SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தும்மலை போக்கும் கற்பூரவல்லி

2017-12-11@ 14:30:37

நமக்கு அருகில் எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வில்வம், தும்பை பூ, கற்பூரவல்லி ஆகியவற்றை கொண்டு தும்மல், தலைநீரேற்றத்தை போக்குவது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.தலைநீரேற்றத்தால் மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, அடுக்கடுக்கான தும்மல், தலைவலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது.

கற்பூரவல்லி தண்டுகளை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதனுடன், கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் எடுத்து சிறுசிறு துண்டுகளாக்கி நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். இந்த தேனீரை தினமும் உணவுக்கு முன்பு எடுத்துவர தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலைநீரேற்றம் இருக்கும்போது கடுமையான வலி, அடிக்கடி தும்மல் இருக்கும். மூக்கில் அரிப்பு ஏற்படும். இப்பிரசனைகளுக்கு கற்பூரவல்லி தேனீர் அற்புதமான பலனை தருகிறது.

வில்வ இலையை பயன்படுத்தி தலைநீரேற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வில்வ இலை, சீரகம், தேன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதனுடன் சீரகம், நீர் விடாமல் அரைத்த வில்வ இலைகள் அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர தலைநீரேற்றம் சரியாகும். இந்த தேனீர் தலைபாரத்தை குறைக் கிறது. மூக்கில் சளி ஒழுகுதலை நிறுத்துகிறது. நெஞ்சக சளியை வெளித்தள்ளுகிறது.  ஒவ்வாமையை போக்கும் அற்புதமான மருந்தாக வில்வம் விளங்குகிறது. இது, சர்க்கரை நோய், தோல் நோய்க்கு மருந்தாகிறது.

தும்பை பூவை கொண்டு தலைநீரேற்றத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தும்பை பூ, நல்லெண்ணெய், சாம்பிராணி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். இதனுடன் 2 சிட்டிகை சாம்பிராணி, தும்பை பூ சேர்த்து பொறிக்கவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தலைநீரேற்றம் சரியாகும். அடிக்கடி குளிர் பானங்கள் குடிப்பது, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது போன்றவற்றால் நீரேற்றம் ஏற்படும். இப்பிரச்னைக்கும் தும்பை பூ தைலம் அற்புதமான மருந்தாகிறது.

இது, உடலுக்கு உஷ்ணத்தை தருகிறது. தலையில் உள்ள பொடுகை போக்குகிறது.எளிதில் கிடைக்க கூடிய கற்பூரவல்லி, தும்பை பூ, வில்வம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் தலைநீரேற்ற பிரச்னை எளிதில் சரியாகும்.  குமட்டல், வாந்தியை நிறுத்தும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை வெங்காயம், இஞ்சி, தேன். செய்முறை: வெள்ளை வெங்காயம் சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இஞ்சி சாறு, தேன் சேர்த்து குடித்துவர குமட்டல், வாந்தி பிரச்னை சரியாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்