SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணம் இனிதாக...

2016-12-19@ 15:40:41

நன்றி குங்குமம் டாக்டர்

சுகப்பிரசவம் இனி ஈஸி டாக்டர் கு.கணேசன்

தாய்மை ஒரு தவம். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அற்புத தருணம் அது. ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கிற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.‘என்ன சார், வீட்டில் ‘விசேஷம்’ உண்டா?’திருமணமான மறு மாதம் முதல் புகுந்த வீடு, பிறந்த வீடு, அண்டை வீடு, உற்றார் உறவுகள் என எல்லோரிடம் இருந்தும் தம்பதிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது. திருமணமாகி ஆறு மாதங்கள் முடிந்துவிட்டால் போதும், ‘என்ன, வயிற்றில் புழு, பூச்சி விழலயா?’ என்று மனதை நோகடிக்கும் வார்த்தைகளும் வலம் வரத்தொடங்கும். இது ஒரு காலம்.இப்போது நிலைமை தலைகீழ்!

நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வது, குழந்தைக்கான எதிர்காலத் தேவைகளுக்குத் தயார்படுத்திய பிறகே, குழந்தை பெற்றுக்கொள்வது என முடிவெடுப்பதுதான் இன்றைய இளைய தலைமுறையின் நடைமுறையாக இருக்கிறது.திருமணமானாலும் சரி, குழந்தைப்பேறாக இருந்தாலும் சரி,உரிய நேரத்தில், உரிய வயதில் நடந்தால்தான், அது ஆரோக்கிய வாழ்வுக்கு வழி செய்யும். பிரசவத்துக்கு முந்தைய பரிசோதனை முறைகளும், சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவாவதில் இருந்து குழந்தை பிரசவம் ஆகும் வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது.என்றாலும், இன்றைய உணவுப்பழக்கத்தால் ஏற்படும் உடல் பருமன், தொழில் புரட்சியால் உண்டான சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகப்படியான வேலைபளுவால் உண்டாகும் மன அழுத்தம், சொகுசான வீட்டு உபயோகக்கருவிகளால் குறைந்துபோன உடல் உழைப்பு, மறந்துபோன விளையாட்டு போன்ற பல்வேறு காரணங்களால் கருவுறுதலும் பல பெண்களுக்குத் தள்ளிப்போகிறது. அப்படியே காலத்தோடு கருவுற்றாலும் ‘கர்ப்பம்’ குறித்த சரியான புரிதல் இல்லாமல், பலருக்கும் கர்ப்பகாலம் என்பது பயம் மிகுந்த பதற்றம் நிறைந்த பருவமாகிவிடுகிறது.

கருத்தரிக்கும் வயது


25 வயதுக்குள் திருமணம், 30 வயதுக்குள் குழந்தைப்பேறு என்று இருந்தால் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும் என்கிறது மருத்துவத்துறை. அதிகபட்சம் 35 வயதுக்குள் தாயாகி விடுவதும் தந்தையாகி விடுவதும் நல்லது என்கிறது எங்கள் அனுபவ மருத்துவம்.திட்டமிடுதலே இனிய பயணத்தின் தொடக்கம்!

திருமணமானதும் கணவன் - மனைவி இருவரும் ‘எப்போது கர்ப்பம் தரிப்பது?’ என்பதைத் திட்டமிட வேண்டியது அவசியம். ‘இப்போதைக்குக் குழந்தை வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று நினைத்து, குழந்தைப் பிறப்பைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடும் தம்பதியர், மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எந்த மாதிரியான கருத்தடை முறையைப் பின்பற்றுவது என்பதைத் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்
களாகவோ, அடுத்தவர்கள் சொன்னதைக் கேள்விப்பட்டோ ஏதேனும் ஒரு கருத்தடை முறையைப் பின்பற்றினால், பின்னாளில் கருவுறுதலுக்கு அது பிரச்னை செய்ய வாய்ப்பு இருக்கிறது.திருமணமானவுடன் குழந்தை பெற விரும்பும் தம்பதியர், உடல் மற்றும் மனரீதியான பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டியது அவசியம். அதற்கு, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மகப்பேறு மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது.

