கண்ணுக்கு பால்?
2015-08-11@ 15:44:54

நன்றி டாக்டர் குங்குமம்
கண்களில் தூசியோ எரிச்சலோ இருக்கும் போது கண்களில் தாய்ப்பால் விடும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இது சரியா?
கண் மருத்துவர் நிர்ஹா ராவ்...
இந்தப் பழக்கம் நகரங்களில் குறைந்து வருகிறது என்றாலும், சில கிராமங்களில் காண முடிகிறது. கிராமங்களில் வயல் வெளிகளில் வேலை செய்யும்போது அவசர மருந்தாக இதனை பயன்படுத்துவர். பெரும்பாலும் குழந்தைகளுக்கு கண்களில் தூசி படும்போதே இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். பெரியவர்களுக்கும் எப்போதாவது பயன்படுத்துவது உண்டு. ஆனால், இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். தாய்ப்பாலில் மருந்தின் மூலக்கூறுகள் எதுவுமில்லை.
கண்ணை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக் எதுவும் அதிலில்லை. தாய்ப்பால் சுரக்கும் முதல் சில மணி நேரங்களில் வரும் சீம்பாலில் கொஞ்சம் ஆன்டிபயாடிக் இருக்கும். அதுவும் கண்ணுக்கானது அல்ல. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதற்கானதே அது. தாய்ப்பால் விடுவது, சில நேரங்களில் கண்ணுக்குப் பாதிப்பைக்கூட ஏற்படுத்தி விடக்கூடும். தூசியினால் உறுத்தல் ஏற்படுகிறது என்று நினைத்திருப்பார்கள். அது வேறு ஒரு பிரச்னையாகக்கூட இருக்கக்கூடும். அதனால் கண்ணில் ஏதாவது உறுத்தல், எரிச்சல் போன்றவை இருந்தால் கண் மருத்துவரைப் பார்த்து, அவர் அறிவுறுத்தியபடி சொட்டு மருந்து விட வேண்டியது அவசியம்.
Tags:
Tuciyo ericcalo eyes when the eyes are still comes from the habit of breastfeeding. Is this right?மேலும் செய்திகள்
வலி நீக்கும் சிகிச்சை
புரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்
முதலுதவி செய்ய கற்றுக்கொள்!
அறை குளிரும்... கண் உலரும்...
முதல் உதவி அறிவோம்
பாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்!
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு