SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலம் நோய்க்கு மருந்தாகும் சேப்பங்கிழங்கு கீரை

2017-02-22@ 15:08:02

நமக்கு எளிதில், அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் இதய நோயை போக்கவல்லதும், ரத்த ஓட்டத்தை சீர் செய்வதும், மூலம் நோய்களை குணமாக்க கூடியதுமான செம்பருத்தி மற்றும் சேப்பங்கிழங்கு கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.பல்வேறு சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கினை  ஊட்டச்சத்து மிகுந்த உணவாக பலர் சாப்பிடுவது உண்டு. ஆனால் அதன் இலைகளில் மகத்தான சத்துக்கள் நிறைந்து இருப்பது பலருக்கு தெரிவதில்லை. சேப்பங்கிழங்கு கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களுடன் ஸ்டீராய்ட்ஸ் என்ற மருத்துவ குணமும் அடங்கியுள்ளது. இதனால் கீரை மற்றும் கிழங்குகள் உணவாக பயன்படுத்துவதுடன் மூட்டு வலியை போக்கும் மேல்பூச்சாகவும் பயன்படுகிறது.

அதேபோல் வீடுகளில் நடப்பட்டுள்ள ஒற்றையடுக்கு நாட்டு செம்பருத்தியில் பல்வேறு மூலிகை குணங்கள் நிறைந்துள்ளது. பருத்தி இனத்தை சார்ந்த இப்பூவானது, செம்பு சத்து மிகுந்ததாக இருக்கிறது. குறிப்பாக இதயத்துக்கு பலம் தரக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீர்செய்வது. வாத, பித்த, சிலோத்துமம் என்ற மூன்றையும் சமப்படுத்துவதாக இருக்கிறது. தற்போது செம்பருத்தி மற்றும் சேப்பங்கிழங்கு இலையினை மருந்தாக பயன்படுத்துவது குறித்து சில குறிப்புகளை பார்க்கலாம். நரம்புக்கு பலம் தரும் செம்பருத்தி பூ சர்பத் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ- 2 அல்லது 3, எலுமிச்சை, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை. பாத்திரத்தில் 1 கப் நீர்விட்டு, செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வெல்லம் கலந்து பானமாக அருந்தலாம். இந்த பானத்தை வெயில் நேரங்களில் அருந்துவதன் மூலம் உடல் சூடு தணிகிறது. குடல் புண்களை ஆற்றுவதோடு, எலுமிச்சை சேர்ப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தோலினை மிளிர செய்கிறது.

இரண்டாவதாக மலச்சிக்கல், காய்ச்சலை போக்கும் சேப்பங்கிழங்கு கீரை சூப் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு இலை, புளி கரைசல், நல்ல எண்ணெய், பெருங்காயம், கடுகு, பூண்டு, வெங்காயம், மிளகு பொடி, சமையல் உப்பு.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி, சிறிது பெருங்காயப்பொடி, கடுகு, பூண்டு பற்கள், வெங்காயம் நறுக்கியது, சேப்பங்கிழங்கு இலை நறுக்கியது சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மிளகு மற்றும் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதனுடன் நெய் சேர்த்து அருந்தலாம்.சேப்பங்கிழங்கு இலை உணவாக சூப் செய்து குடிக்கும்போது மலச்சிக்கல், ஆசன வாயில் ரத்த கசிவு, ரத்த மூலம், சீல மூலம், வெளி மூலம், உள் மூலம் போன்ற மூல வகை நோய்கள் நீங்குகிறது. மேலும் உடலில் ரத்த கசிவை நீக்கி, குருதியை உடனடியாக உரைய செய்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி, நார்சத்து, பாஸ்பரஸ், ஆல்கலாய்ட்ஸ் உள்ளிட்ட வேதி பொருட்களையும் உள்ளடக்கி உள்ளதால், உடலுக்கு பலம் தரும். உடல் தேற்றியாக இருக்கிறது. இதேபோல் சேப்பங்கிழங்கு கீரை சாற்றுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடிக்கும்போது, காய்ச்சல் தணிகிறது. இந்த இலை சாற்றினை வண்டு கடி, கொசுக்கடி போன்ற விஷக்கடிகளை நீக்கும் மேல்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம். கிழங்குகளை சமைத்து சாப்பிடுவதால் ஊட்டசத்து அளிப்பதோடு, மாதவிலக்கை சரிசெய்து, பெரும்பாடு நோயினை தடுக்கிறது. இது ஈறுகளில் ரத்த கசிவினை நிறுத்துகிறது. வேகவைத்த கிழங்கினை அரைத்து மூட்டுகளில் பற்றாக போடும்போது, மூட்டுவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
against abortion blog.hoomla.se abortion videos
medical abortion clinics teen abortions abortion cost
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
nalprexon does naltrexone stop cravings side effects of revia
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • delli_engottai11

  டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்