இந்தக் கலந்தாய்வில் கர்ப்பம் பற்றிய பல்வேறு சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் போன்றவற்றைக் கேட்டுத் தெளிவு பெறுவதோடு, கர்ப்பத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளவும் முடியும். மேலும், இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச்சூழல், குடும்ப வரலாறு, பரம்பரை நோய், பெண்ணின் மாதவிடாய் சுழற்சி ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வார்.அடுத்து, கர்ப்ப காலத்தில் உடல் நலத்தைப் பேணும் முறை, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியதன்
முக்கியத்துவம், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கின்ற செயல்களைத் தவிர்ப்பது போன்ற அடிப்படைத் தகவல்களை மருத்துவர் வலியுறுத்துவார். இது ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு அடிப்படையாக அமையும்.

மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள் !

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது மிகவும் முக்கியமான உடலியல் விஷயம். மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும் பெண்ணுக்கு கர்ப்பம் தரிப்பதில் அவ்வளவாகப் பிரச்னைகள் ஏற்படுவது இல்லை. இந்தச் சுழற்சி ஒழுங்காக இல்லாதபோது, அதற்கான காரணத்தை சில பரிசோதனைகள் மூலம் அறிந்து சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் கர்ப்பம் தரிக்க முடியும்.

28 முதல் 30 நாட்கள் என்பது வழக்கமான மாதவிடாய் சுழற்சி. மாதவிலக்கு ஆன நாளில் இருந்து 12, 13, 14, 15, 16, 17-வது நாட்கள்தான் முக்கியமானவை. இந்த நாட்களில் தாம்பத்திய உறவை வைத்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

பரம்பரைக் கோளாறுகள்


பொதுவாக பல குடும்பங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை இருக்கும். பெண்ணுக்கு இந்த நோய்கள் இல்லாவிட்டாலும், கர்ப்ப காலத்தில் இவை புதிதாக ஏற்படலாம். தம்பதிகளுக்குள் மரபணு தொடர்பான டர்னர் சின்ட்ரோம், டவுன்
சின்ட்ரோம், சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், மஸ்குலர் டிஸ்ட்ரோபி, தலசீமியா போன்ற நோய்கள் இருக்கலாம் அல்லது நெருங்கிய
உறவில், பரம்பரையில் யாருக்காவது இவை இருந்திருக்கலாம். இந்தக் கலந்தாய்வில் இம்மாதிரியான மருத்துவப் பின்னணி பற்றிய விவரங்களை மருத்துவர் தெரிந்துகொண்டால், கருத்தரிக்கும்போது கர்ப்பிணிக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிகள் சொல்லுவார்.அல்லது ‘மரபணு ஆலோசனை’(Genetic counselling) தரும் மருத்துவரிடம்
ஆலோசனை பெற வழிசெய்வார்.

உடலில் இருக்கும் நோய்கள்


1. நீரிழிவு நோய்:

சில பெண்களுக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருக்கும். இவர்கள் கர்ப்பமடைய ஆரம்பிக்கும் போதும் சரி, கருவுற்றபிறகும் சரி ரத்தச் சர்க்கரை அளவை மிகவும் சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே, மருத்துவரின் முதல் கலந்தாய்வின்போது இவர்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் இருக்குமானால், நோயின் பாதிப்பு கர்ப்பிணியை மட்டுமல்லாமல் குழந்தையையும் தாக்கிவிடும். நீரிழிவுக்காக இதுவரை மாத்திரைகள் சாப்பிட்டவர்கள், கர்ப்ப காலத்தில் இன்சுலின் ஊசிக்கு மாற வேண்டியது வரலாம்.

2. உயர் ரத்த அழுத்தம்:

கருத்தரிக்க தயாராகும் பெண்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இந்த நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதாக இருந்தால், அவர்கள் சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகள் கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்காமல் இருக்க, மருத்துவர் யோசனைப்படி பாதுகாப்பான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

3. ஆஸ்துமா:


கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்ணுக்கு ஆஸ்துமா இருந்தால், அந்த மாத்திரைகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஆஸ்துமாவுக்கு ஸ்டீராய்டு மாத்திரைகளைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள். இவை குழந்தைக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றுக்குப் பதிலாக, இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது.

4. ரத்தசோகை:

உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ரத்தசோகை நோய் ஏற்படும். இந்தியப் பெண்களுக்கு இந்த நோயின் பாதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி பிரசவத்தில் சிக்கலை உண்டாக்கிவிடும். எனவே, ரத்தசோகையைப் போக்கும் இரும்புச் சத்து மருந்துகளை கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே  சாப்பிடத் தொடங்க வேண்டும்.

5. வலிப்பு நோய்:


பொதுவாக வலிப்பு நோயுள்ள பெண்களுக்குக் கருத்தரிப்பதிலும் பிரசவத்திலும் பிரச்னை ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்த பயம் தேவையில்லை. இன்றைய நவீன மருத்து வத்தில் வலிப்பு நோயுள்ள பெண்களும் கருவுற்று சுகப்பிரசவம் ஆகலாம். வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பல மாத்திரைகள் கருவில் வளரும் குழந்தையைப் பாதித்து, பிறவிக்குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியவையே. என்றாலும், மருத்துவரின் முன் ஆலோசனைப்படி கர்ப்பகாலத்தில் மட்டும் இரண்டு அல்லது மூன்று
மாத்திரைகளுக்குப் பதிலாக, ஒரே ஒரு மாத்திரை சாப்பிட்டுக்கொண்டால், இந்த ஆபத்துகளைத் தவிர்க்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வலிப்பு நோய் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது. பாதுகாப்பான மாத்திரை எது என்பதைத் தெரிந்து, அதைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுதான் முக்கியம்.

6. தைராய்டு பிரச்னை:

இன்றைய பெண்களிடம் அதிகம் காணப்படும் மற்றொரு பிரச்னை தைராய்டு குறைவாகச் சுரப்பது. இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தொடங்கி, கருத்தரிப்பது, கரு வளர்ச்சி அடைவது, பிரசவம் ஆவது வரை பல நிலைகளில் சிக்கல்கள் உண்டாகலாம். இவற்றைத் தவிர்க்க சில ரத்தப் பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே இதைத் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்.
 
7. மற்ற நோய்கள்:

தம்பதிகள் யாருக்கேனும் சிபிலிஸ், எய்ட்ஸ், ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணுக்கு இதயநோய், இதய வால்வு நோய், சிறுநீரக நோய், மற்ற ஹார்மோன் பிரச்னைகள் இருந்து மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம். அவற்றுக்கான தடுப்பு மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சிலர் குடல் வால் அழற்சி, குடலிறக்கம் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம். இவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, கருத்தரிப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு, பாதுகாப்பான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பல் ஆரோக்கியம் உட்பட பொது ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும்.

8. மன நோய்கள்

உடல் ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியாகவும் பிரச்னை இருந்தால், அதற்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

9. முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள் :

சில பெண்களுக்கு முந்தைய கருத்தரிப்பிலும் பிரசவத்திலும் ஏற்பட்ட பிரச்னைகள் மறுபடியும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவற்றை மருத்துவரிடம் மறைக்காமல் கூறிவிட வேண்டும். முக்கியமாக, கருக்கலைப்பு செய்திருந்தால், கருச்சிதைவு ஆகியிருந்தால், குறைப்பிரசவம் ஏற்பட்டிருந்தால், பெரிய தலையுடன், அதிக எடையுடன் குழந்தை பிறந்திருந்தால், உடற்குறைகளுடன் பிறந்திருந்தால், இறந்தே பிறந்திருந்தால், பிறந்தவுடன் இறந்திருந்தால் அதற்கான காரணத்தை முதலிலேயே கண்டுபிடித்து, இனி ஏற்படும் பிரசவத்தில் அந்தப் பிரச்னைகள் எழாமல் இருக்க மருத்துவர் வழி சொல்லுவார். ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது பழைய பிரச்னைகளை மருத்துவரே அறிந்திருப்பார்.

10. புகை, மது வேண்டாம்:


இந்தப் போதை பழக்கங்கள் இன்றைய பெண்களிடம் அதிகரித்து வருவதால், இந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. கணவரும் இப்பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.


abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
cialis online coupon ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
naltrexone for alcohol cravings link naltrexone pain management
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone naltrezone revia side effects
ldn online click altrexone
naltrexone where to buy link naltrexone drug interactions
revia medication partickcurlingclub.co.uk ldn colitis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்