மை நீங்குவதுடன் எளிதில் மருந்துகள் ஜீரணிக்க உதவியாக  இருக்கும்.

*குழந்தைகளுக்கு வாயில் புண் ஏற்பட்டால் வெங்காயச்சாற்றுடன் வாயில் தேனைத் தடவினால் வாய்ப் புண்கள் மறையும்.

*குழந்தைகள் படுப்பதற்கு முன்பாக அரைத்தேக்கரண்டி தேன் கொடுத்து வந்தால் குழந்தைகள் நன்றாகத் தூங்கும்.  

*வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவினால் வாந்தி, ஒக்காளம் தீரும்.

*துளசி சாற்றில் சிறிது நல்ல சுத்தமான தேனைக் கலந்து வைத்துக் கொண்டு ¼  தேக்கரண்டி வீதம் ½ மணிக்கு ஒரு முறை என மூன்று வேளை  கொடுத்து வந்தால் குழந்தைகளின் வாந்தி நின்றுவிடும்.

*கரிப்பான் இலைச்சாறு இரண்டு துளி எடுத்து 5 துளி தேனில் கலந்து கொடுத்தால் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோர்வை, சளி நீங்கிவிடும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்