Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

பெண்களை புத்திசாலிகளாக்கும் 'உச்சகட்டம்'...!

மாற்றம் செய்த நேரம்:1/25/2013 4:36:36 PMLadies became inteligent at climax of sex


MORE VIDEOS

தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

ரத்த ஓட்டம் சீராகும்

செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

குணமடையும் இதயநோய்கள்

உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு  நன்மைகள் பல ஏற்படுகிறது.

உற்சாகம் அதிகரிக்கும்

எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் ஆர்கஸத்தின் போது உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் கோகெயின் எனப்படும் போதை மருந்துக்கு ஒப்பானது என்றும் அதை உட்கொள்வதால் ஏற்படும் பறத்தல் போன்ற உணர்வு ஆர்கஸம் மூலம் ஏற்படும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

நிம்மதியான உறக்கம்

உறவில் ஏற்படும் உச்சகட்ட நிலைக்குப் பிறகு உடலும் உள்ளமும் அமைதியடைந்து நிம்மதியான உறக்கம் வரும். தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.


மூளையின் ஆரோக்கியம்

ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வலி நிவாரணி

உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணியாக செக்ஸ் இருக்கிறது. ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். ஆர்கஸத்தின் போது வெளிப்படும் ஹார்மோன்கள் சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் மருந்தாக செயல்படுகிறது

Ladies became inteligent at climax of sex
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

அம்மா பிறந்த ஊரிலிருந்து வருடந்தோறும் தவறாமல் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்வது வழக்கம். பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்புதல்,  தங்குதல், உணவு உட்பட சகல தேவைகளையும் சரியான முறையில் ...

மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். ஆங்கில எழுத்தாளர்... தத்துவவியலாளர்... கல்வியாளர்... பெண்ணுரிமைப் போராளி!1759 ஏப்ரல் 27... லண்டனில் பிறந்தார் மேரி உல்ஸ்டோன்கிராஃப்ட். எட்வர்ட் ஜான் உல்ஸ்டோன்கிராஃப்ட், எலிசபெத் டிக்ஸன் ...

Advertisement

சற்று முன்

Advertisement

சமையல்


சமையல்

எப்படிச் செய்வது? வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, வெண்டைக்காய்களை 2 நிமிடங்கள் வதக்கவும். லேசாக வெந்ததும், அதில் ...

எப்படிச் செய்வது? வீட்டில் தயார் செய்த பனீரை, (ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சும்போது 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறை ஊற்றினால் பால் திரிந்து கட்டியாகும். இதை ஒரு ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

24

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
உதவி
நாவடக்கம்
நோய்
செல்வாக்கு
பாராட்டு
தெளிவு
சலனம்
சந்தோஷம்
கம்பீரம்
வெற்றி
நன்மை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